முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / முன் பின் தெரியாத நபருடன் செக்ஸ் சாட் செய்வது பாதுகாப்பானதா..? உளவியல் நிபுணரின் பதில்..!

முன் பின் தெரியாத நபருடன் செக்ஸ் சாட் செய்வது பாதுகாப்பானதா..? உளவியல் நிபுணரின் பதில்..!

 செக்ஸ் சாட்

செக்ஸ் சாட்

நம் சமூகத்தின் விதிமுறைகளைப் புரட்டிப்பார்த்தால் செக்ஸ்டிங் என்பது நம் துணையுடன் மட்டும்தான் செய்ய வேண்டும் என்று சொல்கிறது. உங்களுக்கு அது சரி என தெரிந்தால் இப்படி தெரியாத நபருடன் செக்ஸ்டிங் செய்வது தவறில்லை.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கேள்வி :

தெரியாத நபர்களுடன் செக்ஸ் சாட் செய்த பிறகு நான் மிகவும் குற்ற உணர்ச்சிக்கு உள்ளாகிறேன். இது சாதாரண விஷயமா அல்லது நான் ஏதேனும் தவறு செய்கிறேனா..?

பதில் :

குற்ற உணர்ச்சி என்பது சிரிப்பு, கோபம், அழுகை, சோகம் போன்ற மற்ற உணர்ச்சிகளைப் போல் சாதாரண விஷயமல்ல. அது மனித உணர்ச்சிக்கு மிகவும் நெருக்கமானது. நம்மை சுற்றியுள்ள சமூகக் கண்ணோட்டத்தில் பார்வையிலிருந்து குற்ற உணர்ச்சி எழுகிறது. நீங்கள் உங்கள் துணையை ஏமாற்றுகிறீர்கள் , அதனால் குற்ற உணர்ச்சிக்கு உள்ளாகிறீர்கள் எனில் அது உங்களை சுற்றியுள்ள சமூகம் கற்றுக்கொடுத்த விஷயத்திலிருந்துதான் எழுகிறது. அதை நீங்களும் நம்புகிறீர்கள்.

எங்கிருந்து, எதனால் உங்களுக்கு குற்ற உணர்ச்சி எழுகிறது. உங்களுடைய ஒட்டுமொத்த செக்ஸ் ஆசைகளை தெரியாத நபர்களிடம் பகிர்ந்துகொள்வதாலா..? அவர் அவற்றை பொதுவெளியில் பகிர்ந்துவிடுவாரோ என்ற பயமா..? அல்லது இப்படி தெரியாத நபர்களிடம் உங்கள் செக்ஸ் ஆசைக் குறித்து பேசுவதும், பகிர்ந்துகொள்வதும் மிகப்பெரும் தவறான விஷயம் என நினைக்கும் உங்கள் எண்ணமா..? உங்களுக்கு தெரியாத நபரிடம் செக்ஸ் சாட் வைத்துக்கொள்வதை அழுத்தமாக உணர்கிறீர்களா..? இல்லை இதை ஒரு கேளிக்கை, பொழுதுபோக்கு விஷயமாக செய்கிறீர்களா..?

செக்ஸ் சாட் என்பது என்னைப் பொருத்துவரை பாதுகாப்பான ஒரு விஷயமாகப் பார்க்கிறேன். இன்றைய டேட்டிங் காலகட்டத்தில் செக்ஸ்டிங் செய்துகொள்வது சாதாரண விஷயமாகிவிட்டது. இன்றைய உலகில் தனிமை என்பது அதிகரித்துவிட்டது. அவர்களுக்கு இதுபோன்ற செக்ஸ்டிங் விஷயங்கள்தான் பாலியல் ஆசையை தீர்த்துக்கொள்ளும் களமாகவும் இருக்கிறது.

செக்ஸ்டிங் செய்துகொள்ளும்போது நீங்கள் எந்த பாலினத்தின் மீது ஆசை வைத்துள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும். உங்களின் செக்ஸ் ஆசைகள் என்ன, செக்ஸ் தேவைகள் என்ன எந்த மாதிரியான செக்ஸ் முயற்சிகளை விரும்புகிறீர்கள், செக்ஸ் உங்கள் வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியம் போன்ற பல விஷயங்களை தெரிந்துகொள்ளலாம். உங்களைப் பற்றி உங்களுக்கே ஒரு புரிதலை உண்டாக்குவதுதான் இந்த செக்ஸ்டிங். இது ஆரோக்கியமான செக்ஸுக்கு வழிவகுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read : அன்பும்.. கனிவும்.. ஆண்களிடம் பெண்கள் கவனிக்கும் முக்கிய விஷயங்கள்...!

ஆனால் நம் சமூகத்தின் விதிமுறைகளைப் புரட்டிப்பார்த்தால் செக்ஸ்டிங் என்பது நம் துணையுடன் மட்டும்தான் செய்ய வேண்டும் என்று சொல்கிறது. உங்களுக்கு அது சரி என தெரிந்தால் இப்படி தெரியாத நபருடன் செக்ஸ்டிங் செய்வது தவறில்லை.

நீங்கள் சிங்கிளாக இருக்கிறீர்கள் அல்லது உறவில் இருக்கிறீர்கள் என்றாலும் செக்ஸ் மிகவும் அவசியம். நீங்கள் ஒரு உறவில் நுழைய எதிர்பார்த்துக்கொண்டிருக்கலாம் , இன்னும் நீங்கள் எதிர்பார்க்கும் சரியான நபரை பார்க்காமல் இருக்கலாம், குறிப்பிட்ட சில விஷயங்களை எதிர்பார்த்து நபரை தேர்வு செய்ய காத்திருக்கலாம் அல்லது உங்கள் செக்ஸ் தேவையை பூர்த்தி செய்வதற்கான சுதந்திரமோ அல்லது தைரியமோ உங்களுக்கு இல்லாமல் இருக்கலாம் அல்லது உங்களுக்கு இருக்கும் செக்ஸ் ஆசைகளை கட்டுப்படுத்த முடியாமல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடலாம். எதுவாக இருப்பினும் ஏதோ ஒரு தேவைக்காகதான் நீங்கள் செக்ஸ்டிங்கில் ஈடுபடுகிறீர்கள்.

உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் குற்ற உணர்ச்சிக்கு நீங்கள் பிறந்த சமூகம்தான் காரணம். நம் சமூகம் மற்றும் கலாச்சாரம் இதுபோன்ற வெளிப்படையான செக்ஸ் உரையாடல்களை ஆதரிக்காது. குறிப்பாக பெண்களுக்கும் இதுபோன்ற ஆசைகள் இருக்கும் என்பதை புரிந்துகொள்ளாத சமூகம் இது. இதுபோன்ற சூழலில்தான் செக்ஸ்டிங் ஒரு வகையான பாலியல் நிறுவனமாக மாறுகிறது. பாலியல் மற்றும் பாலியல் ஆசைகளை நோக்கி இன்னும் திறந்த, உகந்த மற்றும் சகிப்புத்தன்மையுள்ள சமூகத்தைக் காண நமக்கான களமாக இருக்கிறது.

top videos

    எதுவாக இருந்தாலும் செக்ஸ்டிங் என்பது பயிற்சிக்கான களமாகவே காண்கிறேன். ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்..செக்ஸ்டிங்கில் உரையாடல்கள் பாதுகாப்பனது. ஆனால் நிர்வாண புகைப்படங்களை தெரியாத நபர்களிடம் பகிர்வது சபைர் குற்றங்களுக்கு உள்ளாக நேரிடும். பாலியல் தொந்தரவுகள், பிளாக்மெயில் செய்வது போன்ற பிரச்னைகளுக்கும் வழிவகுக்கும். எனவே அவர்கள் எவ்வளவு கேட்டாலும் சரி, தினமும் பேசும் நபராக இருந்தாலும் சரி முன்பின் தெரியாத நபர்களிடம் எந்த காரணத்திற்காகவும் உங்கள் புகைப்படங்களையோ, தனிப்பட்ட விஷயங்களையோ பகிராதீர்கள்..!

    First published:

    Tags: Sex, Sex tips, Sexting, Sexual Wellness