முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு எப்படி உதவுவது..? முதலுதவி டிப்ஸ்..!

வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு எப்படி உதவுவது..? முதலுதவி டிப்ஸ்..!

வலிப்பு நோய்

வலிப்பு நோய்

இந்த அறிகுறிகள் 5 நிமிடங்களுக்கு மேல் நீடிப்பதை நீங்கள் கண்டால், பின்வரும் அறிகுறிகளின் அடிப்படையில் நீங்கள் ஆம்புலன்ஸ் அழைக்கலாம்

 • Last Updated :
 • Tamil Nadu, India

வலிப்பு நோய் என்பது ஒரு நரம்பியல் கோளாறு ஆகும். பொதுவாக உடல் செல்கள் மூலம் செய்திகளை அனுப்பும்போது, நமது மூளையின் செயல்பாட்டைத் தடுக்கிறது.

வலிப்பு நோய் ஏற்படும் பொழுது கை கால்கள் வெட்டி இழுக்கும் உடலில் இருக்கும் செல்களின் வழியாக மூளைக்கு அனுப்பப்படும் செய்தி தரப்படும் கை கால்கள் வெட்டி இருப்பது என்பது ஒரு சில நிமிடங்கள் கணிசமான நேரம் வரை சில நேரங்களில் வலிப்பு நோய் தீவிரமான தாக்கத்தை உண்டாக்கும். வலிப்பு எப்பொழுதும் அவசரமாக நிலையாக இருக்காது, ஆனால் இது 5 நிமிடங்களுக்கு மேல் நீடித்தால், அந்த நபருக்கு மருத்துவ உதவி தேவைப்படலாம்.

எனவே, வலிப்பு நோயாளிக்கு ஏற்படும் அபாயத்தைத் தடுக்க, மருத்துவ உதவி கிடைக்கும் முன், மக்கள் உடனடியாக எடுக்கக்கூடிய முக்கியமான முதலுதவி நடவடிக்கைகளை அறிந்து கொள்ள வேண்டும்.

வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு எப்படி உதவுவது?

வலிப்பு நோயாளிக்கு உயிரிழப்பு ஏற்படுவதைத் தடுக்க, நீங்கள் பின்வரும் உதவிகளைச் செய்யலாம்..

 • நோயாளி சரியாக சுவாசிக்க காற்றோட்டமான திறந்தவெளி இருப்பதை உறுதி செய்ய வேண்டும்
 • கழுத்தில் உள்ள இறுக்கமான ஆடைகளைத் தளர்த்துவதன் மூலம், பாதிக்கப்பட்ட நபரை வசதியாக உணரச் செய்யுங்கள்.
 • காயத்தை ஏற்படுத்தக்கூடிய கண்ணாடி உள்ளிட்ட கூர்மையான பொருட்களை அகற்றவும்.
 • வலிப்பு நிற்கும் வரை அந்த நபருடன் இருந்து, நோயாளிகள் தங்களைக் காயப்படுத்திக் கொள்வதைத் தடுக்க அவர்களுக்குக் கீழே ஒரு தலையணை அல்லது துண்டை வைக்கவும்.
 • வலிப்பு ஏற்பட்ட நேரத்தைக் கண்காணித்து, மருத்துவரிடம் விவரங்களைப் பகிரவும். வழக்கமான வலிப்பு 20 வினாடிகள் முதல் 2 நிமிடங்கள் வரை நீடிக்கும்
 • பாதிக்கப்பட்டவரிடம் அவரது குடும்பத்தினர் அல்லது நண்பர்களைத் குடும்ப உறுப்பினர்களை தொடர்பு கொள்ள அவசரகால தொடர்புகளை தேடவும்.
 • அந்த நபரின் தாடைகளுக்கு இடையில் எதையும் வைப்பதையோ அல்லது அவர்கள் முழுமையாக குணமடையும் வரை குடிப்பதற்கு எதையும் கொடுப்பதையோ தவிர்க்கவும்.

பாதிக்கப்பட்டவரிடம் வலிப்பு இயக்கங்கள் நின்றவுடன் அவரை ஒரு பக்கமாக திருப்பி படுக்க வைப்பதன் மூலம் சுவாசப்பாதையை சீராக்க முயற்சிக்கவும். வலிப்பு தாக்கத்தின் போது நோயாளியின் நாக்கு பின்னோக்கி சென்று, அவர்களின் சுவாசத்தைத் தடுக்கும் என்பதால் இது மிகவும் முக்கியமானது.

எப்போது மருத்துவரை அழைக்க வேண்டும்?

வலிப்பு தாக்கத்தின் அறிகுறிகள் லேசானது முதல் கடுமையானது வரை இருக்கலாம். இருப்பினும், இந்த அறிகுறிகள் ஓரிரு நிமிடங்களில் மறைந்துவிடும். இந்த அறிகுறிகள் 5 நிமிடங்களுக்கு மேல் நீடிப்பதை நீங்கள் கண்டால், பின்வரும் அறிகுறிகளின் அடிப்படையில் நீங்கள் ஆம்புலன்ஸ் அழைக்கலாம்

 • நோயாளிக்கு இரண்டாவது வலிப்பு ஏற்பட்டால்
 • வலிப்பு நின்ற பிறகு அவர் கண்விழிக்கவில்லை என்றால்
 • தாக்கத்திற்குப் பிறகு நோயாளிக்கு அதிக காய்ச்சல் அல்லது தீவிரமான சோர்வு இருந்தால்

Also Read | வலிப்பு நோயைப் பற்றி நம்மில் எத்தனைக்கு பேருக்கு தெரியும் ?

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது கர்ப்பிணிப் பெண்கள் போன்ற பிற மருத்துவ ரீதியான பராமரிப்பு தேவைப்படும் நிலைமைகளில் உள்ளவர்கள் அதிகமாக பாதிக்கபப்டலாம். அத்தகைய நோயாளியை நீங்கள் கண்டால், நீங்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

First published:

Tags: Epilepsy, Fits Disease, Health