மனித உடல் 70-75 சதவீதம் தண்ணீரால் நிரப்பப்பட்டுள்ளது. அதுதான் நம்மை பல நோய் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கிறது. ஆனால் பலருக்கும் இப்படியொரு கேள்வியும், சந்தேகமும் எப்போதும் எழும். அதாவது பல் துலக்காமல் தண்ணீர் குடிக்கலாமா..? அப்படி குடித்தால் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா..? என்பதுதான். இன்று உங்களுடைய சந்தேகத்திற்கான பதிலை காணலாம்.
பலருக்கும் பல் துலக்குவதற்கு முன் தண்ணீர் குடிக்கக் கூடாது என்பதுதான் நம்பிக்கையாக உள்ளது. காரணம் காலையில் நம் வாய் துர்நாற்றம் வீசும். குறிப்பாக காலையில் எச்சிலில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா இருக்கும் என்பார்கள். ஆனால் இது வெறும் கட்டுக்கதை. இதை நிரூபிக்கும் அறிவியல் பூர்வமான உண்மைகள் இல்லை.
உண்மையில் காலையில் வாயில் சுரக்கும் எச்சிலில் கிருமிகளை அழிக்கக் கூடிய ஆற்றல் உள்ளது. எனவே காலையில் பல் துலக்காமல் தண்ணீர் குடித்தால் தண்ணீருடன் அந்த எச்சில் வயிற்றுக்குள் சென்று கெட்ட பாக்டீரியாக்களை அழித்துவிடும். எனவே நீங்கள் பல் துலக்காமல் தண்ணீர் குடிப்பதால் நன்மையே தவிர ஆபத்து இல்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஜப்பானியர்களும் காலை எழுந்ததும் உடனே 2 கிளாஸ் தண்ணீர் குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதை அவர்களுடைய தினசரி காலைப் பழக்கமாக கடைப்பிடிக்கின்றனர். மருத்துவர்களும் காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் இரண்டு கிளாஸ் தண்ணீர் குடிக்க அறிவுறுத்துகின்றனர். அவ்வாறு குடிப்பதால் உடலில் என்னென்ன நன்மைகள் நடக்கும் என்பதை பார்க்கலாம்.
பல் துலக்காமல் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் :
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் : தினமும் காலை தண்ணீர் குடிப்பது நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்த உதவுகிறது. இதனால் நோய் கிருமிகள், நோய் தொற்றுகளிலிருந்து போராட உதவுகிறது.
குடல் இயக்கம் சுத்தீகரிக்கப்படும் : நீங்கள் காலை எழுந்ததும் 2 கிளாஸ் தண்ணீர் குடிக்க உடனே சிறுநீர் கழிக்க தோன்றும். இதனால் உங்களின் குடல் சுத்தமாகும். மலச்சிக்கல் பிரச்சனையும் இருக்காது.
Also Read : இரவு தூங்க செல்லும் முன் பால் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் 9 நன்மைகள்..!
வளர்ச்சிதை மாற்றம் அதிகரிக்கும் : நீங்கள் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கும்போது செரிமானம் வேகமாக நடக்கும். அதேசமயம் வளர்ச்சிதை மாற்றமும் அதிகரிக்கும். அதோடு நாள் முழுவதும் நீர்ச்சத்து குறையாமல் இருக்கும்.
தலைவலி, ஒற்றை தலைவலி பிரச்சனை இருப்பின் அதை குறைக்க உதவும். பெருங்குடல் தொற்று இருப்பின் அதை சீராக்கும். காரணம் உங்கள் குடல் சுத்தம் செய்யப்பட்டு சீராக இயங்கும்போது பெருங்குடல் வேலையும் எளிதாகிவிடும்.
உடல் எடை குறைக்க உதவும் : நீங்கள் தினமும் காலை தண்ணீர் குடிக்க மிதமான அளவில் உங்கள் உடல் எடை குறைவதை கவனிக்கலாம். வளர்ச்சிதை மாற்றம் அதிகரித்து, செரிமானம் சீராக இயங்கும்போது உடல் எடை குறைவதும் தானாக நிகழும்.
சருமத்திற்கு நல்லது : உங்கள் சருமத்தை எப்போதும் ஃபிரெஷாக வைத்துக்கொள்ள உதவும். உடலின் தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றி, சரும செல்களுக்கு தேவையான நீர் சரியான நேரத்தில் கிடைப்பதால் சருமம் எப்போதும் புத்துணர்வு பெற்றிருக்கும். உடல் நீரேற்றமும் சீராக இருக்கும் என்பதால் சருமப் பொலிவிழப்பு என்கிற பேச்சுக்கே இடமிருக்காது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Drinking water, Empty stomach, Teeth