நீங்கள் எப்போதாவது இரவு நேரங்களில் அல்லது தூங்கும் போது உங்கள் கால்களை நிலையாக வைத்திருக்காமல் நகர்த்தியே ஆக வேண்டும் என்ற ஒரு கட்டாய தூண்டுதலை அனுபவித்திருக்கிறீர்களா? அப்படி என்றால் உங்களுக்கு ரெஸ்ட்லெஸ் லெக்ஸ் சிண்ட்ரோம் (Restless Legs Syndrome - RLS) இருக்கலாம்.
இந்த கோளாறால் நன்றாக தூங்குவது கடினமாகிறது. RLS என்பது கால்களில் அசௌகரியமான உணர்வுகள் ஏற்படுவது மற்றும் அந்த உணர்வுகளை போக்க கால்களை நகர்த்துவதற்கான தூண்டுதல் தோன்றும் ஒரு கோளாறு ஆகும். RLS-ன் முக்கிய அறிகுறியே கால்களை நகர்த்துவதற்கான தவிர்க்க முடியாத தூண்டுதல் தான்.
பலருக்கும் இது ஒரு சிறிய சிரமமாக தோன்றலாம், ஆனால் RLS நிலை தீவிரமானால் ஒருவரின் வாழ்க்கைத் தரம் மற்றும் தினசரி செயல்பாடுகள் வெகுவாக பாதிக்கப்படும். இதனால் ஏற்படும் அசௌகரிய உணர்வுகள் மற்றும் கால்களை நகர்த்தியே ஆக வேண்டும் என்ற தவிர்க்கமுடியாத உந்துதல் உள்ளிட்டவை பல இரவுகளில் தூக்கமின்மையை ஏற்படுத்தும். இதனால் பகலில் சோர்வு மற்றும் கவனம் செலுத்துவதில் சிரமம் உள்ளிட்ட பல சிக்கல்கள் ஏற்படும். RLS-ன் அறிகுறிகளை நிர்வகிக்கவாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் சிகிச்சைகள் உள்ளன.
அறிகுறிகள்:
கால்களை நகர்த்த வேண்டும் என்று தூண்டுதல் ஏற்படுவது:
ரெஸ்ட்லெஸ் லெக்ஸ் சிண்ட்ரோம் பிரச்சனை உள்ளவர்கள் தனக்கு கால்களில் ஏற்படும் அசௌகரிய உணர்வுகளை போக்க கால்களை அசைக்க வேண்டும் என்று நினைக்கலாம். ஏனென்றால் கால்களில் அவர்களுக்கு ஏற்படும் சங்கட உணர்வுகள் கால்களை அசைத்தால் நன்றாக இருக்குமே என்ற தவிர்க்க முடியாத தூண்டுதலை ஏற்படுத்தும். இது தற்காலிக நிவாரணமாகவே இருக்கும்.
அசௌகரிய உணர்வுகள்:
RLS-ஆல் ஏற்படும் அசௌகரிய உணர்வுகளில் அரிப்பு, கூச்ச உணர்வு, ஏதோ ஊர்வது போன்ற உணர்வு அல்லது வலி உள்ளிட்டவை அடங்கும்.
தூக்கத்தில் இடையூறு:
RLS-ஆல் பாதிக்கப்பட்டவர்கள் இரவில் நிம்மதியாக தூங்க முடியாமல் தொந்தரவு ஏற்படும், இது பகல்நேர தூக்கத்திற்கு வழிவகுக்கும். கடும் சந்தர்ப்பங்களில் இது தூக்கமின்மைக்கு வழிவகுக்கும்.
இரவில் நிலைமை மோசமாகும்:
RLS-ன் அறிகுறிகள் பெரும்பாலும் இரவில் மோசமாக இருக்கும், இது தூங்குவதை கடினமாக்கும். இதன் காரணமாக பகல்நேரத்தில் சோர்வு மற்றும் கவனம் செலுத்துவதில் சிரமம் உள்ளிட்டவற்றுக்கு வழிவகுக்கும்.
Also Read | இரவு சரியாக தூங்கவில்லை எனில் ஆஸ்துமா..? எச்சரிக்கும் ஆய்வு..!
சிகிச்சைகள்:
குறிப்பிடத்தக்க வாழ்க்கை முறை மாற்றங்களை செய்வதன் மூலம் RLS-ன் அறிகுறிகளை டுக்க அல்லது குறைத்து கொள்ளலாம். தினசரி உடற்பயிற்சி, ஆரோக்கியமான எடையை பராமரிப்பது, காஃபின், ஆல்கஹால் மற்றும் புகையிலை உள்ளிட்டவற்றை தவிர்ப்பது, தினசரி ஒரே நேரத்தில் தூங்க செல்வது, தியானம் அல்லது யோகா பயிற்சி உள்ளிட்டவை நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.