முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / 66% சதவிகித இந்தியர்களுக்கு இதய நோய்கள் ஏற்பட இதுதான் காரணமா.? அதிர்ச்சியூட்டும் ஆய்வு..!

66% சதவிகித இந்தியர்களுக்கு இதய நோய்கள் ஏற்பட இதுதான் காரணமா.? அதிர்ச்சியூட்டும் ஆய்வு..!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

ஹோமோசியஸ்டின் அளவுகள் அதிகரிப்பால், நோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது. அதே நேரத்தில், ஹோமோசியஸ்டின் அளவுகளைக் குறைத்தால், நோய்கள் ஏற்படும் ஆபத்து குறையுமா என்பது உத்தரவாதம் அளிக்கும் தரவுகள் இல்லை.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சமீப காலமாக இந்தியாவில் எல்லா வயதினரும் இதய நோய்களால் பாதிக்கப்பட்டு வருவது அதிகரித்துள்ளது. இதற்கு பல விதமான காரணங்கள் கூறப்பட்டாலும், இதய நோய்கள் ஏற்பட ஒரு குறிப்பிட்ட காரணம் கண்டறியப்பட்டுள்ளது. இது, இந்தியாவில் உள்ள 66% நபர்களுக்கு ரத்தத்தில் ஒரு குறிப்பிட்ட காம்பவுண்ட் அதிக அளவில் இருப்பதுதான் காரணம் என்று கூறப்படுகிறது. இதைப் பற்றிய முழு விவரங்களையும் பார்க்கலாம்.

ரத்தத்தில் அதிகமாக காணப்படும் ஹோமோசியஸ்டைன் (homocysteine)

டாடா 1mg லாப்ஸ் வெளியிட்ட அறிக்கையின் படி, இந்தியர்களில் 66% நபர்களுக்கு ரத்தத்தில் ஹோமோசியஸ்டைன் அதிக அளவில் இருப்பதால் பல விதமான இதய நோய்கள் ஏற்படுகின்றன என்று இதய நோய் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹோமோசியஸ்டைன் என்றால் என்ன?

ஹோமோசியஸ்டைன் என்பது ஒரு அமினோ அமிலம். இந்த அமிலம் அதிகமாக இருந்தால், வைட்டமின் பி12, வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் b9 ஆகிய மூன்று முக்கியமான வைட்டமின்கள் குறைவாக இருக்கிறது என்பதைக் குறிக்கிறது.

ஒரு நபருக்கு, சராசரியாக, ஒரு லிட்டருக்கு 5 முதல் 15 மைக்ரோமோல்ஸ் ஹோமோசியஸ்டைன் இருக்க வேண்டும். 50ஐ விட அதிகரித்தால், அது இதயத்தின் ஆர்ட்டரி லைனிங்கை பாதிக்கலாம். இதனால், ஹோமோசியஸ்டைன் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது.

ஹோமோசியஸ்டைன் அதிக அளவு இருந்தாலே, வைட்டமின் b12 மற்றும் ஃபோலேட் குறைபாட்டைக் குறிக்கிறது. மேலும், இதனால் தைராய்டு குறைபாடு ஏற்படலாம்.

இதன் அறிகுறிகள்:

வைட்டமின் பி குறைபாடுகளுடன் தொடர்புடையதால், ஹோமொசியஸ்டைன் அதிக அளவில் இருப்பது, அதைச்சார்ந்த அறிகுறிகளை வெளிப்படுத்தும்.

  • பலவீனமாக உணர்வது
  • மயக்கம்
  • வாயில் புண்
  • வெளிறிய சருமம்
  • மூச்சுத் திணறல்
  • மனநிலையில் அடிக்கடி மாற்றம்

ஹோமோசியஸ்டைன் ஒரு கார்டியாக் மார்க்கரா?

ஒரு குறிப்பிட்ட நோய் பாதிப்பு ஏற்படும் முன்பு, அதற்கு சில அறிகுறிகள் தோன்றும் அல்லது மருத்துவ பரிசோதனையில் வெளிப்படும். இந்நிலையில், ஹோமொசியஸ்டின் என்பது இதய நோய்கள் பாதிப்பு ஏற்படும் என்பதைக் குறிக்கும் ஒரு கார்டியாக் மார்க்கரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

டீப் வெயின் த்ரோம்போசிஸ் (Deep vein thrombosis) மற்றும் பல்மோனரி எம்போலிசம் (pulmonary embolism) ஆகிய இதய நோய்களுக்கு, அதிகரித்த ஹோமோசியஸ்டின் லெவல் ஒரு கார்டியாக் மார்க்கர் ஆகும். ஆனால், மாரடைப்புக்கு இது ஒரு காரணமா என்பது தெளிவாக இல்லை.

ஹோமோசியஸ்டின் அளவுகளைக் குறைத்தால் இதய பாதிப்பு குறையுமா?

ஹோமோசியஸ்டின் அளவுகள் அதிகரிப்பால், நோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது. அதே நேரத்தில், ஹோமோசியஸ்டின் அளவுகளைக் குறைத்தால், நோய்கள் ஏற்படும் ஆபத்து குறையுமா என்பது உத்தரவாதம் அளிக்கும் தரவுகள் இல்லை. அதே போல, இந்த குறைபாட்டுக்கு, மருத்துவர்கள் வைட்டமின் ஊட்டச்சத்துக்களை பரிந்துரைப்பார்கள். ஆனால், வைட்டமின் சப்ளிமென்ட்களை உட்கொண்டால், ஹோமோசியஸ்டின் அளவுகள் குறையும் என்பதற்கு என்பதையும் உறுதியாகக் கூற முடியாது.

Also Read | Heart Disease : இதய நோய் ஏன் வருகிறது..? தடுப்பதற்கான வழிகள் என்ன..?

வாழ்க்கை முறை மாற்றங்கள், உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது, குடிப்பழக்கம், புகைப்பிடிக்கும் பழக்கம் ஆகியவற்றை நிறுத்துவதன் மூலமாக, இதய நோய் அபாயத்தை குறைக்க முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

First published:

Tags: Heart disease, Heart Failure, Heart health