முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / ட்ரெட்மிலில் நடக்கும்போது செய்ய வேண்டிய மற்றும் செய்ய கூடாத விஷயங்கள்..!

ட்ரெட்மிலில் நடக்கும்போது செய்ய வேண்டிய மற்றும் செய்ய கூடாத விஷயங்கள்..!

 மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி

குறிப்பிட்ட இந்த வீடியோவில் மேற்குவங்க முதல்வர் சேலை உடுத்தி ஒரு சிறிய நாய்க்குட்டியை கைகளில் பிடித்துக் கொண்டு மிதமான வேகத்தில் ட்ரெட்மில்லில் நடப்பதை காணலாம்.

 • Last Updated :
 • Tamil Nadu, India

மேற்கு வங்க முதல்வரான மம்தா பானர்ஜி சமீபத்தில் சோஷியல் மீடியாவில் வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். அந்த வீடியோவில் மம்தா ட்ரெட்மில்லில் நடப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. குறிப்பிட்ட இந்த வீடியோவில் மேற்குவங்க முதல்வர் சேலை உடுத்தி ஒரு சிறிய நாய்க்குட்டியை கைகளில் பிடித்துக் கொண்டு மிதமான வேகத்தில் ட்ரெட்மில்லில் நடப்பதை காணலாம்.

இந்த வீடியோவிற்கு சில நாட்கள் உங்களுக்கு சில கூடுதல் ஊக்கம் தேவை (Somedays you need some extra motivation) என்று கேப்ஷன் கொடுத்துள்ளார். 68 வயதான பிரபல அரசியல்வாதியான மம்தா ட்ரெட்மில்லில் நடப்பது பலருக்கும் ஒர்கவுட் மீதான ஆர்வத்தை அதிகரிக்கும், உந்துதலாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
 
View this post on Instagram

 

A post shared by Mamata Banerjee (@mamataofficial)top videos

  ஆனால் அதே சமயம் ட்ரெட்மில்லில் நடக்கும் போது பின்பற்ற வேண்டியவை மற்றும் செய்ய கூடாதவை பற்றிய கவனத்தை இந்த வீடியோ ஈர்க்கிறது. சரி, ட்ரெட்மில்லில் நடக்கும் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்ய கூடாதவை பற்றி கீழே பார்க்கலாம்.

  ட்ரெட்மில்லில் வாக்கிங் செல்லும் முன் வார்ம்அப் செய்ய மறக்க வேண்டாம். வார்ம்அப் செய்யாமல் ட்ரெட்மில்லில் வாக்கிங் செல்வது தசைகள் மற்றும் தசைநாண்கள் மீது தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே ட்ரெட்மில் செஷனுக்கு முன் வார்ம்அப் செய்வது தொடை எலும்புகள், இடுப்பு தசைகள் போன்ற சில உடல்பகுதிகளில் காயம் ஏற்படும் அபாயத்தை பெருமளவு குறைக்கிறது.
  ட்ரெட்மில்லில் வாக்கிங் செல்லும் போது உங்கள் கவனத்தை சிதற விடாதீர்கள். ட்ரெட்மில்லில் நடக்கும் போது ஏற்படும் கவனக்குறைவு அல்லது கவனச்சிதறல் காரணமாக மெஷினிலிருந்து நீங்கள் தடுமாறி விழ நேரிடலாம். கவனச்சிதறல் காரணமாக ட்ரெட்மில் மெஷினிலிருந்து தூக்கி எறியப்படுவது கால்களில் கடும் காயத்தை ஏற்படுத்தும்.
  ட்ரெட்மில்லில் ஒரே ரன்னிங் பேட்டர்னை பின்பற்றாமல் உங்கள் உடலுக்கு ஏற்ற ஓட்டம் மற்றும் ஜாகிங் போன்றவற்றை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். ஒரு நேரத்தில் ஒரு வகையான ரன்னிங்கில் ஈடுபடுவதை விட, ரன்னிங்கில் வேரியேஷன் செய்வது உங்கள் உடலில் மிகவும் திறம்பட வேலை செய்யும்.
  ட்ரட்மில்லில் நடக்கும் போது பலர் செய்யும் விஷயம் தங்கள் கால்களை கீழே குனிந்து பார்ப்பது. ஆனால் இப்படி செய்வதால் ட்ரட்மில் பயன்படுத்துபவரின் பேலன்ஸ் மற்றும் தோரணை பாதிக்கப்படும். அது போல முகத்தை கீழ்நோக்கி வைத்து கொண்டு ட்ரெட்மில்லில் ஓடுவது உங்கள் ஸ்பைனல் கார்ட்-ஐ பாதிக்க வாய்ப்பு உள்ளது.
  ட்ரட்மில்லை பயன்படுத்தும் போது லாங் ஸ்டெப்ஸ்களை வைக்காமல், கூடுதல் கலோரிகளை எரிக்க உங்களால் முடிந்தவரை குறுகிய ஸ்டெப்ஸ்களை வைத்தே வாக்கிங் அல்லது ரன்னிங் செய்யலாம். லாங் ஸ்டெப்ஸ் எடுத்து வைக்கும் போது உங்கள் தோரணை மற்றும் சமநிலையை பாதிக்கப்படலாம்.
  ட்ரெட்மில்லில் நடக்கும் போது கைகளில் எதையாவது பிடித்துக் கொண்டு நடப்பது அதனால் கிடைக்கும் பலன்களை முழுவதுமாக கிடைக்காமல் செய்துவிடும். ட்ரெட்மில் பயன்படுத்தும் போது உங்கள் கைகள் சரியான நிலையில் மற்றும் தரைக்கு இணையாக (parallel to ground) இருப்பதை உறுதிப்படுத்தவும்.
  First published:

  Tags: Mamta banerjee, Treadmill, Workout