தூக்கம் எவ்வளவு முக்கியம் என்பதை வலியுறுத்துவதற்காக உலக தூக்க தினம் என்று மார்ச் மாதம் 17 ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சரியாக தூங்காமல் இருப்பதால் பல விதமான குறைபாடுகளை ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். எந்த வயதினராக இருந்தாலும் சரி, போதுமான அளவுக்கு தூங்குவது உடல் ஆரோக்கியமாக இருப்பதன் முக்கிய தேவை என்பது குறிப்பிடத்தக்கது. கர்ப்ப காலம் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் மாற்றங்களை ஏற்படுத்தும். இதில் தூக்கம் என்பது விதி விலக்கல்ல.
கர்ப்பிணி பெண்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சிக்கல்களில் ஒன்று தூக்கமின்மை! உடலில் ஏற்படக்கூடிய ஹார்மோன்களின் மாற்றத்தால், உடல் மற்றும் மனரீதியாக பலவித மாற்றங்கள் உண்டாகிறது. அதுமட்டுமல்லாமல் குழந்தை வயிற்றில் வளர வளர, ஒருவிதமான மெல்லிய பயமும் பதற்றமும் சேரும். மேலும் தூங்குவதற்கு அதிக நேரம் எடுக்கும், அதுமட்டுமில்லாமல் குழந்தை ஆரோக்கியம், குழந்தை பிறப்பு பற்றிய கவலைகள் இருப்பதால் அதை சார்ந்த பலவித கனவுகளும் தொந்தரவு செய்யும். இதனால் கர்ப்பிணிப் பெண்களால் சரியாக தூங்க முடியாது.
பெங்களூரு ஃபோர்டிஸ் மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் மற்றும் மூத்த ஆலோசகரான மருத்துவர் காயத்ரி காமத் இதைப் பற்றி கூறுகையில், பொதுவாக வயிற்றில் குழந்தை வளர்வது கண்கூடாக தெரியும் பொழுது, அதாவது வயிறு மேடிடத் தொடங்கிய காலத்தில் இருந்து, தூக்கம் பாதிக்கப்படுகிறது. அது மட்டுமில்லாமல் குழந்தை வளர வளர, பெரிதாகும் வயிறு சுவாச உறுப்புகளில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. எனவே எந்த பக்கமாக படுத்தாலும், மூச்சு விடுவதில் லேசான சிரமத்தை உண்டாக்குகிறது. ஏற்கனவே கூறியுள்ளது போல ஹார்மோன்கள் உண்டாக்கும் ஏற்றத்தாழ்வுகள், மூச்சுக்குழாய், சுவாசப்பாதையில் அடைப்பு, உள்ளிட்ட பிரச்சனைகளையும் உண்டாக்குகிறது என்று மருத்துவர் தெரிவித்திருக்கிறார்.
உண்மையிலேயே கர்ப்பிணி பெண்கள் சரியாக தூக்கம் வராமல் ஏன் அவதிப்படுகிறார்கள்?
அதிகமாக உற்பத்தியாகும் புரஜஸ்ட்ரோன் :
கர்ப்பகாலத்தில் பெண்களின் உடலில் ஏற்படக்கூடிய மிகப்பெரிய மாற்றங்களில் ஒன்றுதான் புரஜஸ்ட்ரோன் என்ற ஹார்மோன். புரஜஸ்ட்ரோன் கர்ப்பத்தை தக்க வைப்பதற்கும், உடலை குழந்தை பிறப்புக்கும், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கும் தயார்படுத்துவதற்கும் உதவும் ஒரு ஹார்மோன்.
Also Read | கர்ப்பிணிகள் இந்த ஜூஸ் வகைகளில் தினம் ஒன்று குடித்து வந்தால் கரு வளர்ச்சிக்கு நல்லது..!
ஆனால் புரஜஸ்ட்ரோன் ஹார்மோனின்அளவு அதிகரிக்கும் பொழுது. அது தூக்கம் சார்ந்த தொந்தரவுகளை அதிகரித்து நாள் முழுவதும், அதாவது பகல் நேரத்தில் சோர்வாகவோ உணர வைக்கும்; மேலும் பகல் நேரத்தில் தூங்குவதற்கு தூண்டி விடும். பகல் நேரத்தில் தூங்கும் பொழுது பொதுவாகவே இரவு நேரத்தில் பலருக்கும் அவ்வளவு சீக்கிரம் தூக்கம் வராது. எனவே கர்ப்பிணி பெண்கள் இரவு நேரத்தில் தூங்க முடியாமல் அவதிப்படுகிறார்கள்.
அது மட்டும் இல்லாமல் அடிக்கடி சிறுநீர் கழிப்பது, நெஞ்செரிச்சல், செரிமான பிரச்சனை, முதுகு வலி, கழுத்து வலி உள்ளிட்ட பலவித பிரச்சினைகளால் கர்ப்பிணி பெண்கள் அவதிப்படுகிறார்கள். எனவே இவையும் தூக்கத்தை பாதிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
ரெஸ்ட்லெஸ் லெக் சிண்ட்ரோம் :
அது மட்டுமில்லாமல் கர்ப்பிணி பெண்கள் ரெஸ்ட்லெஸ் லெக் சிண்ட்ரோம் என்ற ஒரு குறைபாட்டால் பாதிக்கப்படுகிறார்கள் என்று மகப்பேரியல் மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். அதாவது கால்களை அசைத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்ற ஒருவிதமான உந்துதலால் பாதிக்கப்படுவது தான் இந்த குறைபாடு என்று கூறப்படுகிறது.
ரெஸ்ட்லெஸ் லெக் சிண்ட்ரோம் என்றால் காலை 1 இடத்தில் அசைக்காமல் வைத்திருக்க முடியாது; காலை ஆட்டிக் கொண்டே அல்லது அசைத்துக்கொண்டே இருக்க வேண்டும். தூங்கும் பொழுது காலை அசைக்க வேண்டும் என்ற உந்துதலால் தூக்கம் தடைப்பட்டு கொண்டே இருக்கும். இது கர்ப்பிணிப் பெண்களை அதிகமாக பாதிக்கிறது.
தூங்கும் போது மூச்சு விடுவதில் பிரச்சனை
கர்ப்பிணி பெண்களின் தூக்கத்தை பாதிக்கக் கூடிய மற்றொரு குறைபாடு ஸ்லீப் ஆப்னியா என்ற தூக்க குறைபாடு ஆகும். அதாவது தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது திடீரென்று சுவாசிப்பதில் தடை ஏற்பட்டு, தூக்கத்தில் இருந்து சட்டென்று விழிக்கும் நிலையை குறிக்கிறது. தூங்கிக் கொண்டிருக்கும் போது, திடீரென்று மூச்சு அடைத்தது போல இருக்கும். அப்போது, தூக்கத்தில் இருந்து கண் விழிப்பது தான் ஸ்லீப் அப்னியா என்று கூறப்படுகிறது. கர்ப்ப காலத்தில் ஏற்படும் எடை அதிகரிப்பு மற்றும் ஹார்மோன்கள் மாற்றங்களால் அதிகமாக இது ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது.
Also Read | கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய உணவு அளவு என்ன? தண்ணீர் எவ்வளவு குடிக்க வேண்டும்..? முழுமையான டயட் பிளான்
அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உந்துதல்
குழந்தை ஆறு மாதத்துக்கு மேல் வளர்ந்து, மூன்றாவது ட்ரைமஸ்டர் என்று கூறப்படும் காலகட்டத்தில் வயிறு பெரிதாக வளரத் துவங்கி மற்ற உறுப்புகளின் மீது அழுத்தம் கொடுப்பதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்படும். இதனால் தூக்கம் தடைபடும். தூக்கம் என்பது அனைத்து வயதினருக்கும் மிகவும் முக்கியமானது. எனவே கர்ப்பிணி பெண்கள் சரியாக தூங்கி தேவையான அளவு ஓய்வு எடுக்க வேண்டும். அவர்கள் தூக்கத்தில் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்க பின்வரும் வழிமுறைகளை பின்பற்றலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Sleep, Sleep Apnea, Sleepless, World Sleep Day