முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / இன்டர்கோர்ஸ் மட்டும் போதாது.. பாலியல் உறவை மேம்படுத்தும் அவுட்டர்கோர்ஸ் பற்றியும் தெரிந்துக்கொள்ளுங்கள்.!

இன்டர்கோர்ஸ் மட்டும் போதாது.. பாலியல் உறவை மேம்படுத்தும் அவுட்டர்கோர்ஸ் பற்றியும் தெரிந்துக்கொள்ளுங்கள்.!

சரி, ஃபோர்பிளே என்பது உடலுறவுக்கு முந்தைய, முன்விளையாட்டு ஆகும்.  எனவே, ஃபோர்பிளேவுக்கு பிறகு, பாலியல் உறவு, உடலுறவுக்கு வாய்ப்பு உள்ளது.

சரி, ஃபோர்பிளே என்பது உடலுறவுக்கு முந்தைய, முன்விளையாட்டு ஆகும்.  எனவே, ஃபோர்பிளேவுக்கு பிறகு, பாலியல் உறவு, உடலுறவுக்கு வாய்ப்பு உள்ளது.

சரி, ஃபோர்பிளே என்பது உடலுறவுக்கு முந்தைய, முன்விளையாட்டு ஆகும்.  எனவே, ஃபோர்பிளேவுக்கு பிறகு, பாலியல் உறவு, உடலுறவுக்கு வாய்ப்பு உள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பாலியல் உறவு என்று வரும்போது பல வகைகள் உள்ளன. இது பொதுவானது, penetrative sex என்று கூறப்படும் உடலுறவு / இன்டர்கோர்ஸ். ஆனால், பாலியல் உறவு திருப்தியாக இருக்க, இன்டர்கோர்ஸ் மட்டும் போதாது, அதற்கு எதிர்மாறான அவுட்டர்கோர்ஸ் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். ஃபோர்பிளே போல, அவுட்டர்கோர்ஸ் மிகவும் ரிலாக்சான, மென்மையான அனுபவமாக இருக்கும். மேலும், இது பாரம்பரியமான பாலியல் உறவு கொள்ளும் முறை இல்லை என்பதால், திட்டமிடாத கர்ப்பம், பாலியல் நோய்கள் உள்ளிட்டவற்றை தவிர்க்கலாம்.

அவுட்டர்கோர்ஸ் vs ஃபோர்பிளே – இரண்டுக்கும் உள்ள வித்தியாசம்

சரி, ஃபோர்பிளே என்பது உடலுறவுக்கு முந்தைய, முன்விளையாட்டு ஆகும். எனவே, ஃபோர்பிளேவுக்கு பிறகு, பாலியல் உறவு, உடலுறவுக்கு வாய்ப்பு உள்ளது. அதாவது, பாலியல் உறவு ஆரோக்கியமாக, ஆண் பெண் இருவருக்கும் திருப்தியான உறவாக அமைய முன்விளையாட்டுக்கள் அவசியம். ஆனால், அவுட்டர்கோர்ஸ் என்பதில் penetrative sex என்ற நிலை இல்லை. பாலியல் முன்விளையாட்டுக்கள் போல இருந்தாலுமே, இது ஆர்கசம் அடைய உதவும்.

அவுட்டர்கோர்ஸில் என்னென்ன செயல்பாடுகள் உள்ளன?

Penetrative sex இல்லாத எல்லா பாலியல் செயல்பாடுகளுமே இதில் அடங்கும். உதாரணமாக, முத்தமிடுவது, மசாஜ், செக்ஸ் டாய்ஸ் பயன்பாடு, ஸ்டிமுலேஷன், ஓரல் செக்ஸ், போன்றவற்றைக் கூறலாம்.

இந்த பாலியல் செயல்பாடுகள் எவ்வாறு சிறந்தது?

பாலியல் உறவில் பல விதமான ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன. ஒரு சிலருக்கு, உடலுறவு மேற்கொள்ளும் போது வலி, அசௌகரியம் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும்.

சில பெண்களுக்கு இது ஒரு குறைபாடாகவே உள்ளது. அத்தகைய சூழலில், penetrative செக்ஸின் போது, உடல் தசைகள் இறுகி உடலுறவு வலி நிறைந்ததாக இருக்கும். அதே போல, சில ஆண்களுக்கு விரைப்புத்தன்மை குறைபாடு, அல்லது விந்து முந்துவது போன்ற சில குறைபாடுகளால் தனது மனைவியை பாலியல் ரீதியாக திருப்தி அடைய வைக்க முடியாத சூழல் ஏற்படலாம். எனவே, அத்தகைய சூழல்களில், ஆண் பெண் இருவருமே அவுட்டர்கோர்ஸ் என்று கூறப்படும் பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடலாம். திட்டமிடாத கர்ப்பம் என்பது இதில் எளிதாக தவிர்க்க முடியும்.

Also Read | இந்த பழக்கத்தை கைவிட்டாலே போதும்.! உங்கள் செக்ஸ் வாழ்க்கை ஓஹோன்னு இருக்கும்..

அவுட்டர்கோர்ஸ் என்று கூறப்படும் பாலியல் செயல்பாடுகளில் உள்ள ஆபத்துக்கள்

  • பாலியல் உறவில் ஒரு சில செயல்பாடுகள் சில ஆபத்துக்களுடன் தொடர்புடையவை. உடல் ரீதியான ஊடுருவல் இல்லாததால், பால்வினை நோய்கள், வைரல் தொற்றுக்கள் போன்றவற்றின் ஆபத்துக்கள் மிகவும் குறைவு. ஆனால், சுத்தம் மற்றும் சுகாதாரம் முழுமையாக பின்பற்றப்படாவிட்டால், சரும பாதிப்புகள் ஏற்படும்.
  • மேலும், ஓரல் செக்சில் ஈடுபடும் போது, பாலியல் நோய்த்தொற்று ஆபத்து உள்ளது. எனவே, அந்தரங்க உறுப்புகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  • உடலுறவுக்கு முன்னும் பின்னும் எப்போதும் உடலை சுத்தம் செய்ய வேண்டும். நீங்கள் செக்ஸ் பொம்மைகளைப் பயன்படுத்தினால், அவற்றைப் பயன்படுத்துவதற்கு முன்பும், பின்பும் அவற்றையும் சுத்தம் செய்ய வேண்டும்.

First published:

Tags: Sex, Sex tips