முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / எழுந்து நின்றாலே தலை சுற்றுகிறதா..? வெர்டிகோ பிரச்சனை இருக்கானு உடனே செக் பண்ணுங்க.!

எழுந்து நின்றாலே தலை சுற்றுகிறதா..? வெர்டிகோ பிரச்சனை இருக்கானு உடனே செக் பண்ணுங்க.!

Vertigo

Vertigo

தலைச்சுற்றல், ஒன்று அல்லது இரண்டு காதுகளிலும் கேட்கும் திறன் இழப்பு, பேலன்ஸ் செய்ய முடியாமல் திடீரென விழுவது, வாந்தி மற்றும் குமட்டல் உணர்வுகள் உள்ளிட்டவை வெர்டிகோ அறிகுறிகளாகும்.

 • Last Updated :
 • Tamil Nadu, India

திடீரென காரணமே இல்லாமல் சிலருக்கு அவர்களை சுற்றி இருக்கும் மனிதர்கள் மற்றும் பொருட்கள் சுற்றுவது போல இருக்கும். இது போன்ற தலைசுற்றலால் அவர்கள் ஒரு சில வினாடிகளில் நிலைதடுமாறி போவார்கள். மயக்கம் வருவது போல கிறுகிறுவென்று வரும்.

சுழலும் உணர்வால் வகைப்படுத்தப்படும் இந்த நிலை வெர்டிகோ (vertigo) என குறிப்பிடப்படுகிறது. வெர்டிகோவால் ஏற்படும் பாதிப்புகளின் தீவிரம் லேசானது முதல் கடுமையானது வரை இருக்க கூடும். இந்த வெர்டிகோ பிரச்சனையானது உடலை பேலன்ஸ் செய்வதில் மற்றும் தினசரி செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க பாதிப்புகளை ஏற்படுத்தும். நின்று கொண்டிருக்கும் போது அல்லது உட்கார்ந்திருக்கும் போது பேலன்ஸை பராமரிப்பதை கடினமாக்குகிறது.

வெர்டிகோ பாதிப்பின் அறிகுறிகளில் கவனம் செலுத்துவதில் ஏற்படும் சிரமம், தலைச்சுற்றல், ஒன்று அல்லது இரண்டு காதுகளிலும் கேட்கும் திறன் இழப்பு, பேலன்ஸ் செய்ய முடியாமல் திடீரென விழுவது, வாந்தி மற்றும் குமட்டல் உணர்வுகள் உள்ளிட்டவை அடங்கும். தலை அல்லது உடலை அசைக்காத போதும் கூட அவை கட்டுப்பாட்டில் இல்லாமல் அசைவதை போன்ற ஒரு பிரமையை இந்நிலை ஏற்படுத்துகிறது.

வெர்டிகோவை 2 முக்கிய வகைகளாக வகைப்படுத்தலாம். ஒன்று பெரிஃபெரல் வெர்டிகோ (Peripheral Vertigo) மற்றொன்று சென்ட்ரல் வெர்டிகோ (Central Vertigo).

பெரிஃபெரல் வெர்டிகோ:

இந்த வகை வெர்டிகோ உள்காது மற்றும் வெஸ்டிபுலர் நரம்பு ஆகியவற்றை உள்ளடக்கிய பெரிஃபெரல் வெஸ்டிபுலர் சிஸ்டமில் (Peripheral vestibular system) உள்ள பிரச்சனையால் ஏற்படுகிறது. பெரிஃபெரல் வெர்டிகோ ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள் பின்வருமாறு:

 • மெனியர்ஸ் நோய், labyrinthitis (உள் காது அழற்சி) அல்லது உள்காதில் உள்ள சிறிய கால்சியம் கிரிஸ்டல்களின் இடப்பெயர்ச்சியால் ஏற்படும் BPPV போன்ற நிலைகள்.
 • தலையில் அடிபடுவதால் ஏற்படும் கடும் அதிர்ச்சி அல்லது காயங்கள், குறிப்பாக உள்காது பகுதியில். இதன் காரணமாகவும் பெரிஃபெரல் வெர்டிகோ நிலை ஏற்படலாம்.

சென்ட்ரல் வெர்டிகோ:

மத்திய நரம்பு மண்டலத்தில் (Central nervous system) குறிப்பாக மூளையின் தண்டு அல்லது சிறுமூளையில் ஏற்படும் பிரச்சனையால் சென்ட்ரல் வெர்டிகோ ஏற்படுகிறது. இந்த வகை வெர்டிகோ ஏற்படுவதற்கான காரணங்கள் பின்வருமாறு:

 • மல்டிபிள் ஸ்களீரோசிஸ் (Multiple sclerosis), வலிப்பு அல்லது பக்கவாதம் போன்ற நிலைகள் மத்திய நரம்பு மண்டலத்தின் இயல்பான செயல்பாட்டை சீர்குலைத்து சென்ட்ரல் வெர்டிகோ நிலை ஏற்பட வழிவகுக்கும்.
 • மூளையை பாதிக்கும் சில வாஸ்குலர் கோளாறுகள் (Vascular disorders) இந்த வெர்டிகோவை ஏற்படுத்தலாம்.
 • தலைச்சுற்றலுடன் கூடிய மைக்ரேன் தலைவலி மற்றும் பிற வெஸ்டிபுலர் அறிகுறிகள் சென்ட்ரல் வெர்டிகோவின் கீழ் வரும்.

சிகிச்சை:

இங்கிலாந்தில் உள்ள நேஷ்னல் ஹெல்த் சர்விஸின் (NHS) படி, Benign positional vertigo-வின் அறிகுறிகளை குறைக்க மற்றும் போக்க சுகாதார நிபுணர் Epley manoeuvre-ஐ பயன்படுத்தலாம். குமட்டல் மற்றும் வாந்தி உள்ளிட்ட பெரிஃபெரல் வெர்டிகோ அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்க மருத்துர் சில மருந்துகளை வழங்கலாம். பிசிக்கல் ட்ரீட்மென்ட் மூலம் பேலன்ஸ் பிரச்சனைகள் மேம்படுத்தப்படலாம். தவிர வழக்கமான உடற்பயிற்சி பாதிக்கப்பட்டவரின் பேலன்ஸை மீட்டெடுக்க மற்றும் தசைகளை வலுப்படுத்தவும், திடீரென்று கீழே விழுவதை தடுக்க உதவும்.

Also Read | கர்ப்ப காலத்தில் தலைசுற்றல் இருந்தால் சத்து இல்லை என்று அர்த்தமா..?

top videos

  உங்களுக்கு வெர்டிகோ பிரச்சனை இருந்தால் உங்களுக்கு மருத்துவர் சிகிச்சையளிக்கும் போது நீங்கள் முயற்சி செய்யக்கூடிய சில விஷயங்கள் இங்கே உள்ளன. உதாரணமாக, நீங்கள் தூங்கும் போது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தலையணைகளை பயன்படுத்தி உங்கள் தலையை சற்று உயர்த்தி வைத்து கொள்ளலாம். படுக்கையில் இருந்து எழுந்திருக்கும் போது பொறுமையாக, மெதுவாக எழலாம். பொருட்களை குனிந்து எடுக்காமலிருக்க முயற்சிக்கவும். உயரமான அலமாரியில் இருக்கும் பொருளை எடுக்கும் போது கழுத்தை ஸ்ட்ரெச்சிங் செய்வதை தவிர்க்கவும். தலையை அசைக்கும் போது மெதுவாக, கவனமாக அசைக்கவும்.

  First published:

  Tags: Dizziness, Headache, Health