முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / கோக், பெப்ஸி குடித்தால் ஆண்களுக்கு பாலியல் ஆர்வம் அதிகரிக்கிறதா..? ஆய்வு தரும் விளக்கம்..! 

கோக், பெப்ஸி குடித்தால் ஆண்களுக்கு பாலியல் ஆர்வம் அதிகரிக்கிறதா..? ஆய்வு தரும் விளக்கம்..! 

கோக், பெப்ஸி

கோக், பெப்ஸி

உடல் ஆரோக்கியம் கருதி நம்மில் பெரும்பாலானவர்கள் பழ ஜூஸ்களை அருந்துவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றோம். பிஸ்ஸி என்று சொல்லக் கூடிய செயற்கை குளிர்பானங்களை நாம் பெரும்பாலும் தவிர்த்து விடுகிறோம். ஆனால், தற்போது வெளிவந்துள்ள ஆய்வு முடிவு ஒன்று, நாம் ஏன் அத்தகைய குளிர்பானங்களை அருந்தக் கூடாது என்ற கேள்வியை நம் மனதில் எழுப்புவதாக உள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Tamil Nadu, India

உடல் ஆரோக்கியம் கருதி நம்மில் பெரும்பாலானவர்கள் பழ ஜூஸ்களை அருந்துவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றோம். பிஸ்ஸி என்று சொல்லக் கூடிய செயற்கை குளிர்பானங்களை நாம் பெரும்பாலும் தவிர்த்து விடுகிறோம். ஆனால், தற்போது வெளிவந்துள்ள ஆய்வு முடிவு ஒன்று, நாம் ஏன் அத்தகைய குளிர்பானங்களை அருந்தக் கூடாது என்ற கேள்வியை நம் மனதில் எழுப்புவதாக உள்ளது.

ஆம், கோக், பெப்ஸி போன்ற குளிர்பானங்களை அருந்தினால் ஆண்களுக்கு பாலியல் ஆர்வத்தையும், பாலியல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்ற டெஸ்டோஸ்டிரோன் அலவுகள் அதிகரிக்கிறதாம். இந்த முடிவு, ஆச்சரியமும், அதிர்ச்சியும் அளிக்கக் கூடியதாக உள்ளது.

சீனாவின் வடமேற்கு மின்ஸு பல்கலைக்கழகம் இந்த ஆய்வை நடத்தியது. கார்பனேடட் குளிர்பானங்களால் கருத்தரித்தல் திறன் பாதிக்கப்படுகிறதா என்பதை ஆராயும் நோக்கில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஆண்களின் விதைப்பை வளர்ச்சி மேம்படுவதுடன், பொதுவான பாலியல் ஆரோக்கியமும் மேம்படுகிறது என்று தெரியவந்தது.

ஆக்டா எண்டாக்ரினோல் என்னும் மருத்துவ இதழில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால், இதற்கு முன்பு உலக அளவில் நடத்தப்பட்ட பல ஆய்வுகளில், சோடா பானங்களை அருந்தினால் ஆண்களின் இனப்பெருக்க நலன் பாதிக்கப்படும் என்றும், விந்தணுக்களின் தரம் வெகுவாகப் பாதிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

ஆனால், பாலியல் ஆர்வத்தை தூண்டுகின்ற டெஸ்டோஸ்டிரோன் அளவுகளைப் பொருத்தவரையில் இதன் விளைவுகள் அப்படியே தலைகீழாக இருக்கின்றன என்பது சமீபத்திய ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. இன்னும் சுருக்கமாக சொன்னால் முந்தைய ஆய்வு முடிவுகளுக்கு நேர்மாறானதாக இது அமைந்துள்ளது.

எலிகளுக்கு கொடுத்து பரிசோதனை

சீன ஆய்வாளர்கள் மேற்கொண்ட பரிசோதனையின்போது ஆண் எலிகள் பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அவை இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டன. முதலாவது குழுவினருக்கு கோக கோலா, பெப்ஸி போன்ற பானங்களும், இன்னொரு குழுவுக்கு வெறும் தண்ணீரும் அருந்துவதற்கு கொடுக்கப்பட்டது. இந்த வாடிக்கை 15 நாட்களுக்கு தொடர்ந்தது.

இறுதியாக அனைத்து எலிகளின் ஒட்டுமொத்த எடை, விதைப்பை அளவு ஆகியவற்றை சரிபார்த்து, ரத்த பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

Also Read : முதல் முறை தாம்பத்ய உறவு கொள்ளும்போது பாலியல் நோய்கள் பரவ வாய்ப்பு உண்டா..?

ஆச்சரியம் அளித்த முடிவு

15ஆம் நாள் முடிவில், கொக்க கோலா மற்றும் பிஸ்ஸி போன்ற பானங்களை அருந்திய எலிகளின் பாலியல் ஆர்வம் மேம்பட்டிருப்பது தெரியவந்தது. அவற்றின் டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டது. இந்த ஆய்வை விரிவாக்கம் செய்வதன் மூலமாக விதைப்பை தொடர்புடைய நோய்களுக்கு தீர்வு காண முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உடனடியாக கோலா வாங்கி அருந்தலாமா..?

top videos

    இந்த ஆய்வு முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு, அவ்வபோது லிட்டர் கணக்கில் கோலா பானங்களை அருந்திவிட்டு நாம் குதூகலமாக இருக்கலாம் என்று எண்ணுகின்ற உங்கள் மனக் குதிரையை இப்போதைக்கு சற்று கட்டி வைக்கவும். ஏனென்றால், இவை உண்மையிலேயே மனிதர்களுக்கு பலன் அளிக்கிறதா என்ற ஆய்வு இதுவரையிலும் மேற்கொள்ளப்படவில்லை.

    First published:

    Tags: Pepsi, Sex Desire, Sexual Health