முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / ஒருவர் தன்னுடைய பிரச்சனையை பகிர்ந்துகொள்ளும்போது நீங்கள் எப்படி ஆறுதலாக இருக்க வேண்டும்..?

ஒருவர் தன்னுடைய பிரச்சனையை பகிர்ந்துகொள்ளும்போது நீங்கள் எப்படி ஆறுதலாக இருக்க வேண்டும்..?

ஆறுதல்

ஆறுதல்

உங்களை நம்பிக்கையானவர் என நினைத்து உங்களது நண்பர்களோ? அல்லது உறவினர்களோ? உங்களிடம், அவர்களின் வாழ்க்கையில் நடந்த அதிர்ச்சிக்குள்ளான விஷயங்களைப் பகிர்ந்துக் கொள்வார்கள். இந்த நேரத்தில் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது என்பது குறித்து முழு விபரம் இங்கே…

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Tamil Nadu, India

இன்றைக்கு ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி என்பது எந்தளவிற்கு உள்ளதோ? அந்தளவிற்கு பல துயரங்களையும் அவர்கள் சந்தித்துவருகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக விபத்து, பாலியல் வன்கொடுமை, இயற்கை பேரழிவு போன்ற பல காரணங்களால் சிலர் அனுபவிக்கும் துயரங்களையெல்லாம் வார்த்தைகளால் சொல்ல முடியாது. இது அவர்களின் வாழ்க்கையில் உணர்ச்சிகரமான எதிர்வினையாகவே இருப்பதோடு அவர்களது வாழ்க்கையில் மறக்க முடியாத அதிர்ச்சிக்கரமான நிகழ்வுகளாகவே இருக்கும். இதைத் தான் ஆங்கிலத்தில் Trauma என்கிறோம்.

இதுப்போன்ற சூழலில் அவர்கள் யாரிடமும் எதையும் சொல்ல முடியாமல் மனதிற்கு உள்ளேயே வைத்திருக்கும் போது தான் அவர்களின் மனநிலையும் சரியாகும். ஆனால் யாரிடமும் நாம் நடந்த துயர சம்பவங்களை மனம் விட்டு பகிர்ந்துவிடமுடியாது. நம்பிக்கையான ஒருவரிடம் மட்டும் தான் பகிர்ந்துக்கொள்ள முடியும். ஒருவேளை உங்களை நம்பிக்கையானவர் என நினைத்து உங்களது நண்பர்களோ? அல்லது உறவினர்களோ? உங்களிடம், அவர்களின் வாழ்க்கையில் நடந்த அதிர்ச்சிக்குள்ளான விஷயங்களைப் பகிர்ந்துக் கொள்வார்கள். இந்த நேரத்தில் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது என்பது குறித்து முழு விபரம் இங்கே…

செய்ய வேண்டியவை:

  • ஒருவர் உங்கள் மனதில் உள்ள துயர சம்பவங்களைப் பகிர்ந்துக் கொள்கிறார்கள் என்றால், நீங்கள் அவர்கள் சொல்வதற்கு அவசரமாகப் பதிலளிப்பதை விட அவர்கள் எப்படி உணர்கிறார்கள்? என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். பல பிரச்சனைகளில் சிக்கி வாழ்க்கையில் பல துயரங்களை அடைந்தவர்களுக்கு அவர்கள் சொல்வதை அதிகமாகக் கேட்க யாராவது தேவைப்படுகிறார்கள்.
  • எதையும் பதட்டத்துடன், விரைவாக பேசமாமல், எப்போதும் போல நிதானமாக பேச வேண்டும்.
  • நம்பிக்கையுடன் உங்கள் மனதில் உள்ள இருண்ட பக்கங்களைப் பகிர்ந்துக் கொண்டதற்கு நீங்கள் நன்றி தெரிவிப்பதோடு, உங்களுக்கு துணையாக இருப்போம் என்ற உணர்வை ஏற்படுத்துங்கள். இது நீண்ட கால நட்பை வளர்க்க உதவியாக இருக்கும்.
  • அவர்களின் எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் கருத்துக்களை தொடர்ந்து உறுதிப்படுத்துவது முக்கியம்.
  • இவர்கள் சொல்லும் சில பிரச்சனைக்கு என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பதை யோசிப்பதை விட, அவர்கள் எவ்வாறு குணமடைய உதவலாம் என்று அவர்களிடம் கேட்க வேண்டும்.

Also Read | போல்டான பெண்களிடம் இருக்கும் குணங்கள்.. உங்களிடம் இதெல்லாம் இருக்கா..?

செய்யக்கூடாதவை:

  • குற்றவாளியையும் சூழ்நிலையையும் மன்னிக்க அவர்களை அவசரப்படுத்தாதீர்கள். இந்த சூழலில் அவர்களால் நிதானமாக முடிவு எடுக்க முடியாது.
  • பிரச்சனை நடந்துவிட்டது என்று சொன்னால், நீங்கள் தான் தவறு செய்திருப்பீர்கள் என்று சொல்ல வேண்டாம். இதனால் அவர்கள் மனரீதியாக பல பிரச்சனைகளை மீண்டும் எதிர்க்கொள்ள நேரிடும்.
  • ஒருவேளை குழந்தைகளுக்கு எதுவும் பிரச்சனை செய்தவராக இருந்தால், அவர்களை ஒருபோதும் மன்னிக்கவும், அனுதாபப்படவும் நாம் கட்டாயப்படுத்தக் கூடாது.
  • சில விஷயங்கள் ஒரு நம்பிக்கையான பார்வையில் பார்க்க வடிவமைக்கப்படவில்லை என்பதால், அவர்களின் சோகத்தின் நேர்மறையான அம்சங்களைப் பார்க்க மக்களை நாம் கட்டாயப்படுத்தக் கூடாது.
top videos

    First published:

    Tags: Mental Health, Mental Stress