முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / இரவு சரியாக தூங்கவில்லை எனில் ஆஸ்துமா..? எச்சரிக்கும் ஆய்வு..!

இரவு சரியாக தூங்கவில்லை எனில் ஆஸ்துமா..? எச்சரிக்கும் ஆய்வு..!

ஆஸ்துமா

ஆஸ்துமா

நீங்கள் ஒவ்வொரு நாளும் வழக்கமான தூக்க அட்டவணையைப் பராமரிக்க வேண்டும். உங்களது மனதில் நீங்கள் எந்த நேரத்தில் தூங்க வேண்டும் மற்றும் எப்போது எழுந்திருக்க வேண்டும் என தீர்மானித்துக்கொள்ள வேண்டும்.

 • Last Updated :
 • Tamil Nadu, India

தூக்கம் என்பது ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் தேவைப்படக்கூடிய அத்தியாவசிய விஷயங்களில் ஒன்றாகிவிட்டது. தூக்கம் வராமல் ஒரு மனிதர் அவதிப்படுகிறார்கள் என்றாலே.. நிச்சயம் அவர்களின் மனம் மற்றும் உடல் நலத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்கின்றனர் மருத்துவர்கள்.

பொதுவாக நீரழிவு நோய், இதய நோய்கள், நினைவாற்றல் செயலிழப்பு, உயர் இரத்த அழுத்தம் போன்ற பல்வேறு உடல் நலப் பிரச்சனைகளுக்கு முறையற்ற தூக்கம் தான் முக்கிய காரணமாக அமைகிறது.

இந்த வரிசையில் தற்போது சேர்ந்துள்ளது ஆஸ்துமா பிரச்சனையும். ஆம் ஒரு மனிதர் ஒழுங்கற்ற தூக்கத்தை தன்னுடைய வாழ்நாளில் தொடர்ச்சியாக பின்பற்றுகிறார் என்றால் அவருக்கு ஆஸ்துமா பாதிப்பு ஏற்படும் என்கிறது சமீபத்திய ஆய்வுகள்.

ஆய்வு சொல்வது என்ன?....

சீனாவின் ஷான்டாங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். UK Biobank ஆய்வின் தரவுகளைப் பயன்படுத்தி, 38 முதல் 73 வயதுக்குட்பட்ட 4,05,455 பேரிடம் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளது. ஆய்வின் தொடக்கத்தில், மக்கள் தூங்கும் பழக்கம், தூக்கத்தின் காலம், அவர்கள் குறட்டை விடுகிறார்களா? அல்லது தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டவரா? நாள் முழுவதும் தூக்கம் வருமா? என கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்வியின் அடிப்படையில் தான் தூக்கத்திற்கும், ஆஸ்துமாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் குறித்து கண்டறிப்பட்டுள்ளது. தூக்கமின்மை பிரச்சனைகள் புதிய ஆஸ்துமா நோயறிதலின் ஆரம்ப குறிகாட்டியாக இருக்கலாம் என்று பரிந்துரைக்கிறது.

குறிப்பாக தூக்கமின்மை பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் அதிக மரபணு பாதிப்பு உள்ளவர்களுக்கு கூடுதல் ஆஸ்துமா ஆபத்து ஏற்படுவது கண்டறிப்பட்டுள்ளது. .அதே சமயம் ஆரோக்கியமான தூக்க முறை வயது வந்தவர்களிடத்தில் ஆஸ்துமாவின் அபாயத்தைக் குறைப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே தூக்கமின்மை பிரச்சனைகள் இருப்பது உங்களுக்கு முன்கூட்டியே கண்டறிவதோடு, முறையாக அவற்றிற்கு சிகிச்சை பெற்றுக்கொண்டால் ஆஸ்துமா பிரச்சனையைக் குறைக்க முடியும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

top videos

  தூக்கமின்மை பிரச்சனையைத் தீர்ப்பதற்கான சில வழிமுறைகள்….

  நீங்கள் ஒவ்வொரு நாளும் வழக்கமான தூக்க அட்டவணையைப் பராமரிக்க வேண்டும். உங்களது மனதில் நீங்கள் எந்த நேரத்தில் தூங்க வேண்டும் மற்றும் எப்போது எழுந்திருக்க வேண்டும் என தீர்மானித்துக்கொள்ள வேண்டும். உங்களால் அந்த நேரத்திற்கு எழுந்திருக்க முடியவில்லை என்றால் அலாரம் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் எவ்வளவு நன்றாக தூங்குகிறீர்களோ? அந்தளவிற்கு உங்களின் சுவாச பிரச்சனைக்குத் தீர்வு காணமுடியும். சுவாச ஆரோக்கியமும் மேம்படும்.
  போதுமான அளவு தூக்கத்தை உறுதி செய்ய வேண்டும். பொதுவாக பெரியவர்களுக்கு ஏழு முதல் ஒன்பது மணிநேரம் வரையும் குழந்தைகளாக இருந்தால் 12 மணி நேரத்திற்கு மேல் வரை தூங்க வைக்கலாம். இவ்வாறு நீங்கள் தூங்கும் போது உங்களின் நோயெதிர்ப்பு செயல்பாட்டை அதிகரிக்க முடிவதோடு ஆஸ்துமாவின் அபாயத்தைக் குறைக்கலாம்.
  உங்கள் படுக்கையறையை சுத்தமாகவும் தூசி இல்லாததாகவும் வைத்திருங்கள், ஹைபோஅலர்கெனிக் படுக்கைகளைப் பயன்படுத்துங்கள் மற்றும் தூசிப் பூச்சிகள், செல்லப்பிராணிகளின் தோல் மற்றும் அச்சு போன்ற சுற்றுச்சூழல் ஒவ்வாமைகளுக்கு வெளிப்படுவதைத் தவிர்க்கவும். இதனால் தடையின்றி உறக்கம் பெறமுடியும்.
  தலை மற்றும் மார்பை சற்று உயர்த்தி உறங்குவது அமில வீக்கத்தைத் தடுக்கவும், நல்ல தூக்கத்திற்கு உதவும்.
  காஃபின், நிகோடின், அதிக உணவு, மற்றும் மின்னணு சாதனங்கள் போன்ற தூக்கத்தை சீர்குலைக்கும் தூண்டுதல்களைத் தவிர்க்க வேண்டும்.
  ஆழ்ந்த சுவாசம், தியானம் அல்லது யோகா போன்ற தளர்வு நுட்பங்களைப் பயிற்சி செய்ய வேண்டும். இது மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது மற்றும் சிறந்த தூக்கத்தை ஊக்குவிப்பதோடு ஆஸ்துமாவின் அபாயத்தைக் குறைக்கிறது.
  இறுதியாக பகலில் உங்களது வழக்கமான உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவது நுரையீரல் செயல்பாடு மற்றும் ஒட்டுமொத்த சுவாச ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும்.
  First published:

  Tags: Asthma, Sleep, Sleepless