கோடைக்காலமாகவே இருந்தாலும் சிலருக்கு அந்த பருவநிலையை ஏற்றுக்கொள்ளும் வரை உடல் நலத் தொந்தரவுகள் இருக்கும். ஆனால் தற்போது வெயில், மழை , புயல் என அனைத்து வானிலை நிலைகளும் மாறி மாறி வருவது வைரஸ் தொற்றுகளை கிளப்பி விடலாம். உடலும் அதை ஏற்றுக்கொள்ள போராடும்.
இந்நிலையில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் குழந்தைகள் எளிதில் அதனால் பாதிக்கப்படக்கூடும். இதனால் சளி, இருமல் இருக்கும். இப்படியிருக்க அவர்கள் சரியாக தூங்க மாட்டார்கள், சாப்பிட மாட்டார்கள். எப்போதும் சோர்வாக இருப்பது பெற்றோராகிய உங்களுக்கும் கவலையாக இருக்கும். எனவே ஆயுர்வேத நிபுணர் சொல்லும் இந்த வீட்டுக்குறிப்பை செய்து பாருங்கள். எவ்வளவு சளி , இருமல் இருந்தாலும் பறந்துபோகும். அதோடு குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை கொடுக்கவும் தவறாதீர்கள்.
ஆயுர்வேத நிபுணரான ரேகா ராதாமணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பனம் கல்கண்டம் அல்லது பனை வெல்லத்தில் சளியை குணப்படுத்தக்கூடிய சக்தி அதிகம் இருப்பதாக கூறியுள்ளார். இதை குழந்தைகள் மட்டுமன்றி பெரியவர்களும் உட்கொள்ளலாம் என்கிறார். மேலும் பனை வெல்லம் சிரப் செய்யவும் டிப்ஸ் வழங்குகிறார். அதில்..
View this post on Instagram
தேவையான பொருட்கள் :
சுக்கு - 1 துண்டு
பனங்கற்கண்டு - 1.5 துண்டு
தண்ணீர் - 2 கிளாஸ்
செய்முறை :
2 கிளாஸ் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் சுக்கு மற்றும் பனங்கற்கண்டு சேர்க்கவும். தண்ணீர் பாதியாக குறையும் வரை கொதிக்க வையுங்கள். கொதித்த பின் அதை வடிகட்டிக்கொள்ளுங்கள்.
அதை குழந்தைக்கு வெதுவெதுப்பாக அல்லது குடிக்கும் சூடு பதத்தில் கொடுங்கள். சளி அதிகமாக இருந்தால் பகலில் இரண்டு முறை கொடுக்கலாம் என்கிறார்.
6 மாதங்களுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு இந்த பனை மிட்டாயை அப்படியே கொடுக்கலாம். விரும்பினால் ராகி அல்லது சத்து மாவு கஞ்சியிலும் இந்த வெல்லத்தை கலந்து கொடுக்கலாம் என்கிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cold, Country jaggery, Dry Cough, Jaggery, Kids Care