வீட்டில் அதிகமாக தண்ணீர் பயன்படுத்தும் இடம் குளியலறை. எனவே தான், ஒரு குறிப்பிட்ட காலத்தில் பாத்ரூமில் உள்ள டைல்ஸ்கள் கரைப்படிந்து அழுக்காக உள்ளது. அழுக்காக உள்ள பாத்ரூம் சுவர்களை பளீர் என மாற்ற சந்தைகளில் பல லிக்வீடுகள் விற்பனை செய்யப்படுகிறது.
ஆனால், அவை நமக்கு எந்த விதமான பலனையும் கொடுப்பதில்லை. ஆனால், நமது வீட்டு சமையலறையில் இருக்கும் ஒரு சில பொருட்களை கொண்டு பளிச் என மாற்றலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?. பாத்ரூம் டைல்களை சுத்தம் செய்ய சில டிப்ஸ்களை உங்களுக்கு கூறுகிறோம்.
சமையல் சோடா மற்றும் எலுமிச்சை :
குளியலறையின் உள்ள கறைபடிந்த டைல்களை சுத்தம் செய்ய பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை பயன்படுத்தலாம். இதற்கு முதலில் டைல்ஸ் மீது வெந்நீரை ஊற்றவும். இதன் மூலம் டைல்ஸில் உள்ள அழுக்குகள் சற்று ஊறிவிடும். இதற்குப் பிறகு, அரை வாளி வெந்நீரில் அரை கப் சமையல் சோடா, அரை கப் எலுமிச்சை சாறை கலக்கவும்.
இதற்குப் பிறகு, இந்த கலவையை டைல்ஸ் மீது தெளித்து ஓடுகளை நன்றாக தேய்க்கவும். பின்னர், அதை 5 நிமிடங்கள் அப்படியே விடவும். பின்னர் பிரெஷ் வைத்து மீண்டும் ஓடுகளை சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி கழுவவும்.
Also Read | வீட்டில் ஈ தொல்லை அதிகமா இருக்கா..? விரட்ட இந்த டிப்ஸை ட்ரை பண்ணி பாருங்க..!
வினிகர் பயன்படுத்தலாம் :
சீன உணவுகளை தயாரிப்பதில் வினிகர் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால், குளியலறையில் உள்ள அழுக்கு படிந்த டைல்ஸ்களை பளபளவென மாற்ற வினிகரை பயன்படுத்தலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?. ஆம், இதற்கு முதலில் வெள்ளை வினிகர் மற்றும் தண்ணீரை சம அளவு எடுத்து நன்றாக கலக்கவும். இதற்குப் பிறகு, கலவையில் ஒரு துணி அல்லது பஞ்சை நனைத்து ஓடுகளைத் தேய்க்கவும். பின்னர் சுத்தமான தண்ணீர் ஊற்றி கழுவினால், உங்கள் குளியலறை பளபளப்பாக காணப்படும்.
ப்ளீச் மூலம் பாத்ரூம் டைல்ஸ்களை சுத்தம் செய்யலாம் :
ப்ளீச் பல விஷயங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இது குளியலறையில் உள்ள கறைபடிந்த டைல்களை சுத்தம் செய்வதற்கும் பயன்படுத்தப்படலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?. இதற்கு, நீங்கள் 3:1 என்ற விகிதத்தில் தண்ணீர் மற்றும் ப்ளீச் கலந்து கரைசலை தயாரிக்கவும்.
இதற்குப் பிறகு, ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் கரைசலை நிரப்பவும், பின்னர் அதை குளியலறையின் ஓடு மீது தெளிக்கவும், பின்னர் அதை ஒரு துணியால் துடைத்து சுத்தம் செய்யவும். இப்படி செய்வதால் பழைய ஓடுகள் புது டைல்ஸ் போல பிரகாசிக்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Home Care, Home clean, Home Cleaning Tips