முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / கொலஸ்ட்ராலை குறைக்க வெறும் வயிற்றில் இந்த பொடியை தண்ணீரில் கலந்து குடிங்க.. ஆயுர்வேத நிபுணரின் டிப்ஸ்..!

கொலஸ்ட்ராலை குறைக்க வெறும் வயிற்றில் இந்த பொடியை தண்ணீரில் கலந்து குடிங்க.. ஆயுர்வேத நிபுணரின் டிப்ஸ்..!

கொழுப்பை கட்டுப்படுத்த டிப்ஸ்

கொழுப்பை கட்டுப்படுத்த டிப்ஸ்

நமது உடலில் மொத்த கொலஸ்ட்ரால் 200 mg/dL க்கும் குறைவாக இருக்க வேண்டும். நல்ல கொழுப்பின் (HDL) அளவு 50 mg/dL க்கும் அதிகமாக இருக்க வேண்டும். கெட்ட கொலஸ்ட்ரால் (LDL) 100 mg/dL க்கும் குறைவாக இருக்க வேண்டும். இதற்கு மேல் நிலை உயர்ந்தால், அது சிக்கலை ஏற்படுத்தும்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Tamil Nadu, India

தற்போது அனைத்து வயதினரும் கொலஸ்ட்ரால் அதிகரிப்பால் அவதிப்படுகின்றனர். கொலஸ்ட்ரால் என்பது உடல் செல்களுக்கு ஆற்றலை அளிக்கக் கூடியது. எனவேதான் உடலில் கொழுப்பு என்பது அத்தியாவசிய தேவையாக உள்ளது. அதேசமயம் கொலஸ்ட்ரால் அளவு இயல்பை விட அதிகமாக இருந்தால் உயிருக்கே ஆபத்தாக மாறும்.

காரணம் அது முதலில் இரத்த ஓட்டத்தைத் தடுக்கும். தமனிகளில் குவிந்து மாரடைப்பு, பக்கவாதம் போன்ற கடுமையான பாதிப்புகளை விளைவிக்கும். கொலஸ்ட்ரால் உருவாகும்போது அதன் ஆரம்ப அறிகுறிகள் தெரியாது என்பதால் அமைதியான கொலையாளி என்றும் அழைக்கப்படுகிறது. பின் அளவுக்கு அதிகமான கொலஸ்ட்ரால் சேரும்போது மட்டுமே அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும்.

நமது உடலில் மொத்த கொலஸ்ட்ரால் 200 mg/dL க்கும் குறைவாக இருக்க வேண்டும். நல்ல கொழுப்பின் (HDL) அளவு 50 mg/dL க்கும் அதிகமாக இருக்க வேண்டும். கெட்ட கொலஸ்ட்ரால் (LDL) 100 mg/dL க்கும் குறைவாக இருக்க வேண்டும். இதற்கு மேல் நிலை உயர்ந்தால், அது சிக்கலை ஏற்படுத்தும்.

அந்த வகையில் பலரும் அதிக கொழுப்பால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அதை எப்படி கட்டுப்படுத்துவது என்ற கேள்வி பலருக்கும் எழுகிறது. இதை பற்றி ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் அபினவ் ராஜ், ஆயுர்வேதத்தில் அதிக கொழுப்பைக் கட்டுப்படுத்த இலவங்கப்பட்டை மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது என்று கூறுகிறார்.

இலவங்கப்பட்டையை அரைத்து, ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டை பொடியை தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் குடித்து வந்தால், கொலஸ்ட்ரால் வேகமாக கட்டுப்படுத்தப்படுகிறது.

இலவங்கப்பட்டை ஆரோக்கியத்திற்கு நன்மை செய்யும் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. இலவங்கப்பட்டை சாப்பிடுவது நீரிழிவு நோயாளிகளுக்கும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது. இரத்த சர்க்கரை கட்டுப்படுத்த உதவுகிறது.

Also Read : சர்க்கரை நோயை ஒரு சிட்டிகையில் கட்டுப்படுத்தும் கிட்சன் மசாலாக்கள்..!

ஆண்களுக்கான இலவங்கப்பட்டையின் பலன்கள்:

விறைப்புத்தன்மை குறைபாடு உள்ள ஆண்களுக்கு இலவங்கப்பட்டை மிகவும் நன்மை பயக்கும். தூங்கும் முன் இலவங்கப்பட்டையை பால் அல்லது தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.

சரும ஆரோக்கியத்திற்கு நல்லது:

top videos

    இலவங்கப்பட்டை பயன்படுத்துவதால் தோல் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கலாம். இலவங்கப்பட்டை பொடியை தேனுடன் கலந்து முகப்பருக்கள் உள்ள இடத்தில் தடவி வந்தால் சில நாட்களில் மறையும். இலவங்கப்பட்டை உங்களை நீண்ட காலத்திற்கு இளமையாக வைத்திருக்க உதவுகிறது.

    First published:

    Tags: Bad Cholesterol, Cinnamon, High Cholesterol Symptoms