முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் உண்டாவது ஏன்..? மருத்துவரின் விளக்கம்.!

கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் உண்டாவது ஏன்..? மருத்துவரின் விளக்கம்.!

மலச்சிக்கல்

மலச்சிக்கல்

பெண்குயின் கார்னர் 82 : கர்ப்ப காலத்தில் இவ்வாறு கான்ஸ்டிபேஷன் ஏற்படுவதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும்? பார்க்கலாம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பர்வீன் மருத்துவ ஆலோசனைக்காக அன்று தன் தாயுடன் மருத்துவமனையில் காத்திருந்தார். பர்வீன் அரசு அலுவலகத்தில் எழுத்தர் பணி செய்கிறார். தன்னுடைய முதல் கர்ப்பத்தில், நான்காம் மாதத்தில் இருக்கிறார்.

பொதுவாக கர்ப்பிணிக்கான பரிசோதனைகளை செய்த பிறகு ஏதேனும் சந்தேகங்கள் இருக்கிறதா? என்று கேட்டேன். பர்வீன் தனக்கு மலச்சிக்கல் இருப்பதாகவும் ஒரு சில நாட்களாக மலம் கழிக்க மிகவும் சிரமப்படுவதாகவும் கூறினார்.

கர்ப்ப காலத்தில் இவ்வாறு கான்ஸ்டிபேஷன் ஏற்படுவதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும் பார்க்கலாம்.

கர்ப்ப கால ஹார்மோன்கள் : 

  • இவை குடலின் தசைகளை லேசாக தளர்த்துவதோடு, அவை அசையும் வேகத்தையும் மட்டுப்படுத்துகின்றன. இதனால் மலச்சிக்கல் உண்டாக்கலாம்
  • அத்துடன் ஏற்கனவே மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்களுக்கு பிரச்சனையின் தீவிரம் அதிகரிக்கலாம்.

உணவு முறை : 

  • அடிக்கடி  உணவுகளை உண்பவர்களுக்கு கர்ப்பகாலம் மட்டுமல்லாது எப்போதுமே இந்த பிரச்சனை ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. கற்பகாலத்தில் கூடுதலாகும்.

பணி : 

  • அது போலவே உட்கார்ந்து பணி செய்யும் பெண்களுக்கும் , பெட்ரஸ்ட் எனப்படும் படுக்கை ஓய்வு எடுக்க பெண்களுக்கும் இந்த பிரச்சனை ஏற்படலாம்.
  • கர்ப்ப காலம் 6 மாதத்தை தாண்டும் பொழுது வளரக்கூடிய குழந்தையினுடைய எடை பின்புறம் உள்ள குடலை அழுத்துவதாலும் ஒரு சிலருக்கு பிரச்சனை ஏற்படலாம்.

மாத்திரைகள் : 

  • கடைசியாக கர்ப்ப காலத்தில் எடுக்கும் ,
  • குறிப்பாக இரும்பு சத்து மாத்திரைகள் ஒரு சிலருக்கு மலச்சிக்கலை ஏற்படுத்தலாம்.

நீர்ச்சத்து : 

  • முதல் மூன்று மாதங்களில் கர்ப்ப காலத்தில் குறிப்பாக முதல் மூன்று மாதங்களில் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணாமல் இருக்கலாம் அல்லது வாந்தி பசியின்மை மயக்கம் போன்றவற்றால் உண்ண முடியாமல் போகலாம்.
  • உடலில் நீர் சத்து குறையும் பொழுது மலச்சிக்கல் ஏற்பட காரணமாகிறது.

நோய்கள்:

  • ஆசனவாயில் பைல்ஸ் , ஃப்ஷர் , பிளவு , மூலம் போன்ற பிரச்சனைகள் இருப்பின் கர்ப்ப காலத்தில் அவைகளாலும் சிக்கல் உண்டாகலாம். அவை மலச்சிக்கலை அதிகப்படுத்தலாம்.
  • அரிதாக தைராய்டு சுரப்பு குறைவாக உள்ளவர்கள் மற்றும் கடுமையான சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் இந்த பிரச்சனை ஏற்படலாம்.

Also Read | பெண்குயின் கார்னர் 81 : எனக்கு 4 மாதம் ஆகிறது.. இருந்தும் கர்ப்ப வயிறு தெரியவில்லை.. என்ன காரணம்..? மருத்துவர் பதில்..!

எப்படி சமாளிக்கலாம்..?

முதலில் அவர்களுடைய வாழ்க்கை முறை மாற்றம் அதாவது உணவு முறையில் மாற்றம். ஏராளமான நார்ச்சத்து மிகுந்த உணவுப் பொருட்களை சேர்த்துக் கொள்வது குறிப்பாக காய்கறிகள் கீரைகள் பழங்களை உண்ணுதல் மற்றும் பருப்பு தானியங்கள் சுண்டல் போன்றவை உணவில் சேர்த்துக் கொள்ளுதல் . அவற்றுடன் அதிகமாக தண்ணீர் அருந்துதல் மற்றும் தண்ணீர் நிறைந்த உணவுகளான பழச்சாறுகள் சூப் போன்றவையும் இந்த பிரச்சனையின் தீவிரத்தை குறைக்கும். காய்ந்த திராட்சையை தண்ணீரில் ஊற வைத்து உண்பது மலச்சிக்கலை குறைக்கும்.

தவிர்க்க வேண்டிய உணவுகளை குறைத்துக் கொள்வதும் நலம். குறிப்பாக சோடா உப்பு கலந்த உணவு பொருட்கள்- பிஸ்கட் ,பரோட்டா மற்றும் பிற குப்பை உணவுகளை தவிர்ப்பது நலம் . எண்ணெயில் பொரித்த பலகாரங்களையும் தவிர்க்கலாம்.

இரண்டாவதாக உடற்பயிற்சி : 

சிறிய உடற்பயிற்சிகளை செய்யலாம் நடை பயிற்சி மிகச் சிறந்த உடற்பயிற்சியாகும். குறிப்பாக உட்கார்ந்து செய்யும் பணிகளில் இருக்கும் பெண்கள் ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒரு முறையும் சிறிது நீர் கலந்த உணவு அருந்திவிட்டு ஐந்து நிமிடங்களாவது நடை பயிற்சி மேற்கொள்வது நலம் பயக்கும்.

சத்து மாத்திரைகளை இரண்டு மூன்று தினங்களுக்கு நிறுத்தி வைத்து பார்க்கலாம். இவை எவற்றிலுமே பலனளிக்காவிட்டால் மலமிளக்கி மருந்துகளை மருத்துவரின் பரிந்துரையின் பேரில் எடுத்துக் கொள்ளலாம். ஆசனவாயில் ஏதேனும் பிரச்சனைகள் இருப்பின் அதற்குரிய சரியான சிகிச்சையை எடுத்துக் கொள்ளலாம்.

பர்வீன்! , மேற்சொன்னவற்றை கடை பிடித்தால் கட்டாயமாக இந்த பிரச்சனையை சமாளித்து விடலாம் என்று கூறினேன்.

மிகவும் தெளிவாக கூறினீர்கள் டாக்டர்!. என்னுடைய google நீங்கள் தான். மிக்க நன்றி!! என்று மகிழ்ச்சியுடன் விடைபெற்றார் பர்வீன்.

top videos

    கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மாவை தொடர்பு கொள்ள : doctorjsharma@gmail.com

    First published:

    Tags: Constipation, Pregnancy changes, பெண்குயின் கார்னர்