முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / அதிகார துஷ்பிரயோகம் என்றால் என்ன..? அதை எப்படி எதிர்கொள்வது?

அதிகார துஷ்பிரயோகம் என்றால் என்ன..? அதை எப்படி எதிர்கொள்வது?

அதிகார துஷ்பிரயோகம்

அதிகார துஷ்பிரயோகம்

அதிகார துஷ்பிரயோகம் சார்ந்த விஷயங்கள் பற்றி நிறைய தெரிந்து கொள்ளுங்கள், அதற்குரிய சட்டம் மற்றும் விதிகள் என்ன கூறுகிறது என்று அறிவது நல்லது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஒருவருக்கு பணம், சொத்து, செல்வம் என்பதை விட புகழும், அதிகாரமும் மிகப்பெரிய போதையை கொடுக்கும். அதிகாரம் செலுத்தும் இடத்தில் இருப்பவர்கள் அதை தங்களுக்கு சாதகமாக பல விதங்களில் பயன்படுத்தி மற்றவர்களை கட்டுப்படுத்தலாம், தாங்கள் சொல்வதை செய்ய வைக்கலாம். மேலும், அதில் நம்பிக்கையின்மை, மற்றவர்களின் வாய்ப்புகளைப் பறிப்பது, உரிமைகள் மற்றும் ஆதாரங்களை தடுப்பது, உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுத்தலாம். தனக்கு கிடைத்துள்ள அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதை, அதிகார துஷ்ப்பிரயோகம் என்று கூறலாம். அதை எப்படி கண்டுபிடிப்பது என்று இங்கே பார்க்கலாம்.

அதிகார துஷ்பிரயோகம் என்பது இன்றைய நவீன காலத்தில் பல விதங்களில் காணப்படுகிறது. இது தனி நபர்கள் மட்டும் அல்லாமல் ஒரு சமூகம் மற்றும் நிறுவனங்கள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தனக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரம் அல்லது வகிக்கும் பதவி ஆகியவற்றை தவறாக, தனக்கு சாதமாக பயன்படுத்தி மற்றவர்கள் மீது அடக்குமுறை செலுத்துவதும் அதிகார துஷ்பிரயோகம் தான். எனவே இது மிக மெலிதான தாக்கம் முதல் தீவிரமான பிரச்சனையாக உருவெடுக்கும் வரை பலவிதமாக வெளிப்படலாம்.

வெவ்வேறு அமைப்புகளில் அதிகாரத்தன்மை என்பது சமூகத்தில் எந்தவிதமான பிரச்சினையையும் ஏற்படுத்தாத அளவுக்கு சம நிலையாக இருக்க வேண்டும். அது மட்டுமில்லாமல் அதிகாரத்தில் இருப்பவர்கள் தாங்கள் செய்யும் செயல்களுக்கும் தங்களுடைய வார்த்தைகளுக்கும் பொறுப்பேற்றுக் கொள்வது மிக மிக அவசியம்.

அதிகார துஷ்பிரயோகம் என்பது என்ன?

அதிகார துஷ்பிரயோகம் என்பது, ஒரு தனிநபரையோ அல்லது ஒரு குழுவினரையோ அல்லது சமூகத்தையோ, காயப்படுத்தும் வகையில் தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்துவதாகும். உதாரணமாக, தனிப்பட்ட உறவுகள் முதல் அரசாங்க அலுவலகம் வரை இது பொருந்தும். அதிகாரத்தைப் பயன்படுத்தி பிளாக்மெயில் செய்வது, சட்டத்துக்கு புறம்பான செயல்களில் ஈடுபடுத்துவது/ஈடுபட வற்புறுத்துவது, முறைகேடான செயல்களில் ஈடுபட செய்வது போன்றவை அடங்கும்.

எவையெல்லாம் அதிகார துஷ்பிரயோகம் என்று கூறப்படுகிறது?

  • கோயர்ஷன்: மிரட்டுவது, அல்லது அச்சுறுத்தல் மூலம் விருப்பமில்லாமல் ஏதேனும் ஒன்றை செய்ய வைப்பது
  • மேனிபுலேஷன்: சூழலுக்கு ஏற்றவாறு மாற்றி பேசி, ஏமாற்றி, உணர்ச்சி பூர்வமாக ஒரு நபரை அல்லது ஒரு சூழலை கட்டுப்பாட்டில் வைப்பது
  • சுயநலமாக பயன்படுத்துதல்: தனக்கு கிடைக்கும் ஒரு தனிப்பட்ட நன்மை அல்லது லாபத்துக்காக மற்றவர்களை பயன்படுத்திக் கொள்வது
  • மோசமாக நடத்துவது: பாலியல் ரீதியாக, பாலினம், பொருளாதாரம், வயது, கல்வி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் அடிப்படையில் ஒருவரை மோசமாக நடத்துவது அல்லது அவமானப்படுத்துவது
  • தொல்லை கொடுப்பது: உடல் ரீதியாக, மன ரீதியாக, பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பது
  • நெபோடிசம்: தனது குடும்பம், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் என்று தெரிந்தவர்கள் மற்றும் வேண்டியவர்களுக்கு சலுகைகள் கொடுப்பது

அதிகார துஷ்பிரயோகத்தை எவ்வாறு எதிர்கொள்வது?

அதிகார துஷ்பிரயோகம் சார்ந்த விஷயங்கள் பற்றி நிறைய தெரிந்து கொள்ளுங்கள், அதற்குரிய சட்டம் மற்றும் விதிகள் என்ன கூறுகிறது என்று அறிவது நல்லது.

Also Read | நீங்கள் ’டைம் மேனேஜ்மென்ட்’ விஷயத்தில் மிகவும் மோசமானவரா..? உங்களுக்கான தகவல்தான் இது..!

  • நீங்கள் அதிகாரத்தால் பாதிக்கப்படும் போது, அதை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும். மேலும், உரிய அதிகாரிகளிடம் அதைப் பற்றி புகார் கொடுக்க தயங்காதீர்கள்.
  • தனிப்பட்ட உறவுகள் உட்பட, நீங்கள் அப்யூஸ் செய்யப்படுகிறீர்கள் என்றால், மொத்த விவரங்களையும் குறிப்பில் வைத்துக் கொள்ளுங்கள். தேதி, நேரம், சம்பவங்களின் விவரங்கள், சான்றுகள் என்று முடிந்தவரை எல்லாவற்றுக்கும் சாட்சி வைத்துக்கொள்ளுங்கள்.
  • நீங்கள் அதிகார துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டால், உடனடியாக உங்கள் குடும்பம் அல்லது நண்பர்களிடம் தெரிவித்து, ஆதரவு பெறுங்கள்.
  • நீங்கள் எதிர்கொண்ட தொல்லை, துஷ்பிரயோகம் ஆகியவற்றை வெளிப்படுத்த தயங்காதீர்கள்.
top videos

    First published:

    Tags: Boss attitude, Sexual abuse