முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / வெயிலில் இருந்து தப்பிக்க என்ன வழி...? மருத்துவர் சொல்லும் டிப்ஸ் இதோ...!

வெயிலில் இருந்து தப்பிக்க என்ன வழி...? மருத்துவர் சொல்லும் டிப்ஸ் இதோ...!

வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என தகவல்

வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என தகவல்

summer heat | வெயிலில் இருந்து நம்மை பாதுகாப்பாக காத்துக்கொள்ள என்னென்ன செய்ய வேண்டும் என்று மருத்துவர் சரவணன் பாரதி விளக்குகிறார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாடு முழுவதும் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றும் பட்சத்தில் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்று மருத்துவர் சரவணன் பாரதி தெரிவித்துள்ளார். 

1. வெயில் காலத்தில் பருத்தி உடைகளை உடுத்த வேண்டும்.

2. உடலை முழுமையாக மறைக்கும் ஆடைகளை அணிய கூடாது.

3. வெயில் நேரத்தில் வெளியே சென்றால் குடை எடுத்து செல்லலாம்.

4. வெயிலில் வேலை பார்க்கும் நேரத்தை குறைக்க வேண்டும்.

5. நாள்தோறும் ஆண்கள் 4 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும்.

6. பெண்கள் 3 லிட்டர் வரை தண்ணீர் பருக வேண்டும்.

7. பெண்கள் ஜீன்ஸ் போன்ற ஆடைகளை அணிவதை தவிர்க்க வேண்டும்.

8. ஏசி அறையில் இருப்பவர்கள் நீர் பருகாவிட்டால் உடல் சோர்வு ஏற்படும்.

9. நீச்சல் குளங்களுக்கு செல்லும் போதும் தண்ணீர் பருக வேண்டும்.

10. குளிர் பானங்களில் சர்க்கரை அதிகமாக இருக்கும்.

11. பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட குளிர் பானங்களை தவிர்க்கலாம்.

' isDesktop="true" id="979321" youtubeid="rMipck7e0a8" category="health">

12. குழந்தைகளை மதியம் 12 முதல் 4 மணி வரை வெளியே அனுமதிக்க கூடாது.

13. குழந்தைகள் வீடு திரும்பியதும் கை, கால்களை கழுவி விட வேண்டும்.

14. பெரியவர்களுக்கு நீர் ஆதாரங்களை அதிகளவில் தர வேண்டும்.

top videos

    15. நீர் சத்து உள்ள பழங்கள், இளநீர், நுங்கு சாப்பிடுவது அவசியம்.

    First published:

    Tags: Health, Heat Wave, Summer