கர்ப்பிணிகள் என்றாலே, வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் சேர்த்து சாப்பிட வேண்டும் என்று கூறப்படும் பொதுவான ஆலோசனையாகும். இது கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் சரியான எடையை அடைய உதவுவதோடு, கருவில் உள்ள குழந்தைக்கு முழுமையான ஊட்டச்சத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இருப்பினும், இருவருக்கு சாப்பிடும் அளவுக்கு சாப்பிடுவது, பெரும்பாலும் கர்ப்பிணிப் பெண்களிடையே அதிக எடை அதிகரிப்பதற்கு வழிவகுக்கிறது மற்றும் உடல் பருமன் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.
உடல் பருமன் என்றால் என்ன?
உடல் பருமன் (obesity) என்பது ஒரு சிக்கலான கோளாறு ஆகும், இது உங்கள் உடலில் அதிகப்படியான கொழுப்பை உருவாக்க வழிவகுக்கிறது. இது ஒருவரின் பாடி மாஸ் இண்டெக்ஸ் (பிஎம்ஐ) அடிப்படையில் அளவிடப்படுகிறது. பொதுவாக, பிஎம்ஐ 25 முதல் 29.8 வரை உள்ளவர்கள் அதிக எடை கொண்டவர்களாகக் கருதப்படுகிறார்கள், அதேசமயம் பிஎம்ஐ 30 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் பருமனாகக் கருதப்படுகிறார்கள்.
உடல் பருமன் மூன்று நிலைகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது :
1. டைப் I உடல் பருமன்: பிஎம்ஐ 30–34.9
2. டைப் II உடல் பருமன்: பிஎம்ஐ 35–39.9
3. டைப் III உடல் பருமன்: பிஎம்ஐ 40 அல்லது அதற்கு மேல்.
உடல் பருமன் உங்கள் கர்ப்பத்தை எப்படி பாதிக்கும்?
கர்ப்ப காலத்தில் உடல் பருமனாவது தாய்மார்கள் அடிக்கடி எதிர்கொள்ளும் பொதுவான உடல்நலப் பிரச்சினைகளில் ஒன்றாகும். ஏனெனில் இது கர்ப்ப காலத்தில் பல்வேறு சிக்கல்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. பொதுவாக, பிஎம்ஐ அதிகமாக இருக்கும் பெண்கள் உடல் பருமன் காரணமாக பின்வரும் உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள்.
1. கர்ப்பகாலத்தில் உயர் இரத்த அழுத்தம்: இது கர்ப்பத்தின் இரண்டாவது மூன்று மாதங்களில் உருவாகும் உயர் இரத்த அழுத்தம் என வரையறுக்கப்படுகிறது மற்றும் கர்ப்ப காலம் முழுவதும் மற்றும் பிரசவ நேரத்தில் மிகவும் கடுமையான உடல்நல சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது
Also Read : கர்ப்பகாலத்தில் பெண்களின் மூக்கில் மாற்றம் உண்டாகுமா..? மருத்துவர்கள் தரும் விளக்கம்..!
2. ப்ரீ-எக்லாம்ப்சியா: இந்த மிகவும் கடுமையான கர்ப்பகால பிளட் பிரஷரை, கர்ப்பத்தின் இரண்டாம் பாதியில் அல்லது பிரசவத்திற்குப் பிறகு உருவாகிறது. இதனால், உடல் பருமனான பெண்கள் பெரும்பாலும் கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பு மற்றும் சில நேரங்களில் வலிப்பு, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட தீவிரமான பிரச்சனைகள் போன்றவை ஏற்படலாம். கருவின் வளர்ச்சி மற்றும் நஞ்சுக்கொடியில் உள்ள சிக்கல்கள் ஆகியவை அடங்கும்.
3. மேக்ரோசோமியா: இந்த நிலையில், கரு வழக்கத்தை விட பெரிதாக வளரும், இதன் விளைவாக பிரசவத்தின் போது காயங்கள் ஏற்படும்.
4. கர்ப்பகால நீரிழிவு: கர்ப்ப காலத்தில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பது பெரும்பாலும் குழந்தைகளை சாதாரண அளவை விட பெரிதாக வளரும் படி செய்கிறது. இதன் காரணமாக பல தாய்மார்களும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும். கர்ப்பகாலத்தில் நீரிழிவு கண்டறியப்பட்ட பெண்களுக்கு, அதற்கு பிறகு நீரிழிவு நோய் உருவாகும் அபாயம் உள்ளது, இது குழந்தைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
5. தூக்கத்தில் மூச்சுத்திணறல்: இந்த நிலையில், ஒரு நபர் தூங்கும் போது மற்றும் கர்ப்ப காலத்தில் வயிறு பெரிதாவதால் மூச்சுத்திணறல் ஏற்படும்; தடைப்பட்ட தூக்கம் அதாவது, ஸ்லீப் அப்னியா பெண்களை மிகவும் சோர்வடையச் செய்யலாம். மேலும், ப்ரீ-இக்லாம்ப்சியா, உயர் இரத்த அழுத்தம், இதயம் மற்றும் நுரையீரல் பிரச்சினைகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.
6. பிறப்புக் குறைபாடுகள்: பருமனான கர்ப்பிணிப் பெண்களுக்கு நரம்புக் குழாய் குறைபாடுகள் மற்றும் இதய ரீதியான குறைபாடுகள் போன்ற பிறப்புக் குறைபாடுகள் உள்ள குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளது.
ஆரோக்கியமான கர்ப்பத்தை எவ்வாறு உறுதி செய்வது?
உடல் பருமனால் ஒரு சில ஆபத்துகள் இருந்தபோதிலும், பருமனான பெண்கள் ஆரோக்கியமான குழந்தையைப் பெறலாம்.
Also Read : கோடை சீசனில் ஒவ்வொரு கர்ப்பிணி பெண்ணின் டயட்டிலும் கட்டாயம் இருக்க வேண்டிய உணவுகள்.!
கடைசியாக, உங்கள் மகப்பேறு மருத்துவருடன் குறிப்பிட்ட கால இடைவெளியில் செக்-அப், ஆலோசனை, உடல் பருமனால் ஏற்படும் கர்ப்ப கால அபாயங்களைக் குறைக்கலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.