முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / தற்கொலை எண்ணங்களை அதிகரிக்கும் தனிமை… மன நிம்மதியுடன் இருக்க இதை பின்பற்றுங்கள்..!

தற்கொலை எண்ணங்களை அதிகரிக்கும் தனிமை… மன நிம்மதியுடன் இருக்க இதை பின்பற்றுங்கள்..!

தனிமை

தனிமை

பொதுவாக தனிமை பல வழிகளில் வெளிப்படும் எனவும் ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் உடல் ஆரோக்கியம் பாதிக்காமல் தடுக்க முடியும் என கூறப்படுகிறது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஒவ்வொரு மனிதர்களின் உயிரை படிப்படியாக கொல்லும் நோய்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது தனிமை. குடும்பத்துடன் வாழ்ந்து பழகிய சிலருக்கு தீடிரென தனிமையில் வாழும் நிலை ஏற்பட்டால் அவர்கள் படும் வேதனையை வார்த்தைகளால் சொல்ல முடியாது. சிலர் இந்த சூழலைத் தாங்கிக் கொள்வார்கள். அதே சமயம் பலரால் தனிமையை வெல்ல முடியாது. மனசோர்வு, பதட்டம், போதைப் பொருள்களைப் பயன்படுத்துவது தொடங்கி தற்கொலை எண்ணம் வரை கொண்டு செல்லக்கூடிய மனநலப் பிரச்சனைகளில் ஒன்றாக உள்ளது தனிமை என்கிறார் உளவியலாளர் கீர்த்தனா..

மேலும் ஸ்டேடிஸ்டாவில் நவம்பர் 2022 ஆம் வெளியிடப்பட்ட கணக்கெடுப்பின் படி, உலகளவில் 33 சதவீத பெரியவர்கள் தனிமைமைய அனுபவித்துள்ளனர் என்கிறது. குறிப்பாக எட்டு பில்லியனுக்கும் அதிகமான மக்களைக்கொண்ட உலகில் இந்த எண்ணிக்கையானது மிகப்பெரியது. எனவே தான் தனிமையில் ஒருவர் மனக்கவலையுடன் இருந்தால் அவர்களுக்கு உடனடி கவனம் கொடுத்து பார்க்க வேண்டும் என்கின்றனர் உளவியலாளர் கீர்த்தனா.

மன மற்றும் உடல் நலனைப் பாதிக்கும் தனிமையின் அறிகுறிகள்:

பொதுவாக தனிமை பல வழிகளில் வெளிப்படும் எனவும் ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் உடல் ஆரோக்கியம் பாதிக்காமல் தடுக்க முடியும் என கூறப்படுகிறது. தூக்கமின்மைமை, பலவீனமாக நோய் எதிர்ப்பு சக்தி, வேலையில் ஈடுபாடு இல்லாமல் இருப்பது, அதிகப்படியான மனச்சோர்வு , தன்னம்பிக்கை இல்லாதது போன்ற பல அறிகுறிகள் உள்ளது என்கின்றனர். இந்த தனிமை பெரியவர்களுக்குத் தான் வர வேண்டும் என்பதில்லை. இளம் வயதினரும் குறிப்பாக டீன் ஏன் பருவத்தினருக்கும் வரக்கூடிய பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாக உள்ளது தனிமை. சுய மரியாதை இல்லாத உணர்வு, பாதுகாப்பின்மை, போன்ற பல்வேறு சூழல்களில் தனிமையை உணரும் போது எப்படி கையாள வேண்டும் என்பது குறித்து இங்கே விளக்கம் அளிக்கிறார் உளவியலாளர் கீர்த்தனா.

மன நலனை சமாளிப்பது எப்படி?

  • நீங்கள் மிகவும் தனிமையில் உணர்வது போன்ற மனநிலையை உணரும் பட்சத்தில் குடும்பத்தில் உங்களுக்குப் பிடித்த உறவுகள், நண்பர்களிடம் மனதில் உள்ளதை மனம் விட்டு பேசுங்கள். இல்லையென்றால் மனநல ஆலோசகரின் உதவியை நாடுங்கள்.
  • உங்களை எப்போதும் மகிழ்வுடன் வைத்திருக்க பொழுதுபோக்குகளில் ஈடுபடவும்.
  • தனிமையில் இருக்கும் சூழல் இருந்தால் பிறருக்க உதவு செய்வதற்கு முன்வருங்கள்.
  • உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு தொடர்ந்து உடற்பயிற்சி செய்யவும்.
  • அதிகமான நபர்களைச் சந்திக்கவும், சமூகக் குழுக்களின் ஒரு பகுதியாக இருக்கவும், அர்த்தமுள்ள உறவுகளை உருவாக்கவும் முயற்சிக்கவும்

Also Read | வளரும் இளம் பருவத்தினர் சந்திக்கும் சவால்களும்.. அதனை எதிர்கொள்ளும் வழிகளும்.!

இதுப்போன்ற விஷயங்களை உங்களால் பின்பற்ற முடியவில்லை என்றால், மன நல நிபுணரின் ஆலோசனைப் பெறுவது நல்லது. மேலும் பிடித்த கதையை படித்து அதனுடன் பயணத்தை மேற்கொள்ளுங்கள். நிச்சயம் தனிமை உங்களை ஆட்கொள்ள வாய்ப்பில்லை.

First published:

Tags: Depression, Mental Health, Stress