முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / கர்ப்பகாலத்தில் ஆசிட் ரிஃப்ளக்ஸ்.. எது சாப்பிட்டாலும் மந்தமாக உள்ளதா..? மருத்துவர் தரும் டிப்ஸ்..!

கர்ப்பகாலத்தில் ஆசிட் ரிஃப்ளக்ஸ்.. எது சாப்பிட்டாலும் மந்தமாக உள்ளதா..? மருத்துவர் தரும் டிப்ஸ்..!

Acid reflux

Acid reflux

டாக்டர் அனு ஜோசப், மூத்த ஆலோசகர், OBG மற்றும் கரு மருத்துவம் MaaKauvery, காவேரி மருத்துவமனையின் எலக்ட்ரானிக் சிட்டியின் ஒரு பிரிவு, பெங்களூரு ஆசிட் ரிஃப்ளக்ஸ் பிரச்சனையை சமாளிக்க கர்ப்பிணிகளுக்கு உதவும் டிப்ஸ்கள் குறித்து விளக்குகிறார்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Tamil Nadu, India

கர்ப்ப காலத்தில் ஆசிட் ரிஃப்ளக்ஸ் பொதுவானது என்றாலும், சூழல் இப்படி இருப்பதை போல கற்பனை செய்து பாருங்கள். ஒரு பெண் கர்ப்பம் அடைந்ததில் இருந்து 9 மாதங்கள் வரை அவர் எந்த செரிமான பிரச்சனையையும் எதிர்கொள்ளவில்லை.

தூக்கமில்லாத இரவுகள், கால்களில் வீக்கம் , குமட்டல் அல்லது வாந்தி, வலிகள் என எந்த சிக்கலையும் எதிர்கொள்ளவில்லை. இறுதியாக 9 மாத முடிவில் பிரசவ வலி கூட இல்லாமல் அழகான குழந்தை பிறந்தால் எப்படி இருக்கும்.! ஒருவேளை மேற்சொன்ன அனைத்தும் ஒரு கர்ப்பிணியின் வாழ்வில் நடந்தால் அவரது கர்ப்பகால அனுபவம் எவ்வளவு ஈசியாக இருக்கும்...

ஆனால் உண்மையில் கர்ப்ப காலத்தை பொதுவாக சிறிய மற்றும் பெரிய சிக்கல்களுடன் தான் ஒவ்வொரு கர்பிணியும் எதிர்கொள்கின்றனர். இது போன்ற சிறிய அல்லது பெரிய பாதிப்புகள் கர்ப்பம் கண்டறியப்பட்ட முதல் நாளில் தொடங்கி 9 மாதங்கள் முழுவதும் நீடிக்கும். சில சமயங்களில் போஸ்ட் டெலிவரி பீரியட் வரையிலும் கூட இந்த சிக்கல்கள் நீடிக்கலாம். ஏற்கனவே குறிப்பிட்டப்படி கர்ப்பிணிகளுக்கு ஆசிட் ரிஃப்ளக்ஸ் பிரச்சனை ஏற்படுவது மிகவும் பொதுவானது.

வயிற்றில் அதிகப்படியான ஆசிட்ஸ் உற்பத்தியாவதால் ஏற்படும் அசௌகரியத்தை அல்லது வயிற்றில் வளரும் குழந்தை காரணமாக Back Pressure அதிகரிப்பதால் ஏற்படும் அசௌகரியத்தை விவரிக்கப் பயன்படுத்தப்படும் பொதுவான சொல் ஆசிட் ரிஃப்ளக்ஸ் (Acid Reflux) ஆகும். இதன் காரணமாக கர்ப்பிணிகள் வயிறு நிரம்பியதை போன்ற உணர்வு, நெஞ்செரிச்சல், ஏப்பம், புளித்த ஏப்பம் உள்ளிட்ட சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. எதுவும் சாப்பிடாமல் வெறும் வயிற்றில் நீண்ட நேரம் இருக்கும் போது அல்லது பொதுவாக எதையாவது சாப்பிட்ட உடனேயே அறிகுறிகள் மோசமாக இருக்கும்.

ஆசிட் ரிஃப்ளக்ஸ் பாதிப்பின் தீவிரத்தை குறைக்க கர்ப்பிணிகள் பல வாழ்க்கை முறை மாற்றங்களை முன்னெடுக்கலாம். இதன் ஒரு பகுதியாக கர்ப்பிணிகள் தங்களின் உணவுப் பழக்கத்தை மாற்றுவதில் கவனம் செலுத்தலாம்... OBG மற்றும் Fetal medicine நிபுணரான டாக்டர் அனு ஜோசப் கூறும் டிப்ஸ்களை கீழே பார்க்கலாம்.

- ஆசிட் ரிஃப்ளக்ஸை தவிர்க்க பொதுவாக வழங்கப்படும் அறிவுரைகளில் ஒன்று காரமான மற்றும் எண்ணெய் உணவுகளை அதிகம் சாப்பிடாமல் கட்டுப்படுத்துவது ஆகும்.

- ஒரு நாளுக்கு 3 வேளை சாப்பிடுவதற்கு பதில் 5 வேளை சாப்பிடலாம். அதற்காக வழக்கமான அளவு சாப்பாட்டை 5 வேளை எடுத்து கொள்ள கூடாது. வழக்கமாக ஒருவேளையில் எடுத்து கொள்ளும் உணவை விட, குறைவாக சாப்பிட்டு விட்டு, சில மணி நேரங்கள் கழித்து தேவையான அளவு மீண்டும் சாப்பிடலாம். கர்ப்பமாக இருப்பதால் அதிகம் சாப்பிட வேண்டும் என்பது ஒரு கட்டுக்கதை. தினசரி தேவைக்கேற்ப சாப்பிட வேண்டும் எனபதே முக்கியம்.

காஃபின் பானங்களை எடுத்து கொள்வதை குறைக்கவும்

  • நாளின் கடைசி வேளை உணவுக்கும் தூங்குவதற்கு இடையே 1-3 மணி நேரம் கேப் கொடுப்பது நல்லது

தோரணையில் கவனம்:

  • கர்ப்பிணிகள் சாப்பிடும் போது நிமிர்ந்து உட்கார்ந்து சாப்பிட வேண்டும்
  • தூங்கும் போது Minimal head elevation-ஐ பராமரிக்கவும்

கடைபிடிக்க வேண்டிய பழக்கங்கள்...

  • தினசரி சுமார் 3 லிட்டருக்கு மேல் தண்ணீர் மற்றும் திரவம் குடிக்கவும்
  • ஒவ்வொரு வேளை உணவு சாப்பிட்ட பிறகு குறைந்தது 15 நிமிடங்களாவது வாக்கிங் செல்லவும்
  • புகை மற்றும் மதுப்பழக்கம் இருந்தால் கர்ப்பகாலத்தில் முற்றிலும் தவிரக் வேண்டும்
  • எந்த சிக்கலுக்கும் சுயமருத்துவம் செய்து கொள்ள வேண்டாம்

Also Read | Pregnancy Care : கர்ப்பம் முதல் பிரசவம் வரை..ஆயுர்வேதத்தில் உள்ள மருத்துவம் என்னென்ன..? ஏன் அவசியம்..? 

கர்ப்பகாலத்தில் கடுமையான வாந்தி, வயிற்று வலி அல்லது எடை இழப்பு போன்ற அறிகுறிகளை ஒருவர் அனுபவித்தால், அதை உங்கள் மருத்துவரின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். அறிகுறிகளை தணிக்க மருத்துவரின் ஆலோசனையுடன் கர்ப்பகாலத்தில் பாதுகாப்பான மருந்துகளை எடுத்து கொள்ளலாம்.

First published:

Tags: Acidity, Pregnancy changes