முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / பெண்களுக்கு அதிகரிக்கும் வலிப்பு நோய்.. என்ன காரணம்..? கட்டுப்படுத்தும் முறை என்ன..?

பெண்களுக்கு அதிகரிக்கும் வலிப்பு நோய்.. என்ன காரணம்..? கட்டுப்படுத்தும் முறை என்ன..?

வலிப்பு நோய்

வலிப்பு நோய்

பொதுவாக மாதவிலக்கு, பிரசவக் காலம், குழந்தை வளர்ப்பு போன்ற பல நிலைகளில் பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன், ரசாயன மாற்றங்கள் வலிப்பு நோயை உண்டாக்கும்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பிறந்த குழந்தை முதல், இளைஞர்கள், முதியவர்கள், பெண்கள் என அனைவரையும் பாதிக்கும் நோய்களில் ஒன்று தான் வலிப்பு நோய். குறிப்பாக ஆண்களை விட பெண்களுக்குத் தான் வலிப்பு நோய் அதிகளவில் ஏற்படுகிறது என்கிறது ஆய்வுகள். வலிப்பு நோய் அறிகுறிகள் என்பது ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒரே மாதிரிதான் என்றாலும், பெண்களுக்குக்கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. ஆம் பொதுவாகப் பெண்களுக்கே உரித்தான ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் வலிப்புகளை உருவாக்கும் தன்மை உடையது. அதே சமயம் ஆண்களிடம் உள்ள புரொஜெஸ்டீரான் ஹார்மோன் வலிப்புகளைக் கட்டுப்பத்தும் தன்மை உடையது என்கின்றனர் மருத்துவர்கள்.

பொதுவாக மாதவிலக்கு, பிரசவக் காலம், குழந்தை வளர்ப்பு போன்ற பல நிலைகளில் பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன், ரசாயன மாற்றங்கள் வலிப்பு நோயை உண்டாக்கும். இதோ வலிப்பு நோய் பாதிப்பில் உள்ள பெண்கள் என்னென்ன பாதிப்புகளை உடல் ரீதியாக ஏற்படுத்துகிறது? என்னவெல்லாம் செய்ய வேண்டும்? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்.

வலிப்பு நோய் உள்ள பெண்களுக்கு கருத்தடை (பிறப்பு கட்டுப்பாடு):

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், வலிப்புத்தாக்க எதிர்ப்பு மருந்துகள் ஹார்மோன் பிறப்புக் கட்டுப்பாட்டைக் குறைக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள். ஆனால் சில சமயங்களில் ஹார்மோன் பிறப்புக் கட்டுப்பாடு ஆண்டிசைசர் மருந்துகளை குறைவான செயல்திறன் மிக்கதாக மாற்றும்.மேலும் வலிப்பு நோய் உள்ள பெண்களுக்கு கருத்தடைக்கானத் தடுப்பு முறைகள் அல்லது கருப்பையக சாதனத்தை பயன்படுத்துவது மிகவும் பொருத்தமானது.

பெண்களில் கால்-கை வலிப்பு மற்றும் கருவுறுதல்:

சமீபத்தில் நடத்திய ஆய்வுகளின் படி, கால்- கை வலிப்பு உள்ள பெண்களுக்குக் குறைவான குழந்தைகள் உள்ளன என தெரிய வந்துள்ளது. அனோவுலேட்டரி சுழற்சிகள், பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம் ஆகியவை குழந்தைப் பிறப்பைத் தடுப்பதாக கூறப்பட்டாலும், கடந்த 2018 ஆம் ஆண்டு நடத்திய ஆய்வின் படி, மலட்டுத்தன்மை அல்லது தொடர்புடைய கோளாறுகளை முன்கூட்டியே கண்டறியாத பெண்கள், கால் – கை வலிப்பு உள்ள பெண்களைக் கண்டறியாதப் பெண்களுக்கு கருவுறுதல் தாமதாக நடைபெற்றது..

Also Read : மென்ஸ்சுரல் கப் பயன்படுத்துவதில் தயக்கம் இருக்கா..? இந்த பதிவை படியுங்கள்..!

கால்-கை வலிப்பு மற்றும் கர்ப்பம்:

கால்-கை வலிப்புடன் கூடிய பெரும்பாலான பெண்களுக்கு கர்ப்பகாலம் ஏற்படாமல் இருக்கும், இருப்பினும் சில பெண்களுக்கு குறிப்பாக கட்டுப்பாடற்ற வலிப்புகளை ஏற்படுத்தலாம். மேலும் சில நேரங்களில் குழந்தைகள் பிறந்தாலும் பல பிறப்பு குறைபாடுகளை அவர்களுக்கு ஏற்படுத்துகிறது என்கிறது ஆராய்ச்சிகள்.. குறிப்பாக வால்ப்ரோயிக் அமிலம், கார்பமாசெபைன், ஃபெனோபார்பிட்டல், ஃபெனிடோயின், டோபிராமேட் போன்ற பாதிப்புகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு முதுகெலும்பு பிரச்சனைகள், பிளவு உதடு, இதய நோய், தாமதமான பேச்சு, மொழி மற்றும் நினைவாற்றல் தொடர்பான பிரச்சனைகளை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

எனவே தான் ஃபோலிக் அமிலம் சப்ளிமெண்ட் கர்ப்பத்திற்கு முன்பே தொடங்கி, கர்ப்ப காலத்தில் ஆண்டிசைசர் மருந்துகளைக் கவனமாக தேர்வு செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. மேலும், கால்-கை வலிப்பு உள்ள பெண்களுக்கு குழந்தையின் வளர்ச்சியை சரிபார்க்க கூடுதல் பரிசோதனைகள், இரத்த சோதனைகள், ஸ்கேன்கள் தேவைப்படலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

தாய்ப்பால் மற்றும் வலிப்பு மருந்துகள்:

புதிதாகப் பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது, குழந்தையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், பிணைப்பு மற்றும் தாய்மை அனுபவத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும்பெரும்பாலான ஆண்டிசைசர் மருந்துகளுக்கு, தாய்ப்பாலில் மருந்தின் அளவு மிகவும் குறைவாக உள்ளது. எனவே தான் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பது பாதுகாப்பானது.

இருந்தப் போதும் உங்கள் குழந்தைகளுக்கு என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகிறது? என்பது குறித்து ஆராய வேண்டும். குறிப்பாக குழந்தைகள் அதிக நேரம் விழித்து இருப்பது, தூக்கம், எடை அதிகரிக்காமல் இருப்பது மற்றும் வளர்ச்சிப் பிரச்சனைகள் போன்றவற்றைக் கண்காணிக்க வேண்டும். குழந்தையின் நீண்ட தூக்கத்தின் தொடக்கத்தில் ஒரு நாளைக்கு ஒரு முறை மருந்து உட்கொள்வது, மருந்தை உட்கொள்வதற்கு முன் உடனடியாக குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது சிறந்தது.

கால்-கை வலிப்பு நோயால் சமூகத்தில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள்:

பொதுவாக கை, கால் வலிப்பு நோய் ஏற்படும் பெண்களுக்கு மனரீதியாக மட்டுமில்லாது சமூகத்தில் பல பிரச்சனைகளையும் அவர்களுக்கு ஏற்படுத்துகிறது. பொதுவாக இந்நோய் பாதிப்பு உள்ள பெண்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, சுயமரியாதை கிடைக்காமல் இருப்பது, உறவுகளில் சிக்கல்கள் போன்ற பிரச்சனைகளை சந்திக்கின்றனர். குறிப்பாக வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் குடும்பங்களால் ஏளனம், புறக்கணிப்பு மற்றும் கணவன் கைவிடுதல் போன்றவை ஏற்படுகிறது.

Also Read : கருத்தடை சாதனங்களை பயன்படுத்தும் முன் இந்த விஷயங்களை ’கண்டிப்பா’ தெரிஞ்சுக்கோங்க..!

top videos

    இதுப்போன்ற சூழலில் தான், வலிப்பு என்பது நோயின் அறிகுறியே தவிர ஒரு நோய் அல்ல என்பதை முதலில் அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டும். இது மூளையில் செயல்பாட்டைப் பாதிக்கும் நிலையை உடல் உங்களுக்கு உணர்த்தும் அறிகுறிகள் என்பதை உணர்ந்து நீங்கள் செயல்பட வேண்டும். பொதுவாக பெண்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை நீங்கள் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கின்றனர் சுகாதார நிபுணர்கள்.

    First published:

    Tags: Epilepsy, Women Health