முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / கர்ப்ப காலத்தில் இரண்டாவது மாதத்தில் வயிற்று வலிக்கு என்ன காரணம்?

கர்ப்ப காலத்தில் இரண்டாவது மாதத்தில் வயிற்று வலிக்கு என்ன காரணம்?

பெண்குயின் கார்னர் 76

பெண்குயின் கார்னர் 76

பெண் குயின் கார்னர் 76 | ஒரு சிலருக்கு அசைவ உணவு, அதிலும் குறிப்பாக வெளியே தயாரிக்கப்படும் அசைவ உணவு கர்ப்ப காலத்தில் ஒத்துக் கொள்ளாமல் போகலாம் .

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆர்த்தி அன்று தன் தாயுடன் மருத்துவமனைக்கு வந்திருந்தார். அவர் கணினி துறையில் பணிபுரிகிறார். திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தன் முதல் குழந்தையை கருவில் தாங்கி இருக்கிறார். இரண்டு மாதங்கள் ஆகிறது.

ஆர்த்தி முகத்தில் பயமும் பதற்றமும் தெரிந்தது.

"டாக்டர் ! எனக்கு இரண்டு மணி நேரமாக வயிற்றில் வலி அதிகமாக இருக்கிறது. வயிற்றுக்குள் உருளுவது போன்று வலி இருக்கிறது. வாந்தி வருவது போன்று தோன்றுகிறது. இன்று காலையிலிருந்து சாப்பிடவில்லை என்று தொந்தரவுகளை அடுக்கினார்.

ஆர்த்தியின் தாயும், " முதல் குழந்தை என்பதால், ரொம்பவும் டென்ஷனா இருக்கிறது டாக்டர் ! என்ன பிரச்சனையாய் இருக்கும்? பேபி நல்லா இருக்கும் இல்ல? " தன் பங்கிற்கு கவலைகளை கொட்டினார்.

என் பதில்:

முதல் மூன்று மாதத்தில் பெரும்பாலும் வயிற்று வலி அஜீரணக் கோளாறு அல்லது சிறுநீர் பாதை தொற்று இவற்றால் ஏற்படலாம். வலியுடன் ரத்தப்போக்கு இருந்தால் அது கருவுடன் தொடர்புடைய பிரச்சனையாக இருக்கலாம். மேலும் கருச்சிதைவை நோக்கிச்செல்லலாம்.

Abdominal pain during pregnancy: Should you be worried? | Parenting News,The Indian Express

ஒரு சிலருக்கு அதிகமான கர்ப்ப காலத்தில் ஏற்படும் அதிகஇரத்த ஓட்டத்தின் காரணமாக லேசான வயிற்று வலி இருக்கலாம். அது தவிர அவரவர் செய்யும் வேலையை பொறுத்தும் வலி வரலாம். பெரும்பாலும் கணினி துறையில் இருப்பவர்கள் வெகு நேரம் உட்கார்ந்தே இருப்பதால் வயிற்று வலி கழுத்து வலி, முதுகு வலி, கால்வலி போன்றவை கர்ப்ப காலத்தில் அடிக்கடி வருவதற்கு வாய்ப்பு உண்டு.

ஆர்த்திக்கு ஸ்கேன் செய்து பார்த்ததில் கருவினுடைய வளர்ச்சியும் இதயத் துடிப்பும் சீராக இருந்தது. கர்ப்பப்பையும் நார்மலாக இருந்தது. எனவே இந்த வலி கர்ப்பப்பையுடன் தொடர்புடையதாக இருப்பதற்கு வாய்ப்பில்லை.

அத்துடன் முதல் நாள் ஆர்த்தி ஒரு திருமணத்தில் அசைவ உணவை சாப்பிட்டு இருக்கிறார். ஒரு சிலருக்கு அசைவ உணவு, அதிலும் குறிப்பாக வெளியே தயாரிக்கப்படும் அசைவ உணவு கர்ப்ப காலத்தில் ஒத்துக் கொள்ளாமல் போகலாம்.

Also Read | பெண்குயின் கார்னர் 75 | கர்ப்ப காலத்தில் தலைசுற்றல் இருந்தால் சத்து இல்லை என்று அர்த்தமா..?

வயிற்றை சரி செய்யும் மருந்துகளும் ஜீரணத்தை சமமாக்கும் மருந்துகளும் மற்றும் இரண்டு மூன்று நாட்களுக்கு கடைபிடிக்க வேண்டிய உணவு முறையையும் எடுத்துக் கூறினேன்.

ஸ்கேன் செய்யும் போது ஆர்த்தி குழந்தையின் இருதய துடிப்பை கேட்டுக் கொண்டிருந்தார். குழந்தைக்கு எதுவும் பாதிப்பில்லை என்று தெரிந்ததும் பாதி பதட்டமும் பயமும் குறைந்தது. உணவினால் ஏற்பட்ட சிக்கல்தான் என்று புரிந்ததும் பதற்றம் முழுமையாக விலகியது. நன்றி கூறி தாயும் மகளும் விடைபெற்றனர்.

கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மாவை தொடர்பு கொள்ள : doctorjsharma@gmail.com

First published:

Tags: Pregnancy, Pregnancy care, பெண்குயின் கார்னர்