லலிதா காலையில் தொலைபேசியில் என்னுடன் பேசினார். அவர் தன்னுடைய முதல் கர்ப்பத்தின் இரண்டாவது மாதத்தில் இருக்கிறார். திடீரென்று ரத்தக்கசிவும், அடி வயிற்றில் வலியும் ஏற்பட்டிருக்கிறது. உடனே மருத்துவமனைக்கு வருமாறு கூறியிருந்தேன்.
லலிதா தன் தாயுடன் மருத்துவமனையில் காத்திருந்தார்.
முகம் அழுது அழுது வீங்கி இருந்தது. என்னை கண்டதும் கண்களில் இருந்து பொல பொலவென்று கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது.
டாக்டர் "இன்னும் லேசாக ப்ளீடிங் இருக்கு. வலியும் இருக்கு" என்றார்.
உடனடியாக ஸ்கேன் செய்து பார்த்தேன். கருவை சுற்றிலும் ரத்தக்கசிவு இருந்தது. ஆனால் கருவினுடைய வளர்ச்சியும் இருதய துடிப்பும் சீராக இருந்தன. ரத்தப்போக்கை நிறுத்தும் மருத்துவத்தை துவக்கிவிட்டு தைரியமாக இருக்கும் படி கூறினேன்.
லலிதாவிற்கு சிறிது மனம் சமாதானமாகி இருந்தாலும் ஏராளமான கேள்விகள்." டாக்டர்! நேற்றைக்கு இரண்டு மூன்று தடவை மாடிப்படி ஏறி இறங்கினேன். அதனால பீளிடிங் ஆகிஇருக்குமோ??
எதனால இப்படி திடீர்னு ஆச்சி?
இதனால பேபிக்கு எதுவும் பாதிப்பு வருமா? நான் இனி எப்படி இருக்கணும்? " என்று வரிசையாக கேட்டார்.
என் பதில்:
மாடிப்படி ஏறி இறங்குவதால் இவ்வாறு ரத்தக்கசிவு ஏற்படாது. எனவே வருந்த வேண்டாம். பெரும்பாலான சமயங்களில், இவ்வாறு ஏற்பட தாய், தந்தை, இருவரிடத்திலும் எந்த விதமான தவறும் இருக்காது. குற்ற உணர்விலிருந்து முதலில் வெளியே வாருங்கள். பொதுவான காரணங்கள் சில..
உருவாகக்கூடிய நஞ்சுக்கொடியில் லேசான ஹார்மோன் குறைவால் இது போன்ற ரத்தக்கசிவு ஏற்படலாம். அல்லது கருக்குழந்தை ஆரோக்கியமாக இல்லை எனினும் ரத்தக்கசிவு ஏற்படும். இது தவிர தாய்க்கு உள்ள சில நோய்களாலும் கிருமி தாக்குதலாலும், அதிகமான காய்ச்சல், உடல்நிலை பாதிப்பு ,தாய் எடுத்துக் கொள்ளக்கூடிய சில மருந்துகளின் பக்க விளைவு, போன்றவற்றாலும் இவ்வாறு இரத்தக்கசிவு ஏற்படலாம்.
சில நேரங்களில் ரத்தக்கசிவிற்கான காரணம் எதுவுமே இருக்காது. பெரும்பாலான சமயங்களில் லேசான ரத்தக்கசிவு 'வார்னிங் சைன் 'என்று சொல்லப்படும் எச்சரிக்கை ஒலி போன்றது.
Also Read | பெண்குயின் கார்னர் 76 : கர்ப்ப காலத்தில் இரண்டாவது மாதத்தில் வயிற்று வலிக்கு என்ன காரணம்?
அதை நிறுத்துவதற்கான மருந்துகளை எடுத்துக் கொள்வதோடு சிறிது ஓய்வும் தேவை.. இவற்றிலேயே ஒன்று இரண்டு வாரங்களில் முழுமையாக ரத்தக்கசிவு நின்றுவிடும். ஆனால் கரு ஆரோக்கியமாக இல்லை எனில் அந்த ரத்த கசிவு படிப்படியாக அதிகரித்து கருச்சிதைவில் முடியலாம்.
ஆனால் லலிதா!! உங்களைப் பொறுத்தவரை அதை நினைத்து பயப்படத் தேவையில்லை.
கரு நன்றாக இருப்பதால் இந்த மருந்துகளிலேயே பிரச்சனை தீரக்கூடிய வாய்ப்பு உள்ளது . எனவே நம்பிக்கையோடு மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள். மீண்டும் ஒரு வாரம் கழித்து சந்திக்கலாம் என்று கூறினேன்.
தெளிந்த முகத்துடன் லலிதாவும் அவருடைய தாயாரும் நன்றி கூறி விடைபெற்றனர்.
கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மாவை தொடர்பு கொள்ள : doctorjsharma@gmail.com
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Pregnancy changes, Pregnancy Risks, பெண்குயின் கார்னர்