சமீபகாலமாக மாரடைப்பால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. முன்னர் அதிக அளவில் ஆண்களுக்கு மட்டுமே ஏற்பட்டு வந்த இந்த மாரடைப்பு தற்போது பெண்களை அதிகளவு தாக்க ஆரம்பித்துள்ளது.
சமீபத்தில் நடத்திய ஆய்வின் படி 15 - 49 வயது வரை இருக்கும் பெண்களில் 18.29% பேருக்கு கண்டறியப்படாத அதிக மன அழுத்தம் இருப்பதாக ஆய்வறிக்கைகள் தெரிவித்துள்ளன. முன்னர் இவை அனைத்தும் ஆண்களுக்கு தான் இருக்கும் என்று நம்பப்பட்டு வந்த நிலையில் தற்போது அதிக அளவில் பெண்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதயத்தில் ஏற்படும் நோய்களும் பெண்களிடையே மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகளை அதிகரித்து உள்ளது. மார்பக புற்று நோயை விட 10 மடங்கு அதிக பாதிப்பை இது உண்டாக்குகிறது. என்னதான் இதயத்தில் ஏற்கனவே இருக்கும் பாதிப்புகளால் மாரடைப்பு உண்டானாலும், சரியான விழிப்புணர்வு இன்மை மற்றும் சரியான சிகிச்சை மேற்கொள்ளாத காரணத்தினாலே அதிக அளவு மாரடைப்புகள் உண்டாகிறது.
ஏன் பெண்களிடையே இதய நோய்களை கண்டறிய முடிவதில்லை?
பொதுவாகவே மற்ற நாடுகளில் வசிக்கும் பெண்களை விட இந்தியாவில் வசிக்கும் பெண்கள் தங்களது தனிப்பட்ட தேவைகளைப் பற்றியும் தங்களது உடல் ஆரோக்கியத்தை பற்றியும் அவ்வளவாக அக்கறை காட்டுவதில்லை. அவர்களுக்கு லேசாக நெஞ்சு வலி ஏற்பட்டாலும் கூட அதை பற்றி அதிகம் கவலை கொள்ளாமல் தங்களது வழக்கமான வேலைகளில் அல்லது வீட்டு வேலைகளில் கவனம் செலுத்த துவங்கி விடுவார்கள்.
மேலும் இந்தியாவில் உள்ள சமூகமும் பெண்கள் மற்றவர்களின் நலனுக்கு பாடுபடுவது தான் சரி என்ற கண்ணோட்டத்தில் இன்னமும் இருந்து வருகிறது. இதன் காரணமாக பெரும்பாலான பெண்களுக்கு ஏற்படும் இதய கோளாறுகளை ஆரம்ப கட்டத்தில் கண்டறிய முடிவதில்லை. மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வெவ்வேறு விதமாக இருக்கின்றன.
பல பெண்களுக்கு ஏற்கனவே தங்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டது தெரிவதில்லை. அவர்கள் மருத்துவர்களை அணுகி பரிசோதனை செய்த பிறகு மருத்துவர் கூறிய பின் தான் இதுவே அவர்களுக்கு தெரிய வருகிறது. ஆனால் இதுவே ஆண்களை எடுத்துக் கொண்டால் அவை கடுமையான வலியை ஏற்படுத்தும். மேலும் திடீரென்று வியர்த்து கொட்டுதலை ஏற்படுத்துகின்றது.
பெண்களுக்கு இவை கண்டறிய முடியாத வகையில் மிகச் சிறிய அளவில் ஏற்படுவதாலும் இதை பற்றி அவ்வளவாக யாரும் யோசிப்பதில்லை. சில பெண்களுக்கு தாடைகளில் வலி, உடல் சோர்வு, கழுத்து மற்றும் முதுகு பகுதியில் வலியும் அதிகப்படியான வியர்வையும் ஏற்படலாம். மேலும் சிலருக்கு நெஞ்செரிச்சல் ஆகியவை மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகளாக கூறப்படுகின்றன.
எந்த வயது பெண்களுக்கு மாரடைப்பு அதிகமாக ஏற்படுகிறது?
45-55 வயதில் இருக்கும் பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகம் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அலுவலக வேலை மற்றும் குடும்பத்தினால் ஏற்படும் மன அழுத்தம், தனிமை மற்றும் குறைவான உடல் இயக்கம் ஆகியவை மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணங்களாக கூறப்படுகிறது. இந்த வயதில் இருக்கும் பெரும்பாலான பெண்களுக்கு மாரடைப்பிற்கான அறிகுறிகள் ஆண்களை விட மிக குறைவாகவே காணப்படுகின்றது.
இதற்கு அடுத்தபடியாக 60 வயதை நெருங்கும் பெண்களுக்கு வயது மூப்பின் காரணமாக மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவருக்குமே இது பொருந்தும். அதிக கொழுப்பு, ரத்த அழுத்தம், உடல் பருமன், புகை பிடித்தல், வாழ்க்கை முறையில் மாற்றம், நீரிழிவு நோய் ஆகியவை மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணங்களாக கூறப்படுகின்றன.
மாரடைப்பு ஏற்படுவதில் இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி?
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Heart attack, Heart health, Women Health