முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / World Hypertension Day 2023 : மாதவிடாய் நாட்களில் உண்டாகும் டென்ஷன் உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்குமா..?

World Hypertension Day 2023 : மாதவிடாய் நாட்களில் உண்டாகும் டென்ஷன் உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்குமா..?

உலக ஹைப்பர்டென்ஷன் தினம்

உலக ஹைப்பர்டென்ஷன் தினம்

சைலன்ட் கில்லர் என்று கூறப்படும் உடல் நலக் குறைபாடுகளில் உயர் ரத்த அழுத்தமும் ஒன்று. அதிக கொலஸ்டிரால் போலவே, உயர் ரத்த அழுத்தம் உடலில் பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும்;

  • Last Updated :
  • Tamil Nadu, India

சைலன்ட் கில்லர் என்று கூறப்படும் உடல் நலக் குறைபாடுகளில் உயர் ரத்த அழுத்தமும் ஒன்று. அதிக கொலஸ்டிரால் போலவே, உயர் ரத்த அழுத்தம் உடலில் பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். தீவிரமான இதய நோய்களை உண்டாக்கும். உயர் ரத்த அழுத்தம் இதய நோய்கள் அதிகமாவதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று.

உயர் ரத்த அழுத்தத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைப் பற்றி விழிப்புணர்வை அதிகப்படுத்துவதற்காக உலக ஹைப்பர்டென்ஷன் தினம் என்று ஆண்டுதோறும் மே 17 அன்று அனுசரிக்கப்படுகிறது. இதன் மூலம் உயர் ரத்த அழுத்தத்தின் அறிகுறிகள், ரத்த அழுத்தம் அதிகமானால் என்ன செய்ய வேண்டும், அதற்கான சிகிச்சைகள், வாழ்க்கைமுறை மாற்றங்கள் அதனால் ஏற்படக்கூடிய நோய் பாதிப்புகள் உள்ளிட்டவற்றை பற்றி பலவிதமான காம்பெயின்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதிக பிளட் பிரஷர், மாதவிடாய் சுழற்சியை பாதிக்குமா என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

ஆண்களை மட்டுமல்லாமல் பெண்களையும் பாதிக்கும் இதய நோய்களுக்கு, அதிக பிளட் பிரஷர் அல்லது ஹைப்பர் டென்ஷன் தான் மிக முக்கிய காரணமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. பிளட் பிரஷர் 140/90mmHg க்கு மேல் இருக்கும்பட்சத்தில் மற்றும் தலைவலி, இதயப் படபடப்பு, மூக்கிலிருந்து ரத்தம் கசிவது உள்ளிட்ட அறிகுறிகள் காணப்பட்டால் அது ஹைப்பர் டென்ஷன் என்று கூறப்படுகிறது.

சமீப காலமாக பெண்களுக்கும் இதய பாதிப்புகளும், கார்டியோ வாஸ்குலார் நோய்களும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருவதை காண முடிகிறது. இதற்கு அதிக கொலஸ்ட்ரால், உடல்பருமன், உயர் ரத்த அழுத்தம் என்று பல்வேறு காரணங்களை குறிப்பிடலாம். பொதுவாகவே, பெண்களுக்கு ஒரு சில நோய் பாதிப்புகள் ஏற்படும் பொழுது, அது மாதவிடாய் சுழற்சியை பாதிக்கும். மாதவிடாய் தாமதமாகும் அல்லது நார்மல் சைக்கிளின் நாட்கள் குறையும், உதிரப்போக்கு அதிகரிக்கும் அல்லது குறையும். எனவே, உயர் ரத்த அழுத்தமும் இதற்கு மாதவிடாயை பாதிக்கலாம். ஹைப்பர் டென்ஷனுக்கும், மாதவிடாய்க்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

சாதாரணமான நாட்களை விட, பீரியட்ஸ் நாட்களில் பிளட் பிரஷர் பெண்களுக்கு மாறுபடும். PMS என்று கூறப்படும் மாதவிடாய்க்கு முந்தைய நாட்கள் மற்றும் ஹைப்பர் டென்ஷன்வுக்கும் நேரடியாக தொடர்பு இருக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

குருகிராமில் இருக்கும் சிகே பிர்லா மருத்துவமனையின், மகப்பேறு மற்றும் மகப்பேறியல் தலைமை ஆலோசகரான மருத்துவர் ஆஸ்தா தயால் இதைப் பற்றி கூறுகையில், ‘மாதவிடாய் தொடங்கும் போது ரத்த அழுத்தம் மிகவும் அதிகமாக இருக்கும் மற்றும் மாதவிடாய் முடிந்த 17 முதல் 26 நாள் வரை, அதாவது பீரியட் சைக்கிளில் இந்த நாட்களில் பிளட் பிரஷர் குறைவாக இருக்கும்’ என்று கூறியுள்ளார்.

PMS ஆல் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஹைப்பர்டென்ஷன் ஏற்படும் வாய்ப்பு 40% அதிகமாக இருக்கிறது. மேலும், சிறு வயதிலேயே மாதவிடாய் ஏற்படும் பெண்களுக்கு, அவர்கள் வயதாகும் போது ஹைப்பர் டென்ஷன் ஏற்படும் அபாயம் உள்ளது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதே போல, அதிக ரத்தப்போக்கு இருக்கும் பெண்களுக்கு ஹைப்பர் டென்ஷன் ஏற்படும் அபாயம் உள்ளது என்று மற்றொரு நீண்ட-கால ஆய்வு தெரிவிக்கிறது.

Also Read |  ஸ்வீட்டை உணவுக்கு முன்பு அல்லது பின்பு.. எப்போது சாப்பிட வேண்டும்..?

மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையின், மகப்பேறியல் மருத்துவ ஆலோசகரான மருத்துவர் பந்திதா சின்ஹா, ஒரு பெண்ணின் மாதவிடாய் சுழற்சியை அதிக பிளட் பிரஷர் எப்படி பாதிக்கும் என்று விளக்கம் அளித்துள்ளார்.

“ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும் போது, உடலில் உள்ள பிளட் வெசல்ஸ் (blood vessels) பாதிக்கப்படும். எனவே, இதில் கருப்பையும் அடங்கும். கர்பப்பை, ஓவரிக்கள் ஆகியவற்றில் இருக்கும் ரத்த நாளங்கள் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், இந்தப் பகுதியில் ரத்த ஓட்டமும் தடைபடும். எனவே, இர்ரெகுலர் பீரியட்ஸ் ஏற்படும். மேலும், அதிகமாக பிளீடிங் ஏற்படலாம் அல்லது மாதவிடாய் ஏற்படாமல் போகும் நிலையும் ஏற்படலாம். அது மட்டுமில்லாமல், கர்ப்ப காலத்தில் அதிக ரத்த அழுத்தம், ப்ரீ-ஈகிலாம்ப்சியா என்ற சிக்கலையும் ஏற்படுத்தும்’ என்று கூறுகிறார்.

இதற்கு என்ன தீர்வு?

எல்லா பெண்களுமே ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை பின்பற்ற வேண்டும். அதிக உப்பு, கொழுப்பு, இனிப்பு உள்ள உணவுகள், மது, சிகரெட், ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். எடையை சரியான அளவில் மெயின்டைன் செய்ய வேண்டும், தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும் மற்றும் குறிப்பிட்ட கால இடைவெளியில், பிளட் பிரஷரை கண்காணிக்க வேண்டும்.

மாதவிடாய் நாட்களில் மன அழுத்தம் அதிகரிக்காமல் கவனித்துக் கொள்ள வேண்டும். நிறைய தண்ணீர் மற்றும் திரவங்கள் குடிக்க வேண்டும், அதே போல நல்ல தூக்கமும் ஓய்வும் தேவை.

First published:

Tags: High Blood Pressure, Hypertension, Irregular periods, Periods