முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / கர்ப்ப காலத்தில் கால் வீக்கம் வருவது ஏன்..? மருத்துவர் தரும் விளக்கம்..!

கர்ப்ப காலத்தில் கால் வீக்கம் வருவது ஏன்..? மருத்துவர் தரும் விளக்கம்..!

பெண்குயின் கார்னர் 79

பெண்குயின் கார்னர் 79

பெண்குயின் கார்னர் 79 : முக்கியமாக கர்ப்பிணி பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியது, 70% கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் கால்களில் வீக்கம் ஏற்படலாம். அது ஒவ்வொருவருடைய உடல்வாகை பொறுத்து ஒரு சிலருக்கு லேசாகவும் ஒரு சிலருக்கு மிகவும் கவனிக்கத்தக்க, கவலைப்படத்தக்க அளவிலும் இருக்கலாம்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Tamil Nadu, India

லீனா , தன் கணவருடன் மருத்துவமனைக்கு வந்திருந்தார். தன்னுடைய முதல் கர்ப்பத்தில் ஆறாவது மாதத்தில் இருக்கிறார். வங்கியில் பணிபுரிகிறார். லீனாவிடம், குறிப்பிட்ட தேதிக்கு வந்து பரிசோதனை செய்து கொள்வது, பரிந்துரைக்கப்பட்ட மாத்திரைகளை எடுத்துக் கொள்வது, என்று எல்லாவற்றிலும் ஒரு சரியான ஒழுங்கு இருக்கும். "லீனா,! உனக்கு கர்ப்ப காலத்தில் எந்த சிக்கலும் வராது" என்று கூறுவேன்.

முதல் நாள் மாலை லீனா ஒரு வித்தியாசத்தை உணர்ந்து இருக்கிறார். லேசாக பாதங்கள் இரண்டும் வீங்கி இருந்திருக்கிறது. வங்கி வேலைகளை முடித்துவிட்டு மாலை அலுவலகத்தில் இருந்து வீடு திரும்ப கிளம்புகையில் அவரால் அவருடைய செருப்புகளை அணிய முடியவில்லை .அந்த அளவிற்கு பாதங்கள் இரண்டும் அப்பளம் போல வீங்கி விட்டன. அதனால் ஏதேனும் இதனால் பிரச்சனை வருமா ? என்று வந்திருந்தனர்.

என் பதில்:

முக்கியமாக கர்ப்பிணி பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியது, 70% கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் கால்களில் வீக்கம் ஏற்படலாம். அது ஒவ்வொருவருடைய உடல்வாகை பொறுத்து ஒரு சிலருக்கு லேசாகவும் ஒரு சிலருக்கு மிகவும் கவனிக்கத்தக்க, கவலைப்படத்தக்க அளவிலும் இருக்கலாம்.

கர்ப்ப காலத்தில் கால் வீக்கத்திற்கான காரணங்கள்:

  • காலில் இருந்து இருதயத்திற்கு செல்லக்கூடிய ரத்தம் புவியீர்ப்பு விசையை எதிர்த்து செல்லும் பொழுது இயல்பாக இருப்பதை விட கர்ப்ப காலத்தில் சிறிது மெதுவாக இருக்கும்.
  • கர்ப்ப காலத்தில் இரத்தம் செல்லக்கூடிய சிரைகள் லேசாக விரிவடைந்து இருக்கும்.
  • ரத்தத்தினுடைய அளவும் அதிகமாக இருப்பதோடு ரத்தத்தில் உள்ள நீரின் அளவு அதிகமாகவும், செல்கள் ஒப்பிட்டு அளவில் குறைவாகவும் இருக்கும்.
  • வளரும் கர்ப்பப்பையின் அழுத்தம் காரணமாக கீழிருந்து இருதயத்திற்கு மேலே செல்லக்கூடிய ரத்தத்தின் ரத்தம் லேசாக தடைபடும்.

இதை சமாளிக்கும் முறைகள்:

  • நிற்கும் நேரத்தை குறைத்துக் கொள்வது நல்லது. முடிந்தவரை கால்களை கீழே தொங்கவிடாமல் உயரத்தில் வைத்துக் கொள்ளலாம். இரவில் படுக்கும் பொழுதும் கால்களுக்கு கீழே தலையணைகளை வைத்து அதன் மீது கால்களை வைத்து உறங்குவது நல்லது.
  • மெதுவான நடை பயிற்சி, அத்தோடு பாதங்களுக்கான லேசான பயிற்சியும் நல்ல பலனை தரும்.
  • நீர் ஆகாரங்களை அதிகமாக அருந்துதல் , உப்பு அளவு குறைவாக சேர்த்துக் கொள்ளுதல் நலம்.
  • கால்களில் அணியும் காலணிகள் மிகவும் இறுக்கமாக இல்லாமல் லேசாக தளர்வாக பிடிக்கும்படி இருப்பது நல்லது.
  • 70 சதவீத கால் வீக்கம் கவலை தரக்கூடியது இல்லை என்றாலும் 30 சதவீதமான பெண்களுக்கு லேசான ரத்த அழுத்த அதிகரிப்பும் அத்துடன் சிறுநீரில் புரதம் வெளியேறுவது போன்ற பிரச்சனையும் இருக்கலாம். அதனால் கால் வீக்கம் இருந்தால் அதற்குரிய சரியான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். வெகு அரிதாக ஒரு சிலருக்கு கல்லீரல் அல்லது இருதய நோய்கள் இருப்பினும் காலில் அதிகமான வீக்கம் ஏற்படலாம். என்று முடித்தேன்.

    லீனாவை பரிசோதனை செய்தேன், குழந்தையினுடைய வளர்ச்சி சரியாக இருந்தது .இருதய துடிப்பும் நன்றாக இருந்தது. மீனாவுடைய ரத்த அழுத்தம் இயல்பான அளவில் இருந்தது. அவருக்கு சிறுநீர் டெஸ்ட் செய்ததிலும் எல்லாம் நார்மல் என்றே வந்தது.

    உங்களுக்கு எந்த விதமான பிரச்சனையும் இல்லை. இது கர்ப்ப காலத்தில் உண்டாக கூடிய சாதாரண கால் வீக்கம் மட்டுமே. எனவே கவலைப்பட வேண்டாம். இருப்பினும் கர்ப்பகாலம் முடியும் வரை, சிலருக்கு பிரசவம் ஆன பிறகு, ஆறு வாரங்கள் வரை, லேசான கால் வீக்கம் தொடரலாம் . வேறு ஏதும் பிரச்சனை இல்லாதவர்கள் அதைக் கண்டு பயப்பட தேவையில்லை.

    Also Read | பெண்குயின் கார்னர் 78 : கர்ப்பமாக இருக்கும் நான்காம் மாதம் தொப்புள் வலி எதனால் வருகிறது..? மருத்துவர் தரும் விளக்கம்

    "நன்றாக விளக்கி சொன்னீர்கள் டாக்டர்! நீங்கள் சொன்ன ஆலோசனைகளை பின்பற்றுகிறேன் .மிக்க நன்றி! என்று கூறி விடை பெற்றார்"லீனா.

top videos

    கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மாவை தொடர்பு கொள்ள : doctorjsharma@gmail.com

    First published:

    Tags: Pregnancy, Pregnancy care, பெண்குயின் கார்னர்