காஸ்ட்ரோபரேசிஸ் அல்லது இரைப்பை வாதம் என்பது வயிற்றில் உள்ள உணவுப் பொருட்கள் நீண்ட நேரத்திற்கு வெளியேறாமல் வயிற்றிலே தங்கிவிடும் ஒரு கோளாறு ஆகும். குமட்டல், வாந்தி நெஞ்செரிச்சல், வயிற்று உப்புசம், அடி வயிற்றில் வலி மற்றும் சிறிதளவு உணவு சாப்பிட்ட பின்னரே வயிறு நிரம்பியது போன்ற உணர்வு போன்றவை இதற்கான அறிகுறிகள்.
இரைப்பை வாதம் ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் இது நீரழிவு நோயாளிகளில் அடிக்கடி காணப்படுகிறது. ஒரு சில நோயாளிகளில் இதற்கான காரணம் அறியப்படாத போது அது இடியோபாத்திக் காஸ்ட்ரோபரேசிஸ் என்று அழைக்கப்படுகிறது. இரைப்பை வாதத்தை கண்டறிவதற்கு பல்வேறு விதமான பரிசோதனைகள் உள்ளன. இதனை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்தால் பிரச்சனையை எளிதில் சமாளிக்க உதவும்.
இரைப்பை வாதம் கோளாறுகளால் அவதிப்படும் நோயாளிகள் உணவு உண்பதில் சிக்கலை அனுபவிப்பார்கள். இதன் காரணமாக, அவர்களின் கலோரி உட்கொள்ளல் குறைகிறது. இதன் விளைவாக வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் குறைபாடு ஏற்படுகிறது. இரைப்பை வாதத்தை எதிர்கொள்ள ஒருவர் தனது உணவு மற்றும் வாழ்க்கை முறை ஆகிய இரண்டிலும் ஒரு சில மாற்றங்களை செய்ய வேண்டி இருக்கும்.
இரைப்பை வாத நோயாளிகள் பின்பற்ற வேண்டிய உணவு மற்றும் வாழ்க்கை முறை பரிந்துரைகள்:
1) ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு சாப்பிடுவதற்கு பதிலாக, அதனை பிரித்து நான்கு முதல் ஐந்து முறையாக சாப்பிடலாம்.
2) உணவின் போது போதுமான அளவு திரவங்களை பருகுங்கள்.
3) கொழுப்பு மற்றும் நார்ச்சத்து இரைப்பையை காலியாக்க அதிக நேரத்தை எடுத்துக் கொள்வதால், குறைந்த கொழுப்பு மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுவை சாப்பிடவும்.
4) நார்ச்சத்து நிறைந்துள்ள பழங்களான ஆரஞ்சு, வாழைப்பழம், கொய்யாப்பழம் மற்றும் மாம்பழம் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
5) ப்ராக்கோலி, முட்டைக்கோஸ், குடைமிளகாய் மற்றும் பீன்ஸ் போன்ற நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை தவிர்த்து விடுங்கள்.
6) பழங்கள் மற்றும் காய்கறிகளின் தோல் மற்றும் விதைகளை உண்ண வேண்டாம்.
Also Read | தலையில் அடிபட்டால் இத்தனை பாதிப்புகள் வருமா..? கவனமாக இருக்க டிப்ஸ்..!
7) சீஸ், க்ரீம், அதிகப்படியான எண்ணெய் மற்றும் வெண்ணெய் போன்ற அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்த்து விட்டு குறைந்த கொழுப்புள்ள உணவு முறையை பின்பற்றவும்.
8) உணவு உண்ட பிறகு ஒரு சிறிய தூரம் நடை பயிற்சி செல்வது போன்ற உடல் செயல்பாட்டில் ஈடுபடுவது உங்களுக்கு உதவக்கூடும்.
9) மருத்துவரின் ஆலோசனையின் கீழ், மல்டிவைட்டமின் மாத்திரைகளை தினமும் சாப்பிடவும்.
10) உணவு உண்ட 2 மணி நேரத்திற்கு முன்பு படுக்கைக்கு செல்வதை தவிர்க்கவும்.
11) கார்பனேற்றப்பட்ட பானங்கள் கார்பன்-டை-ஆக்சைடை வெளியிடுவதால், அது இரைப்பை வாதத்திற்கான அறிகுறிகளை அதிகரிக்கும். ஆகவே இது போன்ற பானங்கள் அருந்துவதை முற்றிலுமாக தவிர்க்கவும்.
12) புகை பிடித்தல் மற்றும் மது அருந்துதலை முற்றிலுமாக தவிர்ப்பது இரைப்பையை விரைவில் காலியாக்க உதவும்.
பொதுவாக இரைப்பை வாத நோயாளிகளில் திரவங்களை வயிற்றிலிருந்து காலியாக்கும் பண்பில் எந்த ஒரு கோளாறும் இருக்காது. ஆகையால் அவர்கள் திரவ ஊட்டச்சத்துக்களை உணவு மூலமாக எடுத்துக் கொள்வது, ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏற்படுவதை தடுக்க உதவும். சூப்புகள், பியூரிகள் போன்றவற்றை சாப்பிடுவது இரைப்பையை விரைவில் காலியாக்க உதவிபுரியும்.
அதோடு நீரழிவு நோயாளி நோயாளிகள் தங்களது ரத்த சர்க்கரை அளவை சீராக பராமரிக்க வேண்டும். ஏனெனில் சரியான ரத்த சர்க்கரையளவு இரைப்பை காலி ஆக்குதலை விரைவுப்படுத்தும்.
Also Read | சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்க இதை மட்டும் செய்தாலே போதும்!
மேலே கூறப்பட்ட அனைத்தையும் பின்பற்றிய பிறகும் இரைப்பை வாதத்திற்கான அறிகுறிகள் தொடர்ந்து தென்படுமாயின், காஸ்ட்ரோஎன்டலாஜிஸ்ட் அல்லது சிறப்பு டயட்டீஷியனை ஆலோசிப்பது நல்லது.
அவர்கள் உங்களை முழுவதுமாக பரிசோதித்து, அதற்கான மருந்துகள் அல்லது தேவைப்பட்டால் அறுவை சிகிச்சை மூலம் உங்களுக்கான தீர்வை அளிப்பார்கள். சுருக்கமாகச் சொன்னால், குறைந்த கொழுப்பு மற்றும் குறைந்த நார்ச்சத்து உள்ள உணவுகளை சாப்பிடுவது இரைப்பை வாதம் தொடர்பான அறிகுறிகளை போக்குவதில் உதவியாக இருக்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Stomach Bloating, Stomach Pain