நம் உடல் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பது என்பது முதலில் நாம் எடுத்து கொள்ளும் உணவுகளை பொறுத்தது, இரண்டாது நாம் தினசரி செய்யும் உடற்பயிற்சி அல்லது உடல் செயல்பாடுகளின் அளவை பொறுத்தது. இவை இரண்டையும் போல நாம் ஆரோக்கியமாக இருக்க முக்கியமாக நமக்கு தேவைப்படும் ஒன்று நிம்மதியான தூக்கம்.
உடலில் இருக்கும் அதிகப்படியான கலோரிகளை வெளியேற்ற நல்ல வளர்சிதை மாற்றம், ஒர்கவுட் பிளான், ஆரோக்கியமான டயட் மற்றும் போதுமான ஓய்வு போன்ற சில அத்தியாவசிய விஷயங்கள் தேவை. பலரும் வேலை நிமித்தமாக பணியிடத்தில் நைட் ஷிஃப்ட்டில் வேலை செய்து வருகிறார்கள், நீங்களும் இவர்களில் ஒருவர் என்றால் எடை அதிகமாக இருக்கிறீர்கள் என்ற கவலையில் இருந்தால் அதற்கான தீர்வை இங்கே பார்க்கலாம்.
நைட் ஷிஃப்ட் வேலை பார்த்தாலும் கூட உங்கள் எடை இழப்பு இலக்குகளை அடைய நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய விஷயங்களின் பட்டியல் இங்கே:
பிரபல ஊட்டச்சத்து நிபுணரான அஞ்சலி முகர்ஜி தனது லேட்டஸ்ட் இன்ஸ்டா போஸ்ட்டில், "இரவு நேர ஷிஃப்ட்டில் வேலை பார்ப்பது ஒருவரின் உடல்நலனை இயற்கையாகவே மிகவும் சீர்குலைக்கும் மற்றும் சில தீவிர ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படும் அபாயத்தை ஏற்படுத்தும். எனினும், நைட் ஷிஃப்ட்டில் வேலை செய்வதால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்த்து போராட சில பயனுள்ள வழிகள் உள்ளன" என்று கூறி உள்ளார்.
ஆபத்துகள்:
நைட் ஷிஃப்ட்களில் வேலை செய்வது நமது ஸ்லீப்-வேக் சுழற்சிகளைக் கட்டுப்படுத்தும் நமது 24 மணிநேர இன்டர்னல் கிளாக்-ஐ சீர்குலைக்கிறது. நைட் ஷிஃப்ட்டில் வேலை பார்க்கும் பல ஊழியர்கள் லேட் நைட்டில் சாப்பிடுவார்கள். இப்படி இவர்கள் சாப்பிடுவம் பழக்கம் கார்போஹைட்ரேட்டுகளை ப்ராசஸ் செய்யும் அவர்களுடைய உடலின் திறனில் பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதனால் நைட் ஷிஃப்ட் ஊழியர்களுக்கு நீரிழிவு மற்றும் இதய நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. இது தவிர மற்றொரு ஆபத்தை என்று பார்த்தால் சீரற்ற நேரத்தில் தூங்குவது மற்றும் குறைவான நேரமே தூங்குவது போன்ற பழக்கங்களால் ஏற்படும் உடல் பருமன் ஆகும். இது கடைசியில் ஹார்மோன் உற்பத்தியில் ஏற்றத்தாழ்வு ஏற்பட வழிவகுக்கிறது.
நைட் ஷிஃப்ட்களில் வேலை பார்ப்பதால் ஏற்படும் மேற்கண்டது போன்ற எதிர்மறை விளைவுகளை எதிர்த்து போராட உதவும் சில டிப்ஸ்களை ஊட்டச்சத்து நிபுணரான அஞ்சலி முகர்ஜி ஷேர் செய்து இருக்கிறார்.
Also Read | நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்வோருக்குக் காத்திருக்கும் ஆபத்துக்கள்
நைட் ஷிஃப்ட் வேலையில் இருப்பவர்கள் மேற்காணும் இந்த டிப்ஸ்களை பின்பற்றினால் உடல் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்து கொள்வதோடு, தங்களது உடல் எடையையும் சிறப்பாக நிர்வகிக்கலாம் என்கிறார் அஞ்சலி முகர்ஜி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Diet tips, Health tips, Night Shift Work