முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / உடல் எடை குறைவாக இருந்தால் கல்லீரல் கொழுப்பு நோய் வருமா..? இந்த 4 காரணங்களை தெரிஞ்சுக்கோங்க..!

உடல் எடை குறைவாக இருந்தால் கல்லீரல் கொழுப்பு நோய் வருமா..? இந்த 4 காரணங்களை தெரிஞ்சுக்கோங்க..!

Fatty liver disease

Fatty liver disease

ஒல்லியாக இருப்பவர்களுக்கும் கல்லீரல் கொழுப்பு நோய் ஏற்படும் ஆபத்து உள்ளது. அவர்களுக்கு கல்லீரல் கொழுப்பு நோய் நான்கு காரணங்களால் ஏற்படுகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கல்லீரல் கொழுப்பு நோய் (ஃபேட்டி லிவர் டிசீஸ்) ஏற்படுவதற்கான காரணங்களை இந்த கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

கல்லீரல் கொழுப்பு நோய் (ஃபேட்டி லிவர் டிசீஸ்) ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள் பின்வருமாறு:

  • உடல் பருமன்
  • உடலில் அதிக கொழுப்பு இருத்தல் (வயிற்றைச் சுற்றி கொழுப்பு படிந்து இருத்தல்)
  • வயிற்றின் வலது மேல் பக்கத்தில் அசௌகரியம் அல்லது வலி இருத்தல் (குறிப்பாக உடற்பயிற்சி அல்லது கடின உழைப்பு செய்த பின்னர்)

ஒல்லியாக இருப்பவர்களுக்கும் கல்லீரல் கொழுப்பு நோய் ஏற்படும் ஆபத்து உள்ளது:

சர் ஹெச்என் ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையின் (Sir HN Reliance Foundation Hospital) கல்லீரல் நோய் தொடர்பான துறையின் இயக்குநர் மற்றும் ஆலோசகரான மருத்துவர் ஆகாஷ் சுக்லா அவர்கள், “ஒல்லியாக இருப்பவர்களுக்கு கூட சில சமயங்களில் அல்ட்ராசவுண்டில் கல்லீரல் கொழுப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒல்லியாக இருப்பவர்களுக்கு ஏன் கல்லீரல் கொழுப்பு நோய் ஏற்படுகிறது என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். ஒல்லியாக இருப்பவர்களுக்கும் கல்லீரல் கொழுப்பு நோய் ஏற்படும் ஆபத்து உள்ளது. அவர்களுக்கு கல்லீரல் கொழுப்பு நோய் நான்கு காரணங்களால் ஏற்படுகிறது" என்று கூறியுள்ளார்.

கல்லீரல் கொழுப்பு நோய் ஏற்படுவதற்கான நான்கு காரணங்கள்:

மது குடிக்கும் பழக்கம் : பொதுவாக மது அல்லது ஆல்கஹால் என்பது வெற்று கலோரிகளே ஆகும். இந்த வெற்று கலோரிகள் கல்லீரலில் மிக விரைவாக கொழுப்பாக மாறுகின்றன. அதோடு, இது ஒருவருக்கு நல்லதும் அல்ல. எனவே, குடிப் பழக்கம் இதற்கு முதல் காரணமாக அமைகிறது.

தசை அடர்த்தி, ஆரோக்கியத்தில் குறைப்பாடு (lack of Muscle mass) : இதற்கான இரண்டாவது காரணம் தசை அடர்த்திப் பற்றாக்குறை ஆகும். பருமனான பெரிய தசைகள், குறிப்பாக கோர் தசைகள் (Core Muscles) இருக்கும் நபர்களுக்கு கொழுப்பு கல்லீரல் வளர்ச்சி இருக்காது. ஏனெனில், இந்த தசைகள் கொழுப்பை எரிபொருளாக எரித்து, கல்லீரல் நோய் ஏற்படாமல் பாதுகாக்கின்றன. இருப்பினும், மிகவும் ஒல்லியாக இருப்பவர்களுக்கு தசை மிகக் குறைவாக இருக்கும். அதனால், கல்லீரலில் எளிதில் கொழுப்பு படியும் ஆபத்துக்கு உள்ளாகிறார்கள். அதோடு, இந்த கொழுப்பை எரிக்க முடியாமல் போய், அது கல்லீரல் கொழுப்பு நோய்க்கு வழிவகுத்துவிடும்.

மரபணு சார்ந்த காரணிகள்: மூன்றாவது காரணம் மரபணு பிறழ்வுகலாக இருக்கலாம். மரபணு காரணமாக நார்மல் பிஎம்ஐ உடையவர்களுக்குக் கூட கல்லீரல் கொழுப்பு நோய் பாதிப்பு ஏற்படலாம். எனவே, சரியான பிஎம்ஐ கொண்ட நபர்களும் கவனமாக இருத்தல் வேண்டும்.

Also Read |Liver failure : கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை என்பதை உணர்த்தும் 5 அறிகுறிகள்..! 

top videos

    வளர்சிதைமாற்றம் சார்ந்த கோளாறு: கல்லீரல் கொழுப்பு நோய் ஏற்படுவதற்கான நான்காவது காரணம் வில்சன் நோய் போன்ற வளர்சிதை மாற்றக் கோளாறாக இருக்கலாம். ஒல்லியாக இருந்தாலும் கூட அல்ட்ராசவுண்டில் கல்லீரல் கொழுப்பு இருப்பது தெரிய வரலாம், அதனால் ஒருவர் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    First published:

    Tags: Fatty Liver Disease, Liver Disease, Liver Health