முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / கோடை காலத்தில் லெமன் ஜூஸ் ஏன் முக்கியம் தெரியுமா..?

கோடை காலத்தில் லெமன் ஜூஸ் ஏன் முக்கியம் தெரியுமா..?

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறு

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் இதில் கால்சியம், பொட்டாசியம் மற்றும் ஃபோலேட் ஆகிய சத்துகளும் நிரம்பியுள்ளன.

  • Last Updated :
  • Tamil Nadu, India

வெயில் உச்சத்தில் இருக்கும் நிலையில் உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வது முக்கியம். வெப்பத்தின் தாக்கத்தை குறைக்கும் பொருட்டு, பல்வேறு வகையான பானங்கள் உள்ளன. இதில் எலுமிச்சை சாற்றின் சுவையை மிஞ்ச எதுவுமில்லை. எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் இதில் கால்சியம், பொட்டாசியம் மற்றும் ஃபோலேட் ஆகிய சத்துகளும் நிரம்பியுள்ளன.

ஜீரணத்திற்கு உதவும்

உங்கள் உணவில் எலுமிச்சை சாற்றை சேர்த்துக் கொள்ள வேண்டிய முக்கியக் காரணங்களில் ஒன்று அதன் ஜீரணத்தை அதிகரிக்கும் பண்பு. எலுமிச்சையில் பெக்டின் என்ற நார்ச்சத்து உள்ளது. இது செரிமானத்தை சீராக்க உதவுகிறது.

தொண்டை வலி குணமாகும்

குளிர் பானங்களை அருந்திய பின் இலவச இணைப்பாக தொண்டைவலி ஏற்படும். இதனை சரிசெய்ய எலுமிச்சை சாறு சிறந்த தேர்வாக இருக்கும். வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றை கலந்து குடித்தால் தொண்டை வலி மற்றும் எரிச்சல் பறந்து போகும்.

நீர்ச்சத்தை அதிகரிக்கும்

வெறும் தண்ணீரைக் குடிப்பதற்குப் பதிலாக, நீருடன் எலுமிச்சையை மிக்ஸ் செய்து குடிக்கலாம். இதன் மூலம் நீர்ச்சத்து அதிகரிப்பதோடு, எலுமிச்சையின் மற்ற நன்மைகளையும் பெறலாம்.

வாய்வழி சுகாதாரத்தை மேம்படுத்தும்

எலுமிச்சை சாற்றில் உள்ள வைட்டமின் சி வாய் சுகாதாரத்தை மேம்படுத்தும். ஈறுகள் மற்றும் பற்கள் வலுவாக இருக்க இந்த வைட்டமின் அவசியம். எலுமிச்சை பழச்சாற்றை தொடர்ந்து பருகுவதால் ஈறுகளில் இரத்தப்போக்கு, ஈறு சிவத்தல் அல்லது ஈறுகளில் வீக்கம் போன்ற வாய்வழி பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.

இளமையான தோற்றம் பெறலாம்

ஸ்கின் பராமரிப்பு பொருட்கள் தற்போது வைட்டமின் சி-யின் நன்மைகளை ஹைலைட் செய்து விளம்பரப்படுத்துகின்றன. சீரம் அல்லது ஃபேஸ் மாஸ்க் என எதுவாக இருந்தாலும், அவற்றில் விட்டமின் சி மூலப்பொருளாகக் காணப்படுகிறது. எலுமிச்சை சாறு கொலாஜின் உற்பத்திக்கு உதவுவதோடு, சருமத்தை இளமையாக வைத்திருக்கவும் உதவுகிறது.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Healthy juice, Lemon juice, Summer tips