முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / எச்சரிக்கை..! நாக்கில் இந்த அறிகுறிகள் தென்பட்டால் உங்களுக்கு ’வைட்டமின் டி’ குறைபாடு இருக்கலாம்..!

எச்சரிக்கை..! நாக்கில் இந்த அறிகுறிகள் தென்பட்டால் உங்களுக்கு ’வைட்டமின் டி’ குறைபாடு இருக்கலாம்..!

வைட்டமின் டி

வைட்டமின் டி

நாக்கில் பின்வரும் அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக அதனை கவனித்து தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம்.

 • Last Updated :
 • Tamil Nadu, India

பொதுவாக போதிய சூரிய ஒளி பெறாதவர்கள் (வீட்டிலேயே வேலைப் பார்ப்பவர்கள், குண்டானவர்கள், வயதானவர்கள்) எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் ஒன்று தான் வைட்டமின் டி குறைபாடு. வைட்டமின் டி குறைபாடானது பலவீனமான எலும்புகள், எலும்பு குறைபாடுகள், தசைப்பிடிப்பு, சோர்வு போன்ற பல உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுத்து விடலாம்.

இதன் காரணமாக மனநலப் பிரச்சினைகள் கூட ஏற்படலாம். இது போன்ற ஊட்டச்சத்து குறைபாடு தங்களுக்கு உள்ளதா என்று அவ்வப்போது பரிசோதனை செய்து பார்த்துக் கொள்வது நல்லது. உங்களுக்கு வைட்டமின் டி குறைபாடு இருந்தால், அதனை ஒரு சில அறிகுறிகளின் மூலம் எளிதில் அறிந்து கொள்ளலாம்.

நாக்கிற்கும் வைட்டமின் டி-க்கும் உள்ள தொடர்பு :

வைட்டமின் டி குறைபாடானது எரியும் வாய் நோய்க்குறி ஏற்படுவதற்கு வழிவகுக்கும் என்று ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இது வாயில், குறிப்பாக நாக்கில் எரிச்சல், அல்லது கூச்ச உணர்வு போன்ற வலிமிகுந்த நிலையை ஏற்படுத்திவிடும்.

அறிகுறிகள் :

எரியும் வாய் நோய்க்குறியின் (Burning mouth syndrome) அறிகுறிகள் பின்வருமாறு:

 • நாக்கு மற்றும் உதடு அல்லது வாயிலன் மேற்புறம் போன்ற வாயின் பிற பகுதிகளில் மிகுந்த எரிச்சல் அல்லது கூச்ச உணர்வு இருத்தல்
 • வலியுடன் கூடிய உணர்வின்மை (விட்டு விட்டு இருக்கும்)
 • வாய் வறண்டு காணப்படுதல்
 • சுவையில் மாற்றம்

மருத்துவரை எப்போது அணுக வேண்டும் ?

எரியும் வாய் நோய்க்குறி தொடர்பான ஏதேனும் அறிகுறிகளை நீங்கள் அனுபவிக்க நேர்ந்தால், கண்டிப்பாக உங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது. இது போன்ற நிலை வைட்டமின் டி குறைபாடு காரணமாகத் தான் வரும் என்று சொல்ல முடியாது. அதனால் இதனை மருத்துவரிடம் சென்று சரியான நேரத்தில் கண்டறிந்து சரியான சிகிச்சையை எடுத்துக் கொள்வது அவசியம்.

பயனுள்ள குறிப்புகள் : 

இந்த நோய்க்குறிக்கு சிகிச்சை எடுத்துக் கொள்வதைத் தவிர, உங்களின் இந்த் நிலையை சரி செய்ய உதவும் வகையிலான சில பயனுள்ள குறிப்புகளும் உள்ளன.

Also Read | நாக்கின் நிறத்தை வைத்தே உடலில் என்ன பிரச்னை என கண்டுபிடிக்கலாமா..? எப்படி பார்ப்பது..? எந்த நிறம் ஆபத்து..?

 • எரிச்சல் மிகுதியாக இருப்பதால், நீங்கள் குளிர் பானத்தைப் பருகுதல், ஐஸ் கட்டிகளை உறிஞ்சுதல் அல்லது சர்க்கரை இல்லாத சூயிங் கம்மை மெல்லுதல் போன்றவை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
 • அதே சமயம் எரிச்சலை அதிகப்படுத்தக் கூடிய புகையிலை சூடான மற்றும் காரமான உணவுகள்; மதுபானங்கள்; ஆல்கஹால் கலந்துள்ள மவுத் வாஷ்; மற்றும் சிட்ரஸ் பழங்கள் மற்றும் பழச்சாறுகள் போன்ற அமிலம் அதிகம் உள்ள பொருட்களைத் தவிர்த்து விட வேண்டும்.

வாயில் எரிச்சல் உணர்வு ஏற்படுவதற்கான பிற காரணங்கள்:

அமெரிக்க தேசிய பல் மற்றும் கிரானியோஃபேஷியல் ஆராய்ச்சியின் படி, வாயில் எரிச்சல் உணர்வு ஏற்படுவதற்கான பிற காரணங்கள் பின்வருமாறு:

 • பற்களை அரைப்பது அல்லது தாடையை இறுக்குவது போன்ற பழக்கங்கள்
 • மனச்சோர்வு
 • ஹார்மோன் மாற்றங்கள் (நீரிழிவு அல்லது தைராய்டு போன்ற பிரச்சனைகள்)
 • பல் சார்ந்த பொருட்கள் (பொதுவாக உலோகங்கள்) அல்லது உணவுகளுக்கு ஒவ்வாமை
 • ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மருந்துகள்
 • ஈஸ்ட் தொற்று போன்ற வாயில் ஏற்படும் நோய்த்தொற்று
 • நெஞ்செரிச்சல்/ஆசிட் ரிஃப்ளக்ஸ்
top videos

  First published:

  Tags: Tongue, Vitamin D, Vitamin D Deficiency