வித்யா தன்னுடைய தாயுடன் அன்று கர்ப்ப கால பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு வந்திருந்தார். வித்யா தன்னுடைய முதல் கர்ப்பத்தின் நான்காவது மாதத்தில் இருக்கிறார். வித்யாவிற்கு ஓரளவு நீண்ட கூந்தல் இருக்கும். அத்துடன் தன்னுடைய கூந்தலை பராமரிப்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர். இந்த கர்ப்பகால துவக்கத்திலிருந்தே வித்யாவிற்கு தனக்கு முடி கொட்டி விடுமோ என்ற பயம் இருந்து கொண்டே இருந்தது.
இப்பொழுது தனக்கு அதிகமாக முடி உதிர்வதாகவும் முடியின் அடர்த்தியும் வெகுவாக குறைந்து விட்டதாகவும் கடந்த 15 நாட்களில் மிகவும் அதிகமாக அதை உணர்வதாகும் கூறினார்.
என்பதில்:
கர்ப்ப காலத்தில் சுரக்கக்கூடிய ஹார்மோன்கள் முடி நன்றாக வளர்வதற்கானவை. எனவே பொதுவாக கர்ப்ப காலத்தில் முடி நன்றாக வளரும் அல்லது அதே அளவு இருந்து கொண்டிருக்கும்.
கர்ப்ப காலத்தில் வாந்தி, சரிவர உணவு எடுத்துக்கொள்ள முடியாமை போன்றவற்றால் சத்து குறைபாடு ஏற்பட்டு முடி கொட்டும். ஒரு சிலருக்கு கர்ப்ப காலத்தில் தலைமுடியை பராமரிப்பது கடினமாக இருப்பதால் முடி கொட்டுவதற்கு காரணமாகலாம். ஆனால் பொதுவாக பிரசவத்திற்கு பிறகு முடி உதிர்தலை காணலாம்.
கர்ப்பமாக இருக்கும் போது கரு குழந்தையின் எல்லா பாகங்களும் புதியதாக உருவாக வேண்டியிருப்பதால் தாய்க்கு அதிக அளவில் சத்து தேவைப்படுகிறது. எனவே தாயினுடைய உடலில் உள்ள எல்லா சத்துக்களும் கர்ப்ப காலத்தில் குழந்தைக்கு சென்று விடுகின்றன. எனவே தாய்க்கு ரத்து குறைபாடு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. அதனால் தான் கர்ப்ப காலத்தில் சத்துள்ள உணவை தவறாமல் கர்ப்பிணி பெண்கள் எடுத்துக் கொள்வது குழந்தையினுடைய வளர்ச்சிக்கு மட்டுமல்லாது முடி கொட்டுதல் போன்ற பிரச்சனைகளையும் தவிர்ப்பதற்கு உதவும். அதனால்தான் கூடுதலாக இரும்பு சத்து , கால்சியம் மாத்திரைகளைகளும் கர்ப்பிணிகளுக்கு தரப்படுகின்றன. அவர்களுடைய உடல் உள்ள சத்துக்கள் ஓரளவு பாதுகாக்கப்படுகிறது. பிரசவத்திற்கு பிறகு முடி கொட்டுவதற்கு வாய்ப்பிருக்கும்.
அது தவிர பொதுவாக முடி கொட்டுவதற்கான காரணங்கள் என்ன?
பொடுகு அழுக்கு போன்ற பிரச்சனைகளும் இருக்கலாம். கர்ப்ப காலத்தில் பலருக்கு தன் தலை முடியை பராமரிக்க முடியாததால் முடி கொட்டுவதற்கான காரணமாகிறது.
எனவே வித்யா ! உங்கள் தலையில் பொடுகு பிரச்சனை இருக்கிறதா!? என்று கேட்டேன்.
"ஆமாம்! டாக்டர் !இப்போது லேசாக பொடுகு பிரச்சனை ஆரம்பித்துள்ளது. என்றார்.
பெரும்பாலும் அதுதான் உங்களுடைய முடி கொட்டுவதற்கான காரணமாக இருக்கும். அதனால் நான் எழுதித்தரும் பொடுகு ஷாம்புவை வாரம் ஒரு முறை பயன்படுத்துங்கள் "என்று கூறினேன்.
Also Read | பெண்குயின் கார்னர் 85 : கர்ப்ப காலத்தில் வெரிகோஸ் வெய்ன் வந்தால் ஆபத்தா..? மருத்துவரின் பதில்..!
இரண்டு வாரங்கள் கழித்து மீண்டும் பரிசோதனைக்காக வந்தபோது தலையில் அரிப்பு குறைந்திருப்பதாகவும் முடி கொட்டுவதும் படிப்படியாக குறைந்து வருவதாகவும் வித்யா கூறினார். மகிழ்ச்சியாக இருந்தது. சிறு சிறு பிரச்சனைகள் கூட சில சமயங்களில் நமக்கு பெரிய மன வருத்தத்தை ஏற்படுத்தக் கூடும். எனவே எந்த ஒரு சிறு பிரச்சினையாக இருந்தாலும் அதை மருத்துவரிடம் பகிர்ந்து கொள்வதன் மூலம் உங்களுடைய கர்ப்ப காலத்தை மகிழ்ச்சியானதாக மாற்றிக் கொள்ள முடியும்.
கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மாவை தொடர்பு கொள்ள : doctorjsharma@gmail.com
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Hair fall, Pregnancy, Pregnancy changes, பெண்குயின் கார்னர்