உலக ஆஸ்துமா தினம் என்பது ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் செவ்வாய் கிழமை உலகளவில் கொண்டாடப்படுகிறது. இதன் நோக்கம் ஆஸ்துமா பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி மக்களின் சுகாதார நிலையை பேணிப் பாதுகாப்பதாகும்.
ஆஸ்துமா என்பது உலக சுகாதார அமைப்பு (WHO) கூறியது போல் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என வயது வித்தியாசமின்றி பாதிக்கும் ஒரு நீண்ட கால நோயாகும். ஆஸ்துமா, நுரையீரலில் உள்ள சிறிய காற்றுப்பாதையை சுற்றியுள்ள தசைகளில் வீக்கம் மற்றும் இறுக்கத்தை ஏற்படுத்துகிறது. இது குறுகிய காற்றுப் பாதைக்கு வழிவகுக்கிறது. இதன் விளைவாக, ஆஸ்துமா உள்ள நபர்கள் இருமல், மூச்சுத்திணறல் மற்றும் மார்பில் இறுக்கத்தை அனுபவிப்பார்கள்.
உலக ஆஸ்துமா தினம் என்பது 1993 ஆம் ஆண்டு முதல் ஆஸ்துமாவுக்கான உலகளாவிய முன்முயற்சியால் உருவாக்கப்பட்டது. இதன் நோக்கம் உலகளாவிய ஆஸ்துமா விழிப்புணர்வை அதிகரிப்பது மற்றும் உலகளவில் நோயாளிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகும்.
உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, ஆஸ்துமா பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படாமல் நிலைமையை மோசமாக்குகிறது. குறிப்பாக குறைந்த மற்றும் நடுத்தர நாடுகளில் இந்நிலை அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆஸ்துமாவுக்கு எந்த சிகிச்சையும் இல்லை என்றாலும், உள்ளிழுக்கும் சுவாச மருந்துகளால் அதை கட்டுக்குள் வைக்க முடியும். இதனால் ஆஸ்துமா உள்ளவர்கள் இயல்பான வாழ்க்கையை வாழ உதவுகிறது.
Also Read | தூசி ஒவ்வமையிலிருந்து மூக்கை பாதுகாக்க உதவும் சில ஆயுர்வேத டிப்ஸ்..!
2023 ஆம் ஆண்டுக்கான உலக ஆஸ்துமா தினத்தின் கருப்பொருள் "அனைவருக்கும் ஆஸ்துமா சிகிச்சை" (Asthma Care for All), முந்தைய ஆண்டின் கருப்பொருள், "ஆஸ்துமா கவனிப்பில் இடைவெளிகளை நீக்குதல்" (Closing Gaps in Asthma Care) மற்றும் 2019 தீம், "ஆஸ்துமாவை நிறுத்து" (STOP for Asthma) என்பதாகும்.
உலக ஆஸ்துமா தினம் 2023 : ஆஸ்துமா பற்றிய உண்மைகள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Asthma, World Asthma Day