முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / கர்ப்பகாலத்தில் பெண்களின் மூக்கில் மாற்றம் உண்டாகுமா..? மருத்துவர்கள் தரும் விளக்கம்..!

கர்ப்பகாலத்தில் பெண்களின் மூக்கில் மாற்றம் உண்டாகுமா..? மருத்துவர்கள் தரும் விளக்கம்..!

Pregnancy Nose

Pregnancy Nose

பிரக்னென்ஸி நோஸ் என்பது "ஹார்மோன் அதிகரிப்பால் கர்ப்பத்தில் காணப்படும் உடலியல் மாற்றங்களில் ஒன்றாகும்"

  • Last Updated :
  • Tamil Nadu, India

டிக்-டாக் பிளாட்ஃபார்மில் பல கர்ப்பிணி பெண்கள் ஒரு வினோதமான அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். கடந்த மூன்று மாதங்களில் அவர்களின் மூக்கின் அளவு மாற்றம் அடைந்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளனர். சமீபத்திய அறிக்கைகளின்படி, பெண்கள் 'கர்ப்பகால மூக்கு' என்ற ஹேஷ்டேக்குடன், கர்ப்பகாலத்தின் முன்னும் பின்னும் அவர்களது மூக்கில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை பற்றிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர்.

இதில் அதிகப்படியானோரின் மூக்கு அகலமாகவும் கொப்பளங்களுடன் உள்ளதை நம்மால் பார்க்க முடிகிறது. இது குறித்து ஒரு கர்ப்பிணி பெண் டிக்-டாக் தளத்தில் தனது அனுவத்தை பகிர்ந்துள்ளார். அதில், "தனது கர்ப்பத்தின் முடிவில் தன் முகம் மிகவும் வீங்கி உள்ளது" என்று @alexjoelenejacobson என்பவர் தனது வீடியோவில் பகிர்ந்துள்ளார். அவரது மூன்றாவது ட்ரைமெஸ்டரில் அவர் எடுத்து கொண்ட ஒரு புகைப்படத்தை போட்ட பிறகு, அவர் இது குறித்த கருத்து தெரிவித்துள்ளார். "தனது மூக்கு ஒரு அங்குலம் அகலமாக இருப்பது போல் உணர்வதாகவும், தனது முகம் மிகவும் இறுக்கமாக இருப்பதாக உணர்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்."

இதே போன்று பல கர்ப்பிணி பெண்களும் அவர்களின் மூக்கில் ஏற்பட்ட மாற்றங்களை பற்றி தெரிவித்துள்ளனர். பொதுவாக, கர்ப்ப காலத்தில் மூக்கு பெரிதாவது போன்று உணர்வது கவலைப்பட வேண்டிய விஷயமா என்பதை மேலும் புரிந்துகொள்ள நிபுணர்கள் கூறும் முக்கிய கருத்துக்களை பற்றி பார்க்கலாம்.

பிரக்னென்ஸி நோஸ் (pregnancy nose) என்றால் என்ன?

தற்போது இது பற்றி பல பெண்களும் பேசி வரும் நிலையில், இது ஒன்றும் புதிதல்ல என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். பயோடெக்னாலஜி தகவலுக்கான தேசிய மையத்தில் வெளியிடப்பட்ட 2004 ஆம் ஆண்டு ஆய்வில், கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் இருந்து ஆய்வு செய்யப்பட்ட 18 பேரின் மூக்கில் மாற்றங்கள் காணப்பட்டன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முன்புற ரைனோஸ்கோபி (AnR), பீக் இன்ஸ்பிரேட்டரி நாசி ஓட்டம், ஒலியியல் ரைனோமெட்ரி, முன்புற ரைனோமனோமெட்ரி (ARM) மற்றும் அறிகுறி அளவீட்டை வழங்கும் ரைனிடிஸ் கேள்வித்தாள் மதிப்பெண்களுடன் கூடிய சோதனை உள்ளிட்ட நாசி சுவாசப்பாதையின் அளவீடுகளை இந்த ஆய்வு பகுப்பாய்வில் மேற்கொண்டனர்.

Pimple Inside Nose: Treatments, Causes, and How to Identify

பிரக்னென்ஸி நோஸ் என்பது "ஹார்மோன் அதிகரிப்பால் கர்ப்பத்தில் காணப்படும் உடலியல் மாற்றங்களில் ஒன்றாகும்" என்று நொய்டாவின் தாய்மை மருத்துவமனையின் மூத்த ஆலோசகர், மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ நிபுணர் டாக்டர் மஞ்சு குப்தா கூறினார். இது சில பெண்களுக்கு ஏற்பட கூடிய பாதிப்பாக பார்க்கப்படுகிறது என்றும் குறிப்பிட்டார்.

இது கவலைப்பட வேண்டிய விஷயமா?

மருத்துவ இயக்குனர் மற்றும் IVF நிபுணரான டாக்டர் ஷோபா குப்தா இது குறித்து கூறுகையில், ஹார்மோன்கள் வாஸ்குலர் விரிவாக்கத்தை உருவாக்குகின்றன. இது கருப்பைக்கு தேவையான குறிப்பிட்ட பகுதிகளுக்கு த்த ஓட்டத்தை அதிகரிக்க வழிவகுக்கும். மூக்கு என்பது அதிக இரத்த ஓட்டத்தை அனுபவிக்கும் சளி சவ்வுகளுடன் கூடிய உடல் பாகங்களில் ஒன்றாகும். இது பெரும்பாலும் பாதிப்பில்லாதது மற்றும் பிற கர்ப்ப அறிகுறிகளை போலவே இதுவும் சாதாரண ஒன்று தான் என்று மருத்துவர் கூறினார்.

Also Read | குழந்தைக்காக முயற்சிக்கும் தம்பதிகள் இந்த பழக்கங்களை மாற்றியே ஆக வேண்டும்..!

மீண்டும் மூக்கு பழைய அளவுக்கு திரும்புமா?

top videos

    பொதுவாக இந்த பாதிப்பு உள்ள பெண்களுக்கு இருக்க கூடிய முக்கிய கேள்வி, தங்களது மூக்கு மீண்டும் பழைய அளவுக்கு திரும்புமா என்பது தான். இது குறித்து மருத்துவர்கள் கூறுவது என்னவென்றால், மூக்கு அதன் அசல் நிலைக்குத் திரும்புவதற்கு சிறிது காலம் ஆகும் என்று குறிப்பிட்டுள்ளனர். எனவே பிரசவத்திற்குப் பிறகு உடனடியாக மூக்கின் அளவில் மாற்றம் தெரியவில்லை என்றாலும், ஹார்மோன்கள் குறைவதால் 6-8 வாரங்களுக்குள் வித்தியாசத்தைக் காணலாம்" என்று டாக்டர் மஞ்சு அவர்கள் கூறியுள்ளார்.

    First published:

    Tags: Pregnancy changes, Pregnancy Risks, Pregnancy Symptoms