ஒருவருடைய கொலஸ்ட்ரால் அளவை நன்மையாக்குவதும் , தீமையாக்குவதும் அவரவர் உணவு முறையே தீர்மானிக்கிறது. அந்த வகையில் ஒருவர் தன்னுடைய கொலஸ்ட்ரால் அளவை சீராக பராமரித்தால் இதய நோய், பக்கவாதம், மாரடைப்பு போன்ற அபாயகரமான நோய்களை தவிர்க்கலாம். கொலஸ்ட்ரால் என்பது வேக்ஸ் மூலக்கூறு ஆகும். இது குறைந்த அடர்த்தி கொண்ட லிப்போ புரோட்டீன் (low-density lipoprotein (LDL)) மற்றும் உயர் அடர்த்தி கொண்ட லிப்போ புரோட்டீன் (high-density lipoprotein (HDL)) என்ற இரண்டு லிப்போ புரோட்டீன் சுழற்சிகளின் கலவையாக உள்ளது.
குறைந்த அடர்த்தி கொண்ட லிப்போ புரோட்டீன் எனப்படும் LDL கொழுப்பானது கெட்ட கொலஸ்ட்ரால் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் இது கெட்ட கொழுப்பை இரத்த நாளங்களில் படிய வைக்கிறது. அவ்வாறு படியும் கொழுப்பு சீரான இரத்த ஓட்டத்தை தடுக்கிறது. இதன் விளைவாகவே மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்பட காரணமாக அமைகிறது. நல்ல கொழுப்பு என்று அழைக்கப்படும் HDL கொலஸ்ட்ரால் கல்லீரல் மூலமாக வெளியேற்றப்படுகிறது. நல்ல கொலஸ்ட்ரால் அளவை சீராக மேம்படுத்தினால் இதய நோய் பாதிப்புகளிலிருந்து தப்பிக்கலாம்.
கெட்ட கொழுப்பை உணவு மூலம் எப்படி குறைக்கலாம்..?
- கரையக் கூடிய நார்ச்சத்து உணவுகளை தினமும் தவறாமல் சாப்பிட உறுதி செய்ய வேண்டும். கரையக் கூடிய நார்ச்சத்து என்பது நீர்ச்சத்து கொண்ட உணவுகளாகும். இவை எளிதில் கொழுப்பை கரைத்து வெளியேற்ற உதவும்.
- நிறைவுற்ற கொழுப்பு உணவுகள் சாப்பிடுவதை குறைக்கலாம் அல்லது முற்றிலும் தவிர்த்தல் நல்லது. இறைச்சி மற்றும் பால் வகை உணவுகளில் நிறைவுற்ற கொழுப்புகள் இருக்கும். இது கெட்ட கொழுப்பின் அளவை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
Also Read : இதய நோய்களைத் தவிர்க்க சமையல் முறையில் செய்ய வேண்டிய மாற்றங்கள்
- ட்ரான்ஸ் கொழுப்பு நிறைந்த உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. அதாவது வறுத்த, எண்ணெயில் பொறிக்கும் உணவுகளை தவிர்ப்பது நல்லது.
- ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது. அதாவது காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், புரதச்சத்து உணவுகள், குறைந்த கொழுப்பு கொண்ட உணவுகள் போன்றவற்றை சம அளவில் உட்கொள்ள வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bad Cholesterol, Cholesterol, Good Cholesterol, High Cholesterol Symptoms