முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / ஒரு டவல் போதுமாம்.. 10 நாட்களில் தொப்பையை கரைக்க உதவும் ஜப்பானிய டெக்னிக்..! உண்மை என்ன?

ஒரு டவல் போதுமாம்.. 10 நாட்களில் தொப்பையை கரைக்க உதவும் ஜப்பானிய டெக்னிக்..! உண்மை என்ன?

Japanese towel exercise

Japanese towel exercise

உடலின் வேறு எந்த பாகங்களிலும் இருக்கும் கொழுப்பை விட வயிற்றில் இருக்கும் தொப்பையை கரைப்பது நினைப்பதை விட கடினமே. ஆனால் 10 நாட்களுக்குள் அடிவயிற்றை உங்கள் விருப்பப்படி மாற்ற கூடிய ஒரு ஒர்கவுட் இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா..?

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Tamil Nadu, India

உடல் எடையை கட்டுக்குள் வைக்கவும், தொப்பையற்ற நல்ல ஃபிளாட்டான வயிறை பெறவும் யாருக்கு தான் விருப்பம் இருக்காது.!! ஜிம் அல்லது வீட்டில் பல மணிநேரம் வியர்வை மார்பு மற்றும் வயிற்றுப்பகுதியை ஃபிட்டாக வைத்து கொள்வதில் உடற்பயிற்சி ஆர்வலர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதற்காக க்ரஞ்ச்ஸ், சிட்-அப்ஸ் என பலவகை வொர்கவுட்களை முயற்சிக்கிறார்கள்.

ஆனால் அடிவயிற்றில் இருக்கும் கொழுப்பை அவ்வளவு எளிதில் கரைக்க முடியாது. உடலின் வேறு எந்த பாகங்களிலும் இருக்கும் கொழுப்பை விட வயிற்றில் இருக்கும் தொப்பையை கரைப்பது நினைப்பதை விட கடினமே. ஆனால் 10 நாட்களுக்குள் அடிவயிற்றை உங்கள் விருப்பப்படி மாற்ற கூடிய ஒரு ஒர்கவுட் இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா..? ஆனால் உண்மையில் தொப்பையை கரைத்து மற்றும் வயிற்று பகுதியை ஃபிட்டாக வைக்க ஈசியாக உதவுகிறது ஒரு பிரபல ஒர்கவுட். ஆம் இதற்கு ஜாப்னிஸ் டவல் எக்ஸர்சைஸ் என்று பெயர். இந்த வொர்கவுட் வெறும் 10 நாட்களில் விரும்பிய பலனை தரும் என்று சோஷியல் மீடியாவில் ஷேர் செய்யப்படும் போஸ்ட்களில் தகவல் இருக்கிறது. ஆனால் இது உண்மையா..?

இந்த ஜாப்பனிஸ் டவல் ஒர்கவுட்டானது உடலை வடிவமைக்க ஜாப்பனிஸ் ரிஃப்ளெக்சாலஜி மற்றும் மசாஜ் நிபுணர் டாக்டர் தோஷிகி ஃபுகுட்சுட்ஸி என்பவரால் சில ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. இந்த பயிற்சியை தொடர்ந்து செய்வதால் ஒரு நபர் இடுப்பு மற்றும் அடிவயிற்று பகுதியில் குவிந்திருக்கும் கூடுதல் கொழுப்பை இழப்பார். குறிப்பாக இது தொப்பையை குறைக்க, முதுகை வலுப்படுத்தவும், முதுகுவலியை குறைக்கவும் உதவும் என்று கூறி இருக்கிறார் இவர்.

ஜாப்னிஸ் டவல் எக்ஸர்சைஸ் செய்வது எப்படி?

இந்த ஜாப்னிஸ் டவல் எக்ஸர்சைஸை செய்ய ஒரு மேட் மற்றும் டவல் எடுத்து கொள்ள வேண்டும்.

- முதலில் ஒரு மேட்-ஐ விரித்து அதில் கை மற்றும் கால்களை நன்றாக நீட்டி ஸ்ட்ரெச் செய்தபடி படுத்து கொள்ள வேண்டும்.

Also Read :  சளி , இருமல் பிரச்சனைகளிலிருந்து நுரையீரலை பாதுகாக்கும் வழிகள்..!

- ஒரு மீடியம் சைஸ் டவலை எடுத்து கொண்டு அதை சற்று சுருட்டி மடித்து முதுகின் கீழ் பக்கம் இன்னும் சரியாக சொன்னால் தொப்புளுக்கு கீழே இருக்கும்படி கீழே வைக்க வேண்டும்.

- பின் கால்களை தோள்பட்டை அகலத்தில் விரித்து வைத்து, இரு கால்களின் பெருவிரல்கள் ஒன்றையொன்று தொட்டு கொண்டிருக்கும் வகையில் பொசிஷனை மெயின்டைன் செய்யவும்.

- பின் கைகளை தலைக்கு மேலே கொண்டு வந்து உங்கள் உள்ளங்கைகள் தரையை பார்த்தவாறு இருக்குமாறு வைத்து கைகளை நீட்ட வேண்டும்.

- சுமார் 5 நிமிடங்கள் இந்த பொசிஷனில் இருக்க வேண்டும். முடிக்கும் போது சட்டென்று எழுந்து விடாமல் உடலை படிப்படியாக இளையல்பு நிலைக்கு கொண்டு வர வேண்டும்.

Also Read : உடல் எடையை குறைக்க உதவும் மேஜிக் ஸ்மூத்தி... ஒரு கிளாஸில் இவ்வளவு நன்மைகளா..? 

தொடர்ந்து 10 நாட்கள் இந்த டவல் பயிற்சியை செய்தாலே இடுப்பை சுற்றியுள்ள கொழுப்பு மற்றும் தொப்பை வெகுவாக குறையும் என்று கூறப்படுகிறது. இப்பயிற்சியானது இடுப்பு எலும்புகளை சரிசெய்வதன் மூலம் உடல் எடையை விரைவாக குறைக்க உதவும் என்பது டாக்டர் தோஷிகி ஃபுகுட்சுட்ஸியின் வாதமாக இருக்கும் நிலையில், சில நிபுணர்கள் இந்த கூற்றை ஏற்க மறுக்கின்றனர்.

top videos

    உண்மையில் எந்த உடற்பயிற்சியும் இவ்வளவு விரைவான முடிவுகளைத் தர முடியாது, இது ஒருபுறம் இருக்கட்டும். இந்த பயிற்சி உங்கள் தோரணையை மேம்படுத்த, முதுகுவலியை குறைக்க மற்றும் வயிற்றில் உள்ள கொழுப்பை குறைக்க சிறிதளவு மட்டுமே உதவும் என்கிறார்கள் சில அமெரிக்க நிபுணர்கள். இந்த டவல் டெக்னிக் உடல் சீரமைப்பிற்கு குறிப்பிடத்தக்க பயனளிக்குமே தவிர எடை இழப்புக்கு பெரிதாக உதவாது என்கிறார்கள்.

    First published:

    Tags: Belly Fat Reduce, Exercise, Weight loss, Workout