முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / மருக்கள் தொற்று மூலம் மற்றொருவருக்கு பரவுகிறதா..? இதை எப்படி தவிர்ப்பது..?

மருக்கள் தொற்று மூலம் மற்றொருவருக்கு பரவுகிறதா..? இதை எப்படி தவிர்ப்பது..?

மரு

மரு

பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடும் எவருக்கும், தங்கள் துணைக்கு வைரஸ் இருக்கும் பட்சத்தில் HPV தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. HPV உள்ளவர்களின் வெவ்வேறு உடல் பாகங்களில் அல்லது பிறப்புறுப்பு பகுதிகளில் மருக்கள் தோன்றலாம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

மருக்கள் (Warts) என்பவை யாருமே விரும்பாத அழகற்ற ஒரு ஸ்கின் கண்டிஷன் ஆகும். Human papilloma virus-ஆல் (HPV) தோலில் ஏற்படும் புடைப்புகளே மருக்கள். இவை பெரும்பாலும் கை அல்லது கால்களிலும் வளரும். என்றாலும் இது உடலின் மற்ற பகுதிகளிலும் கூட வரலாம்.

ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் என்பது ஒரு தொற்று ஆகும். 15,000 க்கும் மேற்பட்ட வைரஸ்கள் HPV வைரஸ் வகையை உருவாக்குகின்றன. 15,000-க்கும் மேற்பட்ட வைரஸ்கள் HPV வைரஸ் கேட்டகிரியை உருவாக்குகின்றன. உண்மையில் STD/STI, HPV உள்ளிட்டவை பாலியல் ரீதியாக பரவும் தொற்று அல்லது நோயாகும்.

பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடும் எவருக்கும், தங்கள் துணைக்கு வைரஸ் இருக்கும் பட்சத்தில் HPV தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. HPV உள்ளவர்களின் வெவ்வேறு உடல் பாகங்களில் அல்லது பிறப்புறுப்பு பகுதிகளில் மருக்கள் தோன்றலாம். மருக்கள் பற்றி காஸ்மெடிக் ஸ்கின் கிளினிக்கை சேர்ந்த பிரபல அழகுசாதன நிபுணரும், அழகியல் மருத்துவருமான டாக்டர் கருணா மல்ஹோத்ரா பேசுகையில், மருக்கள், மச்சங்கள் மற்றும் ஸ்கின் டேக்ஸ் இவை ஒவ்வொன்றும் இயற்கையில் தனித்துவமானது மற்றும் வேறுவேறு காரணங்களால் ஏற்படுகிறது. எனினும் இவற்றுக்கு இடையேயான வேறுபாடுகள் பெரும்பாலும் தெளிவாக இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

மருக்கள் எப்படி பரவுகிறது?

பாலியல் ரீதியாக பரவும் தொற்று மருக்கள் HPV தவிர கைகுலுக்குவது, பலர் தொட்ட கதவு கைப்பிடிகள், பலர் பயன்படுத்தும் கீபோர்ட்ஸ்களை பயன்படுத்துதல் போன்றவற்றின் மூலம் தோல் தொடர்பு மூலமாகவும் பரவுகிறது. தவிர செருப்பு அல்லது ஷூக்களை ஷேர் செய்து கொள்வது, டவலை ஷேர் செய்து கொள்வதும் மருக்களை ஏற்படுத்துகிறது. சுருக்கமாக சொன்னால் ஏற்கனவே மருக்களால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து தொற்றிக்கொள்கின்றனர். உங்களுக்கு சமீபத்தில் ஏதேனும் தோல் மருக்கள் ஏற்பட்டிருந்தால், சில நாட்களுக்கு முன் நீங்கள் ஒரு மருவை உண்டாக்கும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று அர்த்தம்.

ஆபத்தில் இருப்பவர்கள்...

மிகவும் சென்சிட்டிவ் அல்லது டேமேஜ்-ஆன அல்லது ஈரமான சருமத்தை கொண்ட நபர்கள் மருக்களை ஏற்படுத்தும் தொற்றால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு, நீண்டகால மன அழுத்தம், ஹார்மோன் கோளாறுகள் மற்றும் ரேடியேஷனுக்கு வெளிப்படுவது, தொழில்துறை நகரங்களில் காணப்படும் ரசாயன உமிழ்வுகள், அதிக எண்ணெய் உணவுகள் அல்லது ஜங்க் உணவுகள் போன்ற வெளிப்புற விளைவுகள் காரணமாகவும் கூட சிலருக்கு மருக்கள் வருவதற்கான ஆபத்து உள்ளது. ஸ்பாக்கள், நீச்சல் குளங்கள், ஜிம்கள் அல்லது கிளப்புகள் போன்ற Warm மற்றும் Humid காற்று உள்ள பகுதிகளில் Wart வைரஸ் மிக வேகமாக பரவுகிறது.

Also Read | முகம், கழுத்து என மருக்கள் அசிங்கமான தோற்றத்தை உண்டாக்குகிறதா..? தானாக உதிர வைக்கும் வீட்டு வைத்தியம்

மருக்களில் இருந்து தப்பிப்பதற்கான முன்னெச்சரிக்கைகள்...

உடலில் Skin Warts ஏற்படுவதை தடுப்பதற்கான முதல் மற்றும் முக்கிய வழி மருக்களை ஏற்படுத்தும் வைரஸுடன் நாம் நேரடியாக தொடர்பு கொள்வதை தவிர்ப்பதே. எனவே ஒவ்வொரு முறையும் நீங்கள் எந்த பொருளையும் தொடும் முன் உங்கள் கைகளை நன்கு கழுவி கொள்ளுங்கள். உங்கள்து செருப்பு, ஷூ அல்லது டவலை யாருடனும் ஷேர் செய்து கொள்ளாதீர்கள்.

நீங்களும் யாருடைய பொருட்களையும் பயன்படுத்தாதீர்கள். குளிர் அல்லது கோடை எந்த சீசனாக இருந்தாலும் உங்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும் ஈரப்பதமாகவும் வைத்திருங்கள். உங்கள் சருமத்தை நீண்ட நேரம் உலர விடாதீர்கள். விரல் நகங்களை கடிக்காதீர்கள், ஷேவிங் செய்யும் போது உங்கள் சருமத்தை கிழிக்காத அல்லது வெட்டாத தரமான ரேஸரை பயன்படுத்துங்கள்.

மருக்களுக்கான சிகிச்சை...

சில வகை மருக்களுக்கு மருத்துவ ரீதியான சிகிச்சை தேவையில்லை, அது தானாகவே சரியாலாம். ஒருவேளை உங்களுக்கு இருக்கும் மருக்கள் ரத்தப்போக்கு அல்லது வலியை ஏற்படுத்தினால் தோல் மருத்துவரைப் பார்க்கவும். தேவைப்பட்டால் மருக்களை அகற்றுவதற்கான விருப்பங்களை அவர் வழங்கலாம்.
இதற்கான கெமிக்கல் சிகிச்சையில் மருக்கள் ஆசிட்ஸ், அல்காலிஸ் அல்லது சாலிசிலிக் ஆசிட் கொண்ட மருந்துகள் மூலம் அகற்றப்படும். இந்த சிகிச்சையில் சிறிது சிறிதாக மருவின் அடுக்குகள் அகற்றப்படுகிறது.
மருக்களை அகற்ற தனித்தன்மை வாய்ந்த சிகிச்சையாக இருக்கிறது லேசர் முறை. இதில் மிக விரைவாக மருக்கள் அகற்றப்படுகின்றன. இந்த முறையில் வலி குறைவு, தழும்பு முழுவதுமாக அகற்றப்பட்டு விடும். நீங்கள் மருக்களை அகற்ற லேசர் செய்வதாக இருந்தால் சிறந்த மற்றும் சான்றளிக்கப்பட்ட மருத்துவரிடம் செல்வது நல்லது.
First published:

Tags: Skin allergy, Skin Disease, Wart, Warts