முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / கருத்தடை சாதனங்களை பயன்படுத்தும் முன் இந்த விஷயங்களை ’கண்டிப்பா’ தெரிஞ்சுக்கோங்க..!

கருத்தடை சாதனங்களை பயன்படுத்தும் முன் இந்த விஷயங்களை ’கண்டிப்பா’ தெரிஞ்சுக்கோங்க..!

கருத்தடை முறைகள்

கருத்தடை முறைகள்

கர்ப்பமாக விரும்பவில்லை என்றால், உடலுறவுக்கு பிறகு கர்ப்பமாகாமல் தடுக்க பாதுகாப்பான முறைகளைப் பின்பற்றுவது அவசியம். விழிப்புணர்வு இல்லாமல் மருந்துகளை உட்கொள்வதால் ஆபத்துகளை சந்திக்க நேரிடும்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கர்ப்பமாக விரும்பவில்லை என்றால், உடலுறவுக்கு பிறகு கர்ப்பமாகாமல் தடுக்க பாதுகாப்பான முறைகளைப் பின்பற்றுவது அவசியம். விழிப்புணர்வு இல்லாமல் மருந்துகளை உட்கொள்வதால் ஆபத்துகளை சந்திக்க நேரிடும். ஆனால், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த, கருத்தடை முறைகள் பற்றி மகப்பேறு நிபுணர்கள் மற்றும் மகளிர் சிறப்பு என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்க்கலாம்.

கருத்தடை முறைகள் பற்றி மக்கள் அறியாத காலம் ஒன்று இருந்தது. இதன் விளைவாக, பல தம்பதிகளுக்கு அதிக குழந்தைகள் உள்ளனர். குடும்பக் கட்டுப்பாடு என்ற பெயரில் அரசும், மருத்துவர்களும் விழிப்புணர்வை ஏற்படுத்தத் தொடங்கினார்கள். ஆனாலும் பலருக்கும் இது குறித்த தெளிவு இல்லை. காலம் மாறுதலுக்கு ஏற்றவாறு, இப்போது பலரும் கருத்தடை முறைகள் மற்றும் மருந்துகள் பற்றி அதிகம் அறிந்திருக்கிறார்கள்.

தேவையற்ற கர்ப்பத்தைத் தடுக்க கருத்தடை சாதனங்கள், பிறப்பு கட்டுப்பாடு சாதனங்கள், காண்டம் அல்லது வெரி சில சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆண்களுக்கும் பெண்களுக்கும் வெவ்வேறு வகையான கருத்தடை முறைகள் உள்ளன.

இவற்றில் இனி குழந்தையே வேண்டாம் என்று நினைப்பவர்களுக்கு, நிரந்தர கருத்தடை சிகிச்சையாக கருதப்படும் ஸ்டெரிலைசேஷன் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அறுவைசிகிச்சை மூலம் செய்யப்படும் ஸ்டெரிலைசேஷன் என்பது கருத்தரிக்கும் உறுப்புகளின் குழாய்களைத் துண்டித்து, முட்டையும் விந்தணுவும் ஒன்று சேர முடியாத படி குழாய்களை முடக்குவதை உள்ளடக்குகிறது.

பெண்களுக்கு டியூபெக்டமியும், ஆண்களுக்கு வாஸெக்டமியும் செய்யப்படுகிறது. ஆனால் இந்த சிகிச்சை மேற்கொண்ட பிறகு வரும் பிரச்சனைகள் குறித்து பலருக்கு தவறான கருத்துகள் உள்ளன.

இவை தவிர, மாத்திரைகள், தோலின் கீழ் வைக்கப்படும் சாதனங்கள், ஊசிகள், கருப்பைக்குள் வைக்கப்படும் மற்றும் பிறப்புறுப்பு வளையங்கள் உள்ளிட்ட பல்வேறு கருத்தடை முறைகள் மற்றும் ஹார்மோன் கட்டுப்பாட்டு முறைகள் உள்ளன.

கருத்தடை செய்ய இரண்டு வகையான உள்ளன

தற்போது இரண்டு வகையான கருத்தடை மாத்திரைகள் உள்ளன. அவை ஒருங்கிணைந்த ஓரல் கருத்தடை மருந்து (ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் இரண்டையும் கொண்டவை), புரோஜெஸ்ட்டிரோன் உள்ள மாத்திரைகள் (சில நேரங்களில் மினி-பில்ஸ் என்று அழைக்கப்படுகின்றன).

இந்த மருந்துகள் முக்கியமாக ஓவிலேஷனை தடுப்பதன் மூலமும் கர்ப்பப்பை வாய் ஜவ்வு போன்ற திரவத்தை தடிமனாக்குவதன் மூலம் கருத்தரிப்பதைத் தடுக்கின்றன. இதனால் உடலுறவு கொண்ட பின்பு, விந்தணு கருமுட்டையை அடையும் தன்மை குறைகிறது. ஒருங்கிணைந்த ஹார்மோன் கருத்தடை மருந்துகள், நரம்புகள் மற்றும் தமனிகளில் இரத்த உறைவு அபாயத்தை சற்று அதிகரிக்கின்றன. இந்த ஆபத்து காரணமாக இந்த மாத்திரைகளைப் பயன்படுத்தலாமா என்பதை மருத்துவரிடம் உறுதி செய்து கொள்ளுங்கள்.

Also Read : மென்ஸ்சுரல் கப் பயன்படுத்துவதில் தயக்கம் இருக்கா..? இந்த பதிவை படியுங்கள்..!

புரோஜெஸ்ட்டிரோன் மட்டும் உள்ள மாத்திரைகள், ஊசி மருந்துகள் மற்றும் கருப்பையக சாதனங்கள், இரத்தம் கட்டிப் போகும் அபாயத்தைக் கொண்டிருக்கவில்லை. தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் புரோஜெஸ்ட்டிரோன் மட்டும் உள்ள கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்தலாம். இந்த மாத்திரைகள் பால் உற்பத்தியை பாதிக்காது. அவற்றின் பயன்பாட்டின் மூலம் ஒழுங்கற்ற இரத்தப்போக்கு ஏற்படலாம்.

கருத்தடை சாதனங்கள்

ஆணுறைகள்:

தடுப்பு சாதனங்கள் என்பது விந்தணுக்கள் கருப்பைக்குள் நுழைவதை உடல் ரீதியாக தடுப்பதன் மூலம் கர்ப்பத்தை தடுக்க முயற்சிக்கும். அவற்றில் ஆண் ஆணுறைகள் மற்றும் விந்தணுக் கொல்லி கொண்ட பெண் ஆணுறைகள் ஆகியவை அடங்கும். எச்.ஐ.வி/எய்ட்ஸ் போன்ற சில பாலியல் பரவும் நோய்த்தொற்றுகள் பரவாமல் தடுப்பதற்கும் ஆணுறைகள் பயனுள்ளதாக இருக்கும்.

IUD: இன்ட்ராயூரெத்ரல் சாதனங்கள் (IUDs) 'T' வடிவத்தில் இருக்கும். தாமிரம் அல்லது புரோஜெஸ்டின் என்ற ஹார்மோன் உள்ளது. இவை கருப்பையில் உள்ளே செருகப்படுகின்றன. அவை நீண்டகாலமாக செயல்படக்கூடிய கருத்தடையின் மிகவும் பயனுள்ள வடிவங்களில் ஒன்றாகும். சாதனம் அகற்றப்பட்ட உடனேயே கருவுறும் தன்மை இயல்பு நிலைக்குத் திரும்பும்.

மகப்பேறு மருத்துவரின் அறிவுரைகள் முக்கியம்

top videos

    எமர்ஜன்சி கருத்தடை மருந்துகள் (சில நேரங்களில் தவறாக "மார்னிங் ஆஃப்டர் பில்ஸ்" என்று அழைக்கப்படுகின்றன) அல்லது கர்ப்பத்தைத் தடுக்கும் நம்பிக்கையில் பாதுகாப்பற்ற உடலுறவுக்குப் பிறகு பயன்படுத்தப்படும் சாதனங்கள் ஆகும். அவசர கருத்தடை முறைகள், பொதுவாக பயன்படுத்தப்படும் முறைகள் தோல்வியுற்றால் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இதில் கூட கர்ப்பம் தரிக்க வாய்ப்புகள் உள்ளன. இந்த மாத்திரைகளில் ஹார்மோன்கள் அதிகம் இருப்பதால், அவற்றைத் தொடர்ந்து பயன்படுத்தக் கூடாது. எனவே அவசரகால கருத்தடை மருந்துகளின் தேவைகள் குறித்து மகளிர் மருத்துவரிடம் வெளிப்படையான பேசுவது அவசியம். மருத்துவர்கள் உங்களுக்கேற்ற சிறந்த மருந்துகளைப் பரிந்துரைப்பார்கள்.

    First published:

    Tags: Birth control pills, Condoms, Sexual Wellness