முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / எனக்கு 4 மாதம் ஆகிறது.. இருந்தும் கர்ப்ப வயிறு தெரியவில்லை.. என்ன காரணம்..? மருத்துவர் பதில்..!

எனக்கு 4 மாதம் ஆகிறது.. இருந்தும் கர்ப்ப வயிறு தெரியவில்லை.. என்ன காரணம்..? மருத்துவர் பதில்..!

பெண்குயின் கார்னர்

பெண்குயின் கார்னர்

பெண்குயின் கார்னர் 81 :பல பெண்களுக்கும் இந்த சந்தேகம் இருக்கிறது. குறிப்பாக முதல் கர்ப்பத்தில் இருப்பவர்களுக்கு, குழந்தையின் வளர்ச்சி சரியாக இருந்தும், ஆறிலிருந்து ஏழு மாதம் வரை கூட கர்ப்பமாக இருக்கிறார், என்று பார்த்தால் கணிக்கும் அளவுக்கு தெரியாமல் இருக்கலாம்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Tamil Nadu, India

பிரியங்கா அன்று காலையில் தன் தோழியுடன் மருத்துவமனைக்கு வந்து காத்திருந்தார். பிரியங்கா ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். தன்னுடைய முதல் கர்ப்பத்தின் நான்காவது மாதத்தில் இருக்கிறார்.

அவருடன் வேலை செய்யும் தோழிகள் நான்கு மாதம் முடிந்து விட்டது. வயிரே தெரியவில்லையே! குழந்தை சரியாக வளர்ச்சி அடைந்துள்ளதா ? சந்தேகமாக இருக்கிறது. எதற்கும் டாக்டரை கேள்" என்று கூறியிருக்கிறார்கள் . அதிலிருந்து பிரியங்காவுக்கு மனதில் நிம்மதி போய்விட்டது.

என் பதில்:

பிரியங்காவை போலவே பல பெண்களுக்கும் இந்த சந்தேகம் இருக்கிறது. குறிப்பாக முதல் கர்ப்பத்தில் இருப்பவர்களுக்கு, குழந்தையின் வளர்ச்சி சரியாக இருந்தும், ஆறிலிருந்து ஏழு மாதம் வரை கூட கர்ப்பமாக இருக்கிறார், என்று பார்த்தால் கணிக்கும் அளவுக்கு தெரியாமல் இருக்கலாம்.

இதற்கான காரணங்கள்:

  • முதல் கர்ப்பத்தின் போது தாயினுடைய வயிற்றில் உள்ள தசைகள் இறுக்கமாக இருப்பதால் அந்த அளவுக்கு வெளியே வயிறு தெரியாமல் இருக்கலாம்.
  • உயரமாக உள்ள பெண்களுக்கு ஏழு மாதம் வரை கூட கர்ப்பவயிறு வெளியே தெரியாமல் இருக்கலாம்.
  • மிகவும் குண்டாக இருப்பவர்களுக்கும் கர்ப்ப வயிறு தனியாக தெரிவதற்கு ஏழு எட்டு மாதங்கள் வரை கூட ஆகலாம்.
  • விளையாட்டு வீரர்கள் மற்றும் உடற்பயிற்சி செய்து தசைகளை மிகவும் இறுக்கமாக வைத்திருக்கும் பெண்களுக்கும் கர்ப்ப வயிறு தெரிவதற்கு தாமதமாகலாம்.
  • ஒரு சில மிகக் கடினமான வேலை செய்பவர்களுக்கும் வயிற்று தசைகள் நன்றாக வளர்ச்சி அடைந்து இருப்பதால் வயிறு தெரிய தாமதமாகலாம்.
  • ஒரு சிலருக்கு ஆறு மாதங்களை கடந்தும் வயிறு தெரியாமல் இருப்பதற்கு காரணம், வயிற்றில் குழந்தையின் கிடப்பாகும். கிடப்பை பொறுத்து சிறிது தாமதமாக தெரியலாம்.

அதனால் அதே மாதத்தில் இருக்கும் மற்றவர்கள் வயிரைப்பார்த்து அத்தோடு ஒப்பிட்டுப் பார்த்து மனம் வருந்த வேண்டியது இல்லை. குழந்தையினுடைய வளர்ச்சி சரியாக இருக்கும் பொழுது வயிறு தெரியாமல் இருப்பது ஒன்றும் முக்கியம் இல்லை.

Also Read | ஐந்து மாதங்கள் ஆகியும் கருவில் குழந்தையின் அசைவு தெரியவில்லை எனில் அது நார்மலா..? மருத்துவர் விளக்கம்

இது எல்லாவற்றையும் பிரியங்காவுக்கு கூறினேன்.

பிறகு ஸ்கேன் செய்து பார்த்து குழந்தையின் வளர்ச்சி சரியாக இருப்பதை உறுதி செய்தேன். குழந்தையினுடைய இதய துடிப்பும் அசைவும் திருப்தியாக இருந்தன. இதற்கு பிறகு பிரியங்கா மனம் தெளிந்தார் . நிம்மதியாக வீட்டுக்கு சென்றார்.

top videos

    கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மாவை தொடர்பு கொள்ள : doctorjsharma@gmail.com

    First published:

    Tags: Pregnancy care, Pregnancy Risks, பெண்குயின் கார்னர்