பற்கள் தான் நம்முடைய முகத்திற்கு அழகு சேர்க்கிறது என்று கூற வேண்டும். எனவே பற்களை வெள்ளையாக மட்டும் வைத்துக்கொள்வதோடு பல் ஆரோக்கியம் மற்றம் வாய்வழி சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டும். இவை உடலில் பாக்டீரியாவைக் கட்டுக்குள் வைத்திருக்க அனுமதிக்கிறது. எனவே, சரியான பல் சுகாதாரம் இல்லாமல் இருப்பது, பாக்டீரியாக்கள் பல் சொத்தை மற்றும் ஈறு நோய் போன்ற வாய்வழி தொற்றுகளுக்கு வழிவகுக்கும்.
மேலும் உங்களது ஈறுகள், தசைநார்கள் அல்லது எலும்பில் தொற்று மற்றும் வீக்கம் ஏற்படுகிறது. இதோடு வாய் வழி சுகாதாரம் இல்லாதது உங்களது உடலின் மற்ற பகுதிகளை எவ்வாறு பாதிக்கும் என்பதை பலர் உணரத் தவறுகிறார்கள். இதனால் நிமோனியா வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ள நிலையில், மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.
மோசமான பல் சுகாதாரம் நிமோனியாவுக்கு எவ்வாறு வழிவகுக்கிறது?
பொதுவாகவே வாயில் கிருமிகள் நிரம்பியிருக்கும் போது, உங்களது வாயில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை வளரச் செய்கிறது. இதனால் பல பல் பிரச்சனைகள் ஏற்படுவதோடு, சில பாக்டீரியாக்கள் சுவாச மண்டலத்தில நுழைகின்றன. இவை நுரையீரலுக்குள் நுழைந்து நிமோனியாவை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை உருவாக்குகின்றன. இதோடு நம்முடைய வாய் மற்றும் பல சுகாதாரமற்று இருக்கும் போது, கிருமிகள் உடலில் நுழைவதற்கான வாய்ப்பாக அமைகிறது.
வாய்வழியாக நுழையும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள், நுரையீரல் செல்களின் சென்சார்களை அதிகரிப்பதோடு, நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது. பாக்டீரியல் என்சைம்கள் செல்லைப் பாதுகாக்கும் புரதங்களை சிதைக்கின்றன. இது பாக்டீரியா நோயைப் பரப்ப உதவுகிறது. பாக்டீரியா மற்றும் அதன் சேர்மங்களால் சளியின் அதிகப்படியான உற்பத்தி காரணமாக அறிகுறிகள் மோசமடைகின்றன.
வாய்வழி சுகாதாரத்தை கடைபிடிப்பதற்கான நடவடிக்கைகள்:
தடுக்கும் நடைமுறைகள்: நிமோனியாவைத் தடுக்க பல் சுகாதாரத்தை பராமரிப்பதன் முக்கியத்துவத்தை இது மேலும் குறிக்கிறது. வழக்கமான ஃப்ளோசிங் மற்றும் துலக்குதல் தவிர, வாயில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களைத் தவிர்க்க வேண்டும்.
Also Read | பல் தேய்க்கும்போது இரத்தக் கசிவு இருக்கா..? அப்போ இந்த ஈறுகள் பராபரிப்பில் கவனம் செலுத்துங்க..!
வாயைப் பாதுகாக்கும் வழக்கமான பல் பரிசோதனைகள் மூலம் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா மற்றும் பிளேக்கின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைக்க முடியும். எனவே இதுப்போன்ற நடவடிக்கைகளை நீங்கள் முறையாக கடைப்பிடித்தாலே எவ்வித உடல் பாதிப்பும் உங்களுக்கு ஏற்படாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Dental Care, Oral care, Pneumonia, Teeth