குழந்தை வளர்ப்பு ஒரு கலை. இன்றைய கால கட்டத்தில் தன் குழந்தை எல்லாவற்றிலுமே சிறந்து விளங்க வேண்டும் என்பது பெற்றோரின் ஆசையாக இருக்கிறது. அதேபோல கேட்டதெல்லாம் கிடைக்க வேண்டும், விரும்பியதெல்லாம் நடக்க வேண்டும் என்பது பல குழந்தைகள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். குழந்தை வளர்ப்பைப் பொறுத்த வரை குழந்தைகள் என்ன கேட்டாலும் Yes என்று சொல்லும் பெற்றோர் மற்றும் எது கேட்டாலும் இல்லை என்று சொல்லும் பெற்றோர் என்று இரண்டு வகையாக இருக்கின்றனர்.
ஆம் என்று சொல்வது இல்லை என்று சொல்வது குழந்தையிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி சமீபத்தில் பாலிவுட் நடிகை மற்றும் இந்திய கிரிக்கெட்டர் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா ஷர்மாவும் எல்லாவற்றுக்கும் YES அல்லது NO என்று சொல்லி வளர்க்கும் பெற்றோர்கள் பற்றியும், அப்படி சொல்வது எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை பற்றியும் விளக்கியுள்ளார்.
நடிகை அனுஷ்கா ஷர்மாவின் கேள்வி:
ஒரு நாளைக்கு எத்தனை முறை பெற்றோர்கள் குழந்தைக்கு NO சொல்வார்கள், அதாவது குழந்தை கேட்பதை மறுப்பார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன் என்று அனுஷ்கா ஷர்மா தனது இன்ஸ்டா கணக்கில் கேள்வி எழுப்பியிருந்தார். பாலிவுட் நடிகையான சோனம் கபூர், தான் ஒரு YES அம்மாவாக இருக்க விரும்பவதாக கூறியுள்ளார்.குழந்தைகள் கேட்கும் எல்லாவற்றுக்கும் ஒன்று சரி என்று சொல்வது அல்லது இல்லை / முடியாது என்று சொல்வது தவறானது.
also read : சைவ உணவுகளை மட்டும் உட்கொள்ளும் குழந்தைகளுக்கு இப்படியொரு சிக்கலா?
NO என்று கூறி மறுக்கும் வளர்ப்பு முறை:
ஒரு குழந்தை எதையாவது கேட்கும் பொழுது அதை மறுப்பதற்கு பெற்றோர்களுக்கு பல்வேறு காரணங்கள் உண்டு. ஆனால் பெரும்பாலான நேரங்களில் குழந்தைக்கு நோ என்று சொல்லி மறுக்கும் பொழுது பெற்றோர்கள் ஒரு விதமான பயம் படபடப்பு அல்லது மிகவும் கடினமாக தான் குழந்தை கேட்கும் பொருளை மறுக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.
உதாரணமாக,
‘அம்மா நான் சாக்லேட் சாப்பிடலாமா’ என்று குழந்தை கேட்டால்
இல்லை சாப்பிடக்கூடாது என்ற பதில் கிடைக்கும்.
‘எனக்கு ஒரு புது பொம்மை வாங்கி தருகிறீர்களா’
‘இல்லை’ என்ற பதில் வரும்.
‘நான் வெளியில் போய் விளையாடலாமா’
‘இல்லை. விளையாடக்கூடாது’ என்பது பதிலாகும்.
இவ்வகையான கேள்விகளுக்கு பெற்றோர்களோ NO என்று சொல்லி மறப்பது குழந்தைக்கு சரியான புரிதலை ஏற்படுத்தாது. அல்லது நீங்கள் ஏன் மறுக்கிறீர்கள் என்பதில் எந்த விளக்கமும் இல்லை. எனவே நீங்கள் ஏன் மறுக்கிறீர்கள் என்பதை சுற்றி குழந்தை பல்வேறு கேள்விகளை உங்களிடம் கேட்கும்
காக்னிட்டிவ் டெவலப்மெண்ட் என்று கூறப்படும் முழு உடல் மற்றும் மூளைரீதியான வளர்ச்சிக்கு குழந்தைகள் பல்வேறு கேள்விகளை கேட்பது தான் முக்கிய பங்கு வகிக்கிறது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. குழந்தை ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் முனைப்பும் இருந்தால்தான் அதை பற்றிய கேள்விகளை கேட்க துவங்கும்.
கேள்விகள் கேட்பதன் மூலம் அவர்களுக்கு தேவையான தகவல் கிடைக்கும், சரியான புரிதல் ஏற்படும். இதனால் பல விஷயங்களைத் தெரிந்து கொள்ள உதவும். கேள்வி கேட்பது என்பது மிகவும் முக்கியமான திறனாகும். கேள்வி கேட்டு வளரும் குழந்தைகள் எதிர்காலத்தில் உலகத்தை பற்றி எளிதாக தெரிந்து கொள்வார்கள். அது மட்டுமின்றி பிரச்சனைகளைத் தீர்ப்பதில் சிறந்தவர்களாக விளங்குவார்கள். எனவே எந்த விளக்கமும் இல்லாமல் நீங்கள் குழந்தை கேட்பதை மறுப்பது அவர்களுடைய ஆர்வத்தை பாதிக்கும்.
Also read : அன்னையர் தின ஸ்பெஷல் :உங்கள் அம்மாவை ஸ்பெஷலாக உணர வைக்க என்னென்ன சமைக்கலாம்?
YES என்று கூறும் வளர்ப்பு முறை:
குழந்தைகள் கேட்கும் எல்லாவற்றுக்கும் ஆமாம் சரி என்று உடன்படுவதும் சரியானதல்ல. சாக்லேட் சாப்பிடலாமா,வெளியில் சென்று விளையாடலாமா என்று குழந்தைகள் ஒரு சில விஷயங்களை கேட்பதற்கு நீங்கள் ஆம் என்று சொல்லிவிட்டால் குழந்தைகள் உடனே செய்து விடும்.
என்ன கேட்டாலும் நீங்கள் சரி என்று சொல்லி விடுவீர்கள் என்று அவர்கள் மனதில் பதிந்து விடுவதால்,வளர வளர பெரிய விஷயங்களுக்கு கூட நீங்கள் எளிதாக சம்மதம் சொல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வந்துவிடும்.அது மட்டுமின்றி அவர்களுக்கு என்றும் பொறுப்பும் கடமையும் இல்லாமல் போகும்.எனவே நீங்கள் ஆம் என்று சொல்லும்பொழுது அதற்குரிய காரணத்தையும் விளக்க வேண்டும்.
Also read : கர்ப்பிணிகள் கவனத்திற்கு! கர்ப்பம் முதல் பிரசவம் வரை உதவி அளிக்கும் டூலா முறை பற்றி தெரியுமா?
சாக்லேட் சாப்பிடலாம்,ஆனால் ஒரே ஒரு சாக்லேட் அல்லது இரண்டு துண்டுகள் மட்டும் தான் சாப்பிட வேண்டும் என்று கூடுதலாக அவர்களுக்கு சொல்ல வேண்டும். பொம்மை வாங்கி தருகிறேன், இப்போது இருக்கும் பொம்மைகளை அடுக்கிவை அதற்கு பிறகு வாங்கலாம் என்று அவர்களுக்கு கூறலாம்.கேட்ட உடனேயே எல்லாம் கிடைத்து விடும் என்ற ஒரு எண்ணம் மட்டும் குழந்தைகளின் மனதில் பெற்றோர்கள் வரவழைக்ககூடாது.
எல்லாவற்றுக்கும் ஆம் என்று சொல்வதால் குழந்தைகள் நல்ல மாதிரியாக வளர மாட்டார்கள். அதேபோல எல்லாவற்றுக்கும் இல்லை என்று மறுப்பதும் அவர்களுக்கு ஒருவிதமான வெறுமையை உண்டாக்கி விடும். ஆனால் இல்லை என்று சொல்வது அவர்களை கொஞ்சம் பொறுப்பாக மாற்றும். எனவே நீங்கள் ஆம் என்று சொன்னாலும் இல்லை என்று சொன்னாலுமே அதற்குரிய காரணத்தை அவர்களுக்கு விளக்கி சொல்லவேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Parenting, Parenting Tips, Teenage parenting