பெண்களின் ஆரோக்கியம் பாலினம் சார்ந்த பல்வேறு சிக்கல்களை உள்ளடக்கியது. பெண்களின் மிகப்பெரிய உடல்நலப் பிரச்சனைகளில் ஒன்றாக, சமீபமாக புற்றுநோய் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும், உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பெண்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே புற்று நோய் பற்றிய கட்டுக்கதைகள் மற்றும் தவறான தகவல்கள் அதிகமாகவும் இருக்கிறது. இப்படி ஒரு நோய் இருக்கிறது என்பதையே அவமானமாகக் கருதும் நிலையம் உள்ளது. எனவே, இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவது முக்கியம் என மருத்துவர் புஷ்பா நாகா சி எச் பேசியுள்ளார். கதிர்வீச்சு புற்றுநோயியல் துறை, ஆஸ்டர் சிஎம்ஐ மருத்துவமனை, பெங்களூரு.
"புற்றுநோய்" என்ற சொல்லைக் கேட்டாலே இறப்பு தான் அதிகம் என்று பரவலாக அறியப்பட்டாலும், கிட்டத்தட்ட 40% அளவுக்கு புற்றுநோயால் ஏற்படக்கூடிய இறப்புகள் தடுக்கக்கூடியவை. மேலும், பொதுவான புற்றுநோய்களில் குறைந்தது மூன்றில் இரண்டு பெண்களுக்கு, சரியான நோயைக் நேரத்தில் கண்டறிதல் மூலம் குணப்படுத்தப்படுகின்றன.
விரிவான மற்றும் முழுமையான விழிப்புணர்வு நிகழ்வுகள், தடுப்பு நடவடிக்கைகள், குறிப்பிட்ட கால அளவில் பரிசோதனை திட்டங்கள், முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் தகுந்த சிகிச்சை ஆகியவை மூலம் ஒவ்வொரு ஆண்டும் பல பெண்களின் உயிரைக் காப்பாற்ற முடியும்.
ஒவ்வொரு புற்றுநோயும், அதன் தாக்கமும் ஒவ்வொரு நபரிடமும் வேறுபாடும். எனவே ஒரே மாதிரியான அணுகுமுறை அனைவருக்கும் பொருந்தாது, மேலும் ஒவ்வொரு நபருக்கும் அளிக்க வேண்டிய சிகிச்சை முறை வேறுபாடும்.
மார்பகம், கருப்பை வாய், கருப்பை, பெண்ணுறுப்பு, நுரையீரல், பெருங்குடல் மற்றும் தோல் ஆகியவை இந்தியாவில் பெண்களுக்கு ஏற்படும் பொதுவான புற்றுநோய்களாகும். புற்றுநோயை உருவாக்கும் ஆபத்து, பரம்பரை / மரபியல், சுற்றுச்சூழல் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றின்படி மாறுபடும்.
புற்றுநோய் ஏற்படக்கூடிய ஆபத்துகள் என்பது குடும்ப வரலாறு, வயது அதிகரிப்பு, உடல் பருமன், மது அல்லது புகையிலை பழக்கம், ஆரோக்கியமற்ற உணவுமுறை, இனப்பெருக்கம் சார்ந்த நோய்கள், சுகாதாரமின்மை, இளம் வயதில் அல்லது பல நபர்களுடன் பாலியல் ஈடுபாடு, நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், கதிர்வீச்சு/ரசாயனங்களின் வெளிப்பாடு மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை குறைக்கும் வைரஸ் (HIV), ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (HPV) தொற்று, ஹெபடைட்டிஸ் வைரஸ்கள், ஹெலிகோபாக்டர் பைலோரி மற்றும் பல்வேறு வகை நுன்கிருமிகளால் ஏற்படும் சில குறிப்பிட்ட தொற்றுகள் ஆகியவை அடங்கும்.
இருப்பினும், மூன்றில் ஒரு பெண்ணுக்கும் அதிகமான ஏற்படக்கூடிய புற்றுநோய் பாதிப்பில் இதுபோன்ற ஆபத்து காரணிகள் எதுவும் வெளிப்படையாக இருக்காது.
also read : உங்கள் மச்சத்தை வைத்தே உங்க பர்சனாலிட்டியை கண்டுபிடிச்சிடலாம்..! எப்படி தெரியுமா?
பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை வாய், பிறப்புறுப்பு மற்றும் பிறப்புறுப்பு சார்ந்த உறுப்புகளின் புற்றுநோய் ஆகியவை HPV-யுடன் தொடர்புடைய புற்றுநோய்களால் ஏற்படலாம். இவற்றைத் தடுக்க, பாலியல் ரீதியாகப் பரவும் HPV, Cervarix™/ Gardasil™ ஆகியவற்றுக்கு எதிரான தடுப்பு தடுப்பூசியைப் பயன்படுத்தி, புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும் முயற்சியை மேற்கொள்ளப் பரிந்துரைக்கப்படுகிறது.
45 வயது வரை உள்ள அறிகுறிகளைக் கொண்டுள்ள பெண்களுக்கும், மற்றும் 9-15 வயதுடைய இளம் பருவத்தினருக்கு தற்போதைய HPV நோய்த்தடுப்பு தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
முதல் முறையாக உடலுறவு கொள்வதற்கு முன் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் புற்றுநோய் ஆபத்துக் குறையும்.
புற்றுநோய் வராமல் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது எப்படி?
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், குடும்ப வரலாற்றில் அல்லது புற்றுநோய் இல்லாதவர்கள், ஆண்டுதோறும் மேமோகிராபி, கர்ப்பப்பை வாய் பாப்-ஸ்மியர் பரிசோதனை, கருப்பை ஸ்கேனிங், வருடாந்திர கோல்போஸ்கோபி / சிக்மாய்டோஸ்கோபி மற்றும் / அல்லது மலம் அமானுஷ்ய இரத்த பரிசோதனை, மருத்துவ வாய்வழி பரிசோதனை ஏதேனும் மாற்றங்களைக் கண்டறிய உதவும்.
புற்றுநோயின் அறிகுறிகள் அல்லது எச்சரிக்கை அறிகுறிகள் ஆகியவற்றை ஆரம்பகாலத்தில் கண்டறிவது நோய் தீவிரமாகாமல் விரைவில் மீள உதவும்.
மார்பகத்தில் வீக்கம், கட்டி அல்லது அசாதாரணமான மாற்றங்கள், அசாதாரணமான வெளியேற்றம் அல்லது இரத்தப்போக்கு, நாள்பட்ட குணமடையாத புண், தோல் மாற்றங்கள், நாள்பட்ட இருமல், குரல் கரகரப்பு, குரலில் மாற்றம், விழுங்குவதில் சிரமம், வயிறு மற்றும் அல்லது இடுப்பு வலி, காரணமில்லாத எடை இழப்பு, பசியின்மை ஆகியவை புற்றுநோய் விளைவுகளை அதிகரிக்கலாம்.
also read : கொளுத்தும் வெயிலில் இருந்து உங்கள் கண்களை பாதுகாப்பாக வைத்திருக்க டிப்ஸ்!
ஒவ்வொரு புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகளும் வேறுபட்டவை. பெரும்பாலும், புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை, கீமோதெரபி, ஹார்மோன் சிகிச்சை மற்றும்/அல்லது நோயெதிர்ப்பு சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளின் கலவை அணுகுமுறையை கொண்டுள்ளது.
புற்றுநோயானது ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால் குணப்படுத்த முடியும். மிகவும் தீவிரமான நிலையில் பல்வேறு உடல் உறுப்புகளுக்கு பரவியிருந்தாலும், அது கட்டுப்படுத்தக்கூடியது தான்.புற்றுநோயாளிகளை நீண்ட காலம் வாழச் செய்யும் சிகிச்சைகள் இப்போது உள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Breast cancer, Cancer, Cancer Facts, Cancer symptoms, Ovarian Cancer