மாடர்ன் கிச்சன் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. இப்போதெல்லாம் வீடு கட்டும் பலர் தங்கள் சமையலறையை பல நேர்த்தியான வடிவமைப்புகளில் பெற விரும்புகின்றனர். அதிலும் முக்கியமாக செராமிக் குக்டாப் உபயோகிப்பதையே பெரும்பாலான மாடர்ன் அம்மாக்கள் விரும்புகின்றனர்.
ஒரு சாதாரண அடுப்பை விட அதிக கவனிப்பும் சுத்தமும் தேவைப்படலாம் என்றாலும், செராமிக் அல்லது கிளாஸ் குக்டாப் மிகவும் ஸ்டைலான மற்றும் நேர்த்தியானது என்பதை யாராலும் மறுக்க முடியாது. இருப்பினும் நீங்கள் முதலில் வாங்கும் போது இருந்த சுத்தமான மற்றும் நேர்த்தியான தோற்றத்தை அப்படியே தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானால், உங்கள் குக்டாப்பை பராமரிக்கும் போது சில விஷயங்கள் செய்வதை காட்டாயம் தவிர்க்க வேண்டும். அவை என்ன என்பது குறித்து கீழே காண்போம்.
1. அடுப்பின் மேற்பரப்பில் ஸ்க்ராட்ச்சஸ் ஏற்படாமல் இருக்க ஸ்பான்ச் கிளீனர்களை பயன்படுத்த வேண்டும். கீறக்கூடிய சிராய்ப்பு கிளீனர்கள் அல்லது மெட்டல் நார்களை ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது. எப்போதும் செராமிக் மற்றும் கிளாஸ் குக்டாப்புகளை சுத்தம் செய்வதற்கான தயாரிப்புகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
2. அடிப்பகுதியில் கிரீஸ் படியும் பாத்திரங்களையும், கடாய்களையும் ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் அவை குக்டாப்பில் ரிங் வடிவத்தில் அடையாளங்களை விடக்கூடும். இவை சுத்தம் செய்ய மிகவும் கடினமான இருக்கும்.
3. உங்கள் குக்டாப்பில் வார்ப்பிரும்பு பாத்திரங்களை பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் அவற்றின் அடிப்பகுதிகள் வழக்கமாக கடினமானவை. மேலும் குக்டாப்பில் அவற்றின் எந்த ஒரு இயக்கமும் ஸ்க்ராட்ச்சஸ்களுக்கு வழிவகுக்கும்.
4. கடினமான அடிப்பகுதியை கொண்ட பீங்கான் மற்றும் ஸ்டோன்வேர் சமையல் பாத்திரங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். அவை உங்கள் குக்டாப்பின் மென்மையான மேற்பரப்பில் கீறல்களுக்கு வழிவகுக்கும்.
5. பொதுவாக சாதாரண அடுப்பில் சமைக்கும் போது பயன்படுத்தும் கரண்டிகளை அடுப்பின் மேற்பரப்பில் வைக்கும் பழக்கம் பலருக்கு இருக்கிறது. ஆனால் குக்டாப்பில் நீங்கள் சமைக்கும்போது கரண்டிகளை அதன் மேற்பரப்பில் வைக்க வேண்டாம். ஏனெனில் கரண்டியில் ஒட்டிக்கொண்டிருக்கும் உணவு குக்டாப் வெப்பத்தில் கருகலாம். இதன் காரணமாக உங்கள் குக்டாப்பில் கடினமான கறைகள் ஏற்படும்.
6. வட்டமான விளிம்பு இல்லாத பாட்டம்களைக் கொண்ட கடாய் பாத்திரத்தை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். சீரற்ற வெப்ப விநியோகம் காரணமாக அவற்றில் உணவுகளை சரிவர சமைக்க முடியாது. மேலும் அவை குக்டாப்பில் சரியாக பொருந்தாது.
7. சமைத்தபிறகு உணவுகள் அடங்கியிருக்கும் கனமான பாத்திரங்களை குக்டாப்பில் இருந்து வேறு பகுதிக்கு மாற்ற வேண்டுமானால் அவற்றை இழுப்பதற்கு பதிலாக தூக்கி வைப்பதே சிறந்தது. இதன் மூலம் குக்டாப்பின் மேற்பரப்பில் கீறல் விழாமல் பார்த்துக்கொள்ளலாம்.
8. பாத்திரத்தில் சர்க்கரை கரைசல் கொண்ட நீரை கொதிக்க வைக்கும் போது அவை குக்டாப்பின் மீது கசிந்து விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மேலும் கொதிக்கும் போது குக்டாப்பில் படியும் ஸ்ப்ளேட்டர்களை விரைவாகத் துடைக்கவும். ஏனெனில் அவை குக்டோப்பின் நிறத்தை மாற்றி அதன் மீது மஞ்சள் நிற அடையாளங்களை ஏற்படுத்தும். அவற்றை நீக்குவது என்பது கிட்டத்தட்ட சாத்தியமற்ற காரியம்.
9. சூடான கண்ணாடி மற்றும் பிற பேக்வேர்களை குக்டாப்பின் மேல் வைத்து ஆற வைக்க விடாதீர்கள். அதற்கு பதிலாக உலர்ந்த துண்டின் மேல் வைக்கலாம்.
Also Read : உஷார்.. கோடை வெயிலின் வெப்பத்திலிருந்து தப்பித்துக் கொள்ள இதை மறக்காம ஃபாலோ பண்ணுங்க!
10. உங்கள் குக்டாப்பில் கை வைத்து அழுத்தம் கொடுப்பதோ அல்லது அதில் சாய்ந்துக் கொள்வதோ கூடாது. மேலும் கனமான பொருட்கள் எதையும் அதன்மீது வைக்காதீர்கள். கிளாஸ் குக்டாப் எடையைத் தாங்குவது போல் தோன்றலாம். ஆனால் குக்டாப்பை சூடுபடுத்தும் போது கிளாஸ் அல்லது செராமிக் விரிவடைந்து சிதறக்கூடும்.
எனவே, நீங்கள் எந்த அளவுக்கு செராமிக் குக்டாப்பை விரும்புகிறீர்களோ, அதை விட அதிக அளவு அதனை கவனமாக பராமரிக்க வேண்டும். இல்லையெனில் சமயலையின் பொலிவு பாதிக்கப்படும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kitchen Hacks, Kitchen Tips