புகைப்பழக்கம் எண்ணற்ற ஆரோக்கிய கேடுகளை மனிதர்களுக்கு பரிசாக அளிக்கிறது. தொடர்ந்து புகைக்கும் பழக்கம் இருப்பவர்கள் அதனை படிப்படியாக கைவிட்டால் பல ஆரோக்கிய நன்மைகளை பெறலாம்.
அதில் ஒன்று சிறப்பான பாலியல் வாழ்க்கை என்பது பலருக்கும் தெரிவதில்லை. ஆம், பாலியல் வாழ்க்கையில் சிக்கலை எதிர்கொண்டுள்ளவர்கள் புகைப்பழக்கம் கொண்டிருந்தால், அதனை கைவிடுவதன் மூலம் செக்ஸ் வாழ்க்கை மேம்படும். புகைப்பழக்கம் சருமம், நுரையீரல், இதயம், இனப்பெருக்க அமைப்பு, நோயெதிர்ப்பு மண்டலம் என பலவற்றுக்கும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. புகைப்பழக்கம் மற்றும் பாலியல் வாழ்க்கைய சிக்கலுக்கு இடையே தொடர்பு இருப்பதை பல ஆய்வுகள் சுட்டிக்காட்டி உள்ளன.
பாதிப்புகள்:
சிகரெட் பழக்கம் ஃப்ரீ ரேடிக்கல்ஸ் உருவாக வழிவகுக்கிறது, இது ஆணின் விந்தணு DNA-வுக்கு ஆக்ஸிடேட்டிவ் சேதத்தை ஏற்படுத்துகிறது. இது விந்தணுக்களின் அசாதாரண வடிவம், விந்தணுக்களின் எண்ணிக்கையில் குறைவு மற்றும் விந்தணு இயக்கத்தில் மாற்றம் போன்ற பல சிக்கல்களை ஏற்படுத்துகிறது. நீண்டகால புகைப்பழக்கம் ஸ்பெர்ம் எண்ணிக்கை பூஜ்ஜியமாக வழிவகுக்கிறது. இதற்கிடையே பிரபல மகப்பேறு மருத்துவர் மிருதுளா ராகவ், புகைபிடிப்பதற்கும் செக்ஸிற்கும் இடையே உள்ள தொடர்பை பற்றி கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
புகைபழக்கத்தால் ஆண்,பெண் இருவருக்கும் ஏற்படும் விளைவுகள்...
சிகரெட், மரிஜுவானா அல்லது வேப்பிங் போன்ற எந்த வகை புகைப்பழக்கமும் இரு பாலினத்தவரின் பாலியல் ஆரோக்கியத்தையும் பாதிக்கலாம். புகைப்பழக்கம் ஆண்களில் புகைபிடித்தல் விறைப்பு குறைபாடு போன்ற பாலியல் கோளாறுகளை ஏற்படுத்தலாம். விறைப்புத்தன்மை குறைபாடு தவிர ஆண்குறியை நிமிர்த்தி வைத்திருப்பதில் சிக்கல்கள் மற்றும் உடலுறவுக்கான விருப்பம் குறைதல் போன்ற சிக்கல்களும் ஏற்படும்.
இந்த பழக்கம் ஆண்குறி விறைப்புத்தன்மையை அடைய உதவும் நரம்புகள் மற்றும் ரத்த நாளங்களை சேதப்படுத்துவதாக கூறுகிறார் நிபுணர். பெண்களில் இந்த பழக்கம் ovarian reserve குறைவதற்கு காரணமாகிறது. இது பிறப்புறுப்பில் வறட்சி மற்றும் உடலுறவின் போது வலி ஏற்பட வழிவகுக்கிறது. மேலும் பெண்களுக்கு லிபிடோ குறைவையும் ஏற்படுத்துகிறது. எனவே புகைபழக்கத்தை கைவிடுவது பொதுவாக எதிர்கொள்ளும் பல பாலியல் சிக்கல்களில் இருந்து விடுபட உதவுகிறது. பாலியல் செயல்திறனை அதிகரிக்க புகைப்பழக்கத்தை நிறுத்துவதால் கிடைக்கும் நன்மைகளை இங்கே பார்க்கலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Sexual Health, Sexual issues, Sexual life