இன்றைய மருத்துவ வளர்ச்சியில் என்ன தான் புதிய புதிய சிகிச்சை முறைகள் அறிமுகப்படுத்தபட்டாலும், இன்னும் சில நோய்களுக்கு நிரந்தர தீர்வு காண முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இவற்றில் ஒன்று தான் ஆட்கொல்லி நோயான புற்றுநோய் ( கேன்சர்). இந்நோயை ஆரம்பத்தில் கண்டறிந்தாலும் தவறாமல் கீமோதெரபி போன்ற சிகிச்சைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். இப்படித்தான் ஜப்பானில் மலக்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 60 வயதான பெண், கடந்த 14 மாதங்களுக்கு முன்னதாக புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்துள்ளார். தொடர்ச்சியாக கீமோதெரபி சிகிச்சைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் எவ்வித பக்கவிளைவுகளைக் குறைப்பதற்கு மினோசைக்ளின் கொடுக்கப்பட்டுள்ளது.
இவர் தினமும் 100 மி.கி அளவு மினோசைக்ளின் தொடர்ச்சியாக எடுத்துள்ளார். இதன் விளைவாக இவரின் முகம் சாம்பல் நிறத்தில் மாறியுள்ளது. சிகிச்சையின் காரணமாக இந்த பக்கவிளைவுகள் ஏற்பட்டிருக்கலாம் என அதற்கான சிகிச்சைகள் எடுத்துக்கொண்ட போது தான், அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு சம்பவம் அரங்கேறியது. ஆம் கீமோதெரபியின் பக்கவிளைவுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மினோசைக்ளின் என்ற பொதுவான ஆன்டிபயாடிக் மருந்தை உட்கொண்டதால், நோயாளியின் வாயில் வலி நிறைந்த கறுப்பு படலமும், நாக்கில் உள்ள சுவை மொட்டுகளைப் போன்று பழுப்பு நிறத்தில் முடியும் ( Black hairy Tongue – BHT) வளர்ந்துள்ளது. இவ்வாறு முடி வளர்ந்து நாக்கு கறுப்பு நிறமாக மாறியதைப் பார்த்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இதனையடுத்து மருத்துவர்கள் நடத்திய ஆய்வில், மினோசைக்ளின் ஆக்ஸிஜனேற்றப்படும் போது, கேன்சர் பாதிப்பில் உள்ள நோயாளிகளின் சருமம் கறுப்பு நிறமாக மாறும் என்பதோடு சரும நிறமாற்றத்திற்கும் வழிவகுக்கும் என கண்டறிந்தனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருந்துகளை மருத்துவர்கள் மாற்றிக்கொடுத்துள்ளனர். அதன் பின்னதாக ஆறு வாரங்களுக்குப் பிறகு அவருடை முகம் மற்றும் நாக்கு ஓரளவிற்கு இயல்பாக மாறிவிட்டது என்கின்றனர் மருத்துவர்கள். இருந்தப்போதும் வழக்கமாக கொடுக்கப்படும் ஆன்டிபயாடிக், இத்தகைய பாதிப்பை ஏற்படுத்தியது மருத்துவர்கள் உள்பட அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இன்றைக்கு நாம் முடி வளர்ந்து கருப்பு நிறமாக ஏன் நாக்கு மாறுகிறது என்றும் Black hairy Tongue – BHT குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம். குர்கானின் ஃபோர்டிஸ் மெமோரியல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் இன்டர்னல் மெடிசின் இயக்குனர் டாக்டர் சதீஷ் கவுல் தெரிவித்துள்ள தகவலின் படி, “கருப்பு முடி கொண்ட நாக்கு ஒரு தீங்கற்ற மீளக்கூடிய நிலையாகும் என தெரிவித்தார். அளவுக்கு அதிமாக வாயில் பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் வளர்வதால் ஏற்படும் பாதிப்பும் என்றும் நாவில் இறந்த சரும செல்கள் அதிகமாகும் போது இந்த பாதிப்பு ஏற்படுகிறது என்கின்றனர். இவை பாக்டீரியா, ஈஸ்ட், புகையிலை, உணவு மற்றும் பிற பொருட்களால் எளிதில் சிக்கிக் கொள்ளும்.
BHT பாதிப்பு ஆபத்தானதாகத் தோன்றினாலும், பொதுவாக எந்த உடல்நலப் பிரச்சினைகளுக்கும் வழிவகுக்காது என்கின்றர் மருத்துவர். மேலும் இந்த பாதிப்பால் நாக்கின் நிறமாற்றம் ஏற்படுவதோடு, நோயாளிக்கு வாய் துர்நாற்றம் மற்றும் கூச்ச உணர்வு போன்றவை ஏற்படக்கூடும்.
Also Read | நாக்கை வைத்தே உங்கள் ஆரோக்கியத்தை சொல்லிவிடலாம்… எப்படி தெரியுமா..?
இந்த பாதிப்பை நாம் எளிதில் கண்டறியமுடியாது, இருந்தப் போதும் நாம் அதிகமாக ஆன்டிபயாடிக் பயன்படுத்தும் போது, வாயில் அதிகளவு பாக்டீரியாக்கள் தேங்குகிறது. எனவே நீங்கள் சுடுதண்ணீர் பயன்படுத்தி அடிக்கடி வாய் கொப்பளிப்பது, சூடாக தண்ணீர் அல்லது டீ அருந்துதல் உள்பட ஆரோக்கியமான உணவுப் பொருள்களை சாப்பிட வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cancer, Tongue, Women Health