புதிய பெற்றோர்கள் பல சவால்களை சந்திக்கின்றனர். பிறந்த குழந்தையை எப்படி தூக்குவது, படுக்கவைப்பது, உணவளிப்பது என அனைத்தும் புதிதாக குழந்தை பெற்ற பெற்றோர்களுக்கு சவாலான விஷயங்களில் ஒன்று. எனவேதான், குழந்தைகள் குறித்த ஒவ்வொரு விஷயத்தையும் அவர்கள் பார்த்து பார்த்து முழு கவனத்துடன் செய்கிறார்கள்.
பிறந்த குழந்தைக்கு சீரான இடைவெளியில் உணவளிக்க வேண்டியது அவசியம் என நாம் அனைவருக்கும் தெரியும். ஆனால், அளவுக்கு அதிகமாக குழந்தைக்கு உணவளிப்பது பல்வேறு உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பது பலருக்கும் தெரியாது. எனவே, குழந்தைகளுக்கு தேவையான அளவை விட அதிகமாக உணவளிக்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
சில சமயங்களில் குழந்தையின் தேவையை பெற்றோர்கள் சரியாக புரிந்து கொள்ளாததால், இந்த தவறு ஏற்படும். குழந்தை அழுதால் அதற்கு பசி மட்டும் காரணமாக இருக்காது, வாயு தொல்லை அல்லது வலிகள் கூட காரணமாக இருக்கலாம். அந்தவகையில், உங்கள் குழந்தைக்கு நீங்கள் அளவுக்கு அதிகமாக உணவளிக்கிறீர்கள் என்பதற்கான சில அறிகுறிகள் பற்றி நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம்.
உங்கள் குழந்தைக்கு அதிகமான உணவு கொடுக்கிறீர்கள் என்பதற்கான அறிகுறிகள் :
உங்கள் குழந்தைகளிடம் இந்த சமிக்ஞைகள் தென்பட்டால், உங்கள் குழந்தைகளுக்கு அதிகமாக உணவளிக்கிறீர்கள் என்று அர்த்தம் :
திடீர் என எடை அதிகரிப்பு : உங்கள் குழந்தை வழக்கத்திற்கு மாறாக குறைந்த காலத்திற்குள் எடை அதிகரித்ததை போல நீங்கள் உணர்ந்தால், அது உங்கள் குழந்தைக்கு அதிகமாக உணவு வழங்கப்படுகிறது என்பதற்கான அறிகுறி.
அடிக்கடி சிறுநீர் கழித்தல் : குழந்தை வழக்கத்தை விட அதிகமாக சிறுநீர் கழித்தால், அதிகமாக பால் அருந்துகிறது என அர்த்தம்.
உங்கள் குழந்தைக்கு அடிக்கடி செரிமான பிரச்சனை (bowel movements) ஏற்பட்டால், அதிக அளவில் பால் கொடுக்கிறீர்கள் என அர்த்தம். சில சமயங்களில் செரிமான பிரச்சனைகள் கூட ஏற்படலாம்.
Also Read | கோடை வெப்பத்தினால் ஆண்களுக்கு விந்தணுக்கள் குறைபாடு ஏற்படுமா?
நீங்கள் குழந்தைக்கு உணவளிக்க முயற்சிக்கும் போது, உங்கள் குழ்ந்தை பால் குடிக்க மறுத்தால் வயிறு நிரம்பியிருப்பதைக் குறிக்கிறது.
அதே போல, குழந்தைகள் பால் குடிக்கும் போது அழுவதும் அதிக உணவு உண்டதன் அறிகுறியாகும்.
பால் குடிக்கும் போது குழந்தை வாயிலிருந்து பாலை கக்கினால், அதிக அளவு பால் அருந்தியுள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
குழந்தை பால் குடிக்க மறுத்தால் அதிக பால் குடித்திருக்கிறது அல்லது வயிறு நிரம்பி விட்டது என்பதன் அறிகுறியாகும்.
குழந்தைக்கு ஏன் அதிகமாக உணவு கொடுக்கக்கூடாது?
புதிய பெற்றோர்கள் தனது குழந்தைகள் பசியுடன் இருக்கக்கூடாது என்பதற்காக, தேவைக்கு அதிகமாக உணவளித்துக்கொண்டே இருப்பார்கள். இப்படி செய்வது குழந்தைக்கு எந்த நன்மையையும் வழங்காது. ஆனால், சில உடல் உபாதைகளை ஏற்படுத்தும்.
குழந்தைகளுக்கு அதிகமாக உணவளிப்பதால் ஏற்படும் விளைவுகள் பற்றி இங்கே பார்க்கலாம் :
புட்டிப்பால் குடிக்கும் குழந்தைகள் பால் குடிக்கும் போது சில நேரங்களில் அதிக காற்றை விழுங்குவார்கள். இதனால் குழந்தைக்கு வாயுத்தொல்லை ஏற்படும்.
பாலை அதிகப்படியாக உட்கொள்வதால், குழந்தைகளுக்கு வாயு தொல்லை அல்லது வயிற்று வலியை ஏற்படுத்தும்.
அதிகப்படியான பால் உட்கொள்வதால், குழந்தைக்கு அடிக்கடி குமட்டல் ஏற்படும். சரியாக செரிமானம் ஆகாததால் பலவீனமாக உணர்வார்கள். அதுமட்டும் அல்ல அழவும் துவங்குவார்கள்.
அதிகப்படியான உணவு குழந்தைகளின் எடை அதிகரிப்பை ஏற்படுத்தும். இது பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
பெற்றோருக்கான சில முக்கிய உதவிக்குறிப்புகள் :
குழந்தைகளுக்கு அதிகப்படியான உணவு கொடுப்பதைத் தவிர்க்க பெற்றோர்களுக்கான சில உதவி குறிப்புகள் இங்கே :
குழந்தைகளுக்கு உணவளிக்கும் நேரத்தை நிர்ணயிக்கவும். ஒவ்வொரு 2-3 மணி நேரத்திற்கும் ஒரு டைமரை அமைப்பது நல்லது அல்லது குழந்தை மருத்துவர்களின் பரிந்துரைத்தபடி குழந்தைகளுக்கு உணவளிக்கவும். அதோடு, குழந்தைக்கு கொடுக்கப்படும் பாலின் அளவையும் நிர்ணயம் செய்யுங்கள்.
உங்கள் குழந்தை நீங்கள் கொடுக்கும் உணவையோ அல்லது பாலையோ குடிக்கவில்லை அல்லது நிராகரிக்கிறது என்றால், கட்டாயப்படுத்தி உணவளிக்க வேண்டாம்.
Also Read | கர்ப்ப காலத்தில் கண்டிப்பாக வாக்கிங் போகணும்... ஏன் தெரியுமா?
எப்போதும் குழந்தைக்கு வலுக்கட்டாயமாக உணவளிக்க வேண்டாம். குழந்தை போதுமான பால் குடிக்கவில்லை என்றால், அருகில் உள்ள குழந்தைகள் நல மருத்துவரை அணுகவும். வேறு ஏதாவது பிரச்சனைகள் இருக்கலாம்.
குழந்தைகளுக்கு உணவளிக்க பெரிய அளவிலான பால் பாட்டிலைப் பயன்படுத்த வேண்டாம். அதிக உணவைத் தடுக்க சிறிய அல்லது நடுத்தர அளவிலான பாட்டிலைப் பயன்படுத்தவும்.
அதிகப்படியான உணவளிப்பது பெரும்பாலான பெற்றோர்கள் இயல்பாக சந்திக்கும் ஒரு பிரச்சனை. உங்கள் குழந்தையின் தேவையைப் புரிந்துகொண்டு பிறகு உணவளிப்பது முக்கியம். ஒவ்வொரு குழந்தைக்கும் வெவ்வேறு தேவைகள் உள்ளன. எனவே, குழந்தைகளின் தேவைக்கு ஏற்றார் போல பால் அல்லது உணவளிப்பது நல்லது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Brestfeeding, Parenting