முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / world immunization week 2023 : உலக நோய் தடுப்பு வாரத்தின் கருப்பொருள் மற்றும் முக்கியத்துவம் என்ன..?

world immunization week 2023 : உலக நோய் தடுப்பு வாரத்தின் கருப்பொருள் மற்றும் முக்கியத்துவம் என்ன..?

World Immunization week 2023

World Immunization week 2023

உலக நோய் தடுப்பு வாரம் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 24 முதல் ஏப்ரல் 30 வரை அனுசரிக்கப்படுகிறது. இது உலக அளவில் பல இறப்புகளுக்கு காரணமாக இருக்கக்கூடிய நோய்களை தடுப்பதற்கான ஒரு முக்கியமான முயற்சியாகும்.

  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பொதுமக்களின் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கவும், தொற்று நோய்கள் ஏற்படுவதைத் தவிர்க்கவும், தடுப்பூசிகளின் முக்கியத்துவத்தை பறைசாற்றும் விதமாக உலக நோய் தடுப்பு வாரம் அமைகிறது.

உலக நோய் தடுப்பு வாரம் என்பது உலகெங்கிலும் உள்ள பொது மக்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாகவும், தடுப்பூசிகளின் பயன்பாடுகள் மூலமாக தொற்று நோய்கள் ஏற்படுவதை தவிர்க்க உதவும் விழிப்புணர்வு வாரமாகும். இது ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 24 முதல் ஏப்ரல் 30 வரை அனுசரிக்கப்படுகிறது. இது உலக அளவில் பல இறப்புகளுக்கு காரணமாக இருக்கக்கூடிய நோய்களை தடுப்பதற்கான ஒரு முக்கியமான முயற்சியாகும்.

தவிர்க்கக்கூடிய நோய்களில் இருந்து காக்கவும், ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உலக சுகாதார அமைப்பானது பல்வேறு உள்ளூர் மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து உலக நோய் தடுப்பு வாரம் என்ற இந்த நிகழ்வை உருவாக்கியுள்ளது. WIW 2023 செயல்பாடுகளானது தடுப்பூசிகளின் முக்கியத்துவம், தடுப்பூசி முகாம்களை அமைக்க அரசுக்கு போதிய உதவி வழங்குதல் மற்றும் தொழில் சார்ந்த உதவிகள் மற்றும் முக்கியமான தகவல்கள் அளித்தல் போன்றவை அடங்கும்.

தடுப்பூசிகள் மூலம் தவிர்க்கக்கூடிய நோய்கள் (Vaccine-preventable diseases -VPD) வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களால் ஏற்படுகின்றன. இது போன்ற நோய்களை தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலமாக ஒருவர் தவிர்க்கலாம்.

துரதிஷ்டவசமாக VPDகளானது ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பிற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. குழந்தைகள் மற்றும் பெரியவர்களில் போலியோ, டிப்தீரியா, கோவிட்-19 போன்ற தொற்றுகள் ஏற்படுவதை தடுக்க தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

உலக நோய் தடுப்பு வாரம் 2023: கருப்பொருள்

உலக நோய் தடுப்பு வாரத்திற்கான இந்த வருட கருப்பொருளானது “The Big Catch-Up" என்று கொடுக்கப்பட்டுள்ளது. இதன்படி எல்லா நாடுகளும் தங்கள் நாட்டு மக்கள் குறிப்பாக குழந்தைகள் தவிர்க்கக்கூடிய நோய்களிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளனரா என்பதை உறுதி செய்ய வேண்டும். கோவிட்-19 காரணமாக வழக்கமான நோய்த்தெடுப்பு சேவைகள் பல நாடுகளில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல நாடுகளில் தவிர்க்கக்கூடிய நோய்களுக்கான எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

குறிப்பாக குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் ஈட்டக்கூடிய நாடுகளில், தவறவிட்ட தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளவும், நோய் தடுப்பு சிகிச்சை சேவைகளை அதிகரிப்பதற்கான முக்கியத்துவத்தையும் இந்த கருப்பொருள் விவரிக்கிறது.

உலக நோய் தடுப்பு வாரம்: முக்கியத்துவம்

தடுப்பூசி போட்டுக் கொள்வதன் அவசியம் மற்றும் பொதுமக்கள் தவிர்க்க கூடிய நோய்களிலிருந்து எவ்வாறு தங்களை காத்துக் கொள்ளலாம் என்பது குறித்த முக்கியத்துவத்தையும் உலக நோய் தடுப்பு வாரம் எடுத்துக்காட்டுகிறது.

Also Read | வெயிலில் செல்லும்பொழுது உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கா.? ஹீட் ஸ்ட்ரோக் இருக்கலாம்.. கவனம்.!

குழும நோய்த்தடுப்பாற்றல் என்ற மறைமுக பாதுகாப்பு முறையானது மக்கள் தொகையில் பெரும்பான்மையான பகுதி மக்களுக்கு தடுப்பூசி மூலம் தடுப்பூசி வழங்குவதன் மூலமாகவோ அல்லது ஏற்கனவே ஏற்பட்ட தொற்று காரணமாகவோ ஒரு நோய்க்கான தடுப்பை உருவாக்கிக் கொள்ளுதல். அவர்களை நோய்கள் நோய்களிலிருந்து பாதுகாப்பது என்பது குழும நோய் தடுப்பாற்றல் என்ற மறைமுக பாதுகாப்பாகும். உலக நோய் தடுப்பு வாரம் இன் குழும நோய் தடுப்பாற்றலிலும் கவனம் செலுத்துகிறது.

குழும நோய் தடுப்பாற்றல் என்பது நோய் பரவுவதை தவிர்ப்பதன் மூலமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள இயலாத நபருக்கு நோய் ஏற்படுவதை தடுக்கிறது. மீசல்ஸ், போலியோ மற்றும் கோவிட்-19 போன்ற தொற்றுகள் பரவுவதை தடுப்பதில் குழும நோய் தடுப்பாற்றல் ஒரு முக்கிய காரணியாக கருதப்படுகிறது.

First published:

Tags: Immunity, Vaccination, Vaccination Injection