பொதுவாக கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு தனக்கு சுகப்பிரசவமாக போகிறதா.! அல்லது சிசேரியன் முறையில் பிரசவமாக போகிறதா என்ற பயம் இருந்து கொண்டே இருக்கும். ஏனென்றால் சமீப ஆண்டுகளாகவே நார்மல் டெலிவரியை விட சிசேரியன் டெலிவரி தான் அதிகம் காணப்படுகிறது.
கர்ப்பிணி பெண்ணின் அடிவயிற்றை கீறி, கர்ப்பப்பையை கிழித்து உள்ளே இருக்கும் குழந்தையை பாதுகாப்பாக வெளியே எடுப்பது தான் சிசேரியன் டெலிவரி. தாய் மற்றும் சேய் இருவரின் உயிரையும் காப்பாற்றுவதே சிசேரியனின் அடிப்படை நோக்கம். இம்முறை caesarean section அல்லது C-section என்று குறிப்பிடப்படுகிறது.
வழக்கமாக சிசேரியன் என்பது தேர்ந்த மகப்பேறியல் நிபுணர்கள், மயக்கவியல் நிபுணர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட பயிற்சி பெற்ற அறுவை சிகிச்சை குழுவால் செய்யப்படுகின்றன. மேலும் சிசேரியன் செய்து கொண்ட தாய்க்கு போதுமான ரெக்கவரி டைம் தேவைப்படுகிறது. சூழலுக்கு ஏற்ப ஒரு உயிர் காக்கும் விஷயமாக செய்யப்பட்டு வரும் சிசேரியனை பற்றி ஏராளமான கட்டுக்கதைகள் உள்ளன. அவற்றை பற்றியும் உண்மை என்ன என்பதும் பற்றியும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
1. C-section செய்து கொண்டால் நிரந்தர முதுகுவலி ஏற்படும்
சிசேரியன் செய்து கொள்வதால் முதுகுவலி ஏற்படும் என்று கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இருப்பினும், நார்மல் அல்லது சிசேரியன் என்றாலும் பிரசவ முறையை பொருட்படுத்தாமல், கர்ப்ப காலத்தில் மற்றும் பிரசவத்திற்கு பின் பெண்களுக்கு முதுகுவலி என்பது பொதுவாக இருக்க கூடிய பிரச்சனை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். கர்ப்ப காலத்தில் உடல் தோரணையில் ஏற்படும் மாற்றங்கள், எடை அதிகரிப்பு மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக முதுகுவலி ஏற்படுகிறது.
2. தாய்ப்பால் கொடுக்க முடியாது
சிசேரியன் செய்து கொண்ட பெண்கள் தாய்ப்பால் கொடுக்க முடியாது என்று கூறப்படுவது உண்மை இல்லை. பிரசவ முறையை பொருட்படுத்தாமல் குழந்தையை பிரசவித்த ஒவ்வொரு புதிய தாய்க்கும் தாய்ப்பால் சுரக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். வெற்றிகரமாக சிசேரியன் செய்து கொண்ட தாய்மார்கள் ஸ்கின்-டு-ஸ்கின் கான்டாக்ட், சரியான latch டெக்னிக்ஸ், பிரெஸ்ட்ஃபீடிங் சப்போர்ட்ஸ் மூலம் தங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாம்.
3. புளிப்பை சாப்பிட்டால் சிசேரியன் வடுவில் தொற்று ஏற்படும்
புளிப்பு சுவையான ஒன்றை சாப்பிடுவதற்கும், சிசேரியன் வடுவில் ஏற்படும் தொற்றுக்கும் நேரடி தொடர்பு இல்லை. சிசேரியன் வடுவில் ஏற்படும் தொற்றுகளுக்கு மிகவும் பொதுவான காரணம் மோசமான சுகாதாரம் மற்றும் காயத்தை முறையாக பராமரிக்காமல்விடுவதும் தான். சிசேரியன் செய்ததால் ஏற்படும் காயத்தை பாக்டீரியாவுக்கு வெளிப்படுத்துவதை தவிர்க்க மருத்துவரின் அறிவுறுத்தல்களை பின்பற்றுவது அவசியம்.
4. வீக்காக இருந்தால் சிசேரியன் செய்ய மாட்டார்கள்
ஒரு கர்ப்பிணிக்கு சிசேரியன் செய்ய வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை முடிவு செய்ய பல காரணங்கள் உள்ளன. இதில் மருத்துவ நிலைமைகள், கருவின் நிலை மற்றும் முந்தைய சிசேரியன் ஆகியவை அடங்கும். எனவே ஒரு கர்ப்பிணியை சிசேரியனுக்கு உட்படுத்துவதற்கான முடிவு என்பது மருத்துவ தேவையை அடிப்படையாக கொண்டது. இதற்கும் பலவீனத்திற்கும் இடையே தொடர்பு இல்லை.
5. வயிற்றை தொளதொள வென தொங்க வைக்கிறது
நிரந்தரமாக வயிறு தொங்கும் நிலையை சிசேரியன் ஏற்படுத்தாது. இருப்பினும், எந்தவொரு சர்ஜரியையும் போலவே, சிக்கல்களை தவிர்க்க சர்ஜரி செய்ததால் ஏற்படும் காயத்தை சரியான முறையில் கவனித்து குணப்படுத்துவதில் கவனம் செலுத்துவது அவசியம். Pelvic floor exercises போன்ற உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவது வயிற்று தசைகளை டோன் செய்ய மற்றும் ஹீலிங்காவதை ஊக்குவிக்க உதவும்.
6. எடை குறைப்பு சாத்தியமற்றது
சிசேரியனுக்குப் பிறகு உடல் எடையை குறைப்பது மிகவும் சவாலானதாக இருக்குமே தவிர சாத்தியமற்றதாக இருக்காது. சிசேரியன் செய்து கொண்ட பின் உடல் குணமடைய நேரம் தேவைப்படுகிறது, மேலும் உடற்பயிற்சிகளில் ஈடுபடலாம் என மருத்துவர் அனுமதிக்க சிலகாலம் ஆகலாம். ஆரோக்கியமான டயட், உடல் செயல்பாடுகள் மற்றும் தாய்ப்பாலூட்டுதல் சிசேரியனுக்கு பின் எடை இழப்பை ஊக்குவிக்கும். ஹெவி வெயிட் லாஸ் பிளானை செயல்படுத்தும் முன் சிசேரியன் செய்து கொண்டவர்கள் தங்கள் உடல் முழுமையாக குணமடைய நேரம் கொடுப்பது முக்கியம்.
7. 3 மாதங்களுக்கு தீவிர ஓய்வில் இருக்க வேண்டும்
சிசேரியனுக்கு பின் உடல் குணமாக, காயங்கள் ஆற ஓய்வு முக்கியம் என்றாலும், 3 மாதங்களுக்கு கடுமையான பெட் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்ற கட்டுக்கதை அனைவருக்கும் பொருந்தாது. ஒரு பெண்ணின் தனிப்பட்ட சூழ்நிலைகளின் அடிப்படையில் தேவைப்படும் ஓய்வு அளவு மாறுபடலாம். வாக்கிங் போன்ற லேசான உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவது உடல் குணமாவதை ஊக்குவிக்கும் மற்றும் சர்குலேஷனை மேம்படுத்தும். எனவே ஓய்வு மற்றும் லேசான உடல் செயல்பாடுகளுக்கு முன்னுரிமை அளிப்பது ஹெல்தி ரெக்கவரிக்கு உதவும்.
8. எதிர்காலத்தில் நார்மல் டெலிவரிக்கு வாய்ப்பில்லை
இது தவறான கருத்து, சிசேரியன் செய்த பெண்கள் தங்களது அடுத்த பிரசவத்தில் நார்மல் டெலிவரியை எதிர்கொள்ளலாம். இது vaginal birth after caesarean என்று குறிப்பிடப்படுகிறது. எனினும் அபாயங்கள் மற்றும் நன்மைகளைப் பற்றி நிபுணருடன் விவாதித்த பிறகு VBAC செய்து கொள்வதற்கான முடிவு எடுக்கப்பட வேண்டும். சிசேரியன் செய்து கொண்ட பெண்கள் VBAC-ஐ வெற்றிகரமாக பெறலாம் என்றாலும் கருப்பை சிதைவு உள்ளிட்ட சில அபாயங்கள் உள்ளன. எனவே மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது அவசியம்.
Also Read | பிரசவத்திற்கு பின் தொப்பையை குறைக்க பெல்ட் அணியலாமா..? மருத்துவரின் பதில்..
சிசேரியன் செய்து கொண்ட பெண்கள் குழந்தைக்கு பாலூட்ட உதவும் டிப்ஸ்:
நிபுணர் ப்ருதா பாய் குறிப்பிட்டுள்ள டிப்ஸ்கள் பின்வருமாறு...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.