மா மரத்தின் இலைகள் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதோடு, சர்க்கரையின் அளவையும் குறைக்க உதவும் என்பது உங்களுக்குத் தெரியுமா? அது எப்படி என்பதை அறிந்து கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.
உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்றாடம் சாதாரண வாழ்க்கையை வாழ்வது என்பதே மிகப்பெரிய சவாலாக மாறிவிடுகிறது. உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, வாழ்க்கை முறை என அனைத்தையும் ஒரு வட்டத்திற்குள் கொண்டு வர கட்டாயத்திற்கு சர்க்கரை நோயாளிகள் ஆளாகின்றனர். குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதால், நீண்ட தூர பயணம், சுற்றுலா போன்றவற்றை தவிர்க்க வேண்டிய நிலை உருவாகிறது.
இப்படி வாட்டி வதைக்கும் நீரழிவு நோயைக் கட்டுப்படுத்தி, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவும் அரிய வகை பொருளாக மா இலை விளங்குவது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் பழங்களின் ராஜா என அழைக்கப்படும் மாம்பழத்தில் சர்க்கரையின் அளவு அதிகம் இருப்பதால், அதனை நீரழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடாத பழமாக உள்ளது. அப்படியிருக்கையில் அதன் இலையில் சர்க்கரையை கட்டுப்படுத்தக்கூடிய அற்புத ஆற்றல் இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா?. ஆம், உண்மையிலேயே மா இலைகளில் நீரிழிவு நோயை சிறப்பாக கட்டுப்படுத்துகிறது, சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
சர்க்கரை நோய்க்கான உணவு முறையில் மா இலையை சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்:
மா இலைகள் புதியதாக இருக்கும்போது அவை சிவப்பு அல்லது ஊதா நிறத்தில் இருக்கும், ஆனால் அவை முற்றிய இலையாக மாறும் போது, அவை வெளிறிய அடிப்பகுதியுடன் அடர் பச்சை நிறமாக மாறும். இந்த இலைகளில் ஃபிளாவனாய்டுகள் மற்றும் ஃபீனால் அதிகமாக உள்ளது மற்றும் வலுவான ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன. அவற்றை பொடியாகவோ அல்லது கசாயமாகவோ எடுத்துக் கொள்ளலாம்.
Also Read : அடிக்கடி குதிகால் வலியால் அவதிப்படுகிறீர்களா..? இந்த வீட்டு வைத்தியங்களை செஞ்சு பாருங்க..!
இளம் மா இலைகளை வறுத்து பச்சையாக உண்ணும் பழக்கம் தென்கிழக்கு ஆசியாவில் பின்பற்றப்படுகிறது. ஏனென்றால் இதில் உள்ள ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள் சர்க்கரை நோய் மற்றும் பிற நோய்களுக்காக அங்கு பயன்படுத்தப்படுகிறது.
துளசி இலைகளை ஏன் முழுவதுமாக மென்று சாப்பிட கூடாது..? அறிவியல் காரணம் இதுதான்..!
மா இலைகளுக்கு இன்சுலின் தொகுப்பு மற்றும் குளுக்கோஸ் விநியோகத்தை அதிகரிக்கும் திறன் உள்ளது. அவை இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். மா இலைகளில் பெக்டின், வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இவற்றை ஒன்றாக எடுத்துக் கொண்டால் நீரிழிவு மற்றும் கொலஸ்ட்ரால் ஆகிய இரண்டிற்கும் நல்லது.
நீரிழிவு நோய்க்கு மா இலைகளைப் பயன்படுத்த எளிதான வழிகள் :
- 10-15 மா இலைகளை மென்மையாகும் வரை தண்ணீரில் கொதிக்க வைக்கவும்.
- இலைகள் முழுவதுமாக கொதித்த பிறகு அதனை இரவு முழுவதும் குளிர்விக்கவும்.
- அந்த தண்ணீரை வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும்.
இந்த கலவையை சில மாதங்களுக்கு தினமும் காலையில் குடித்து வந்தால், உங்கள் இரத்த சர்க்கரை அளவுகளில் மாற்றம் ஏற்படுவதை நீங்கள் கண்கூடாக பார்க்கலாம். மேலும் காலையில் வெறும் வயிற்றில் மா இலைகளை மென்று சாப்பிடுவதும் நல்லது. இருப்பினும், காய்ச்சி வடிகட்டிய நீர் நல்ல பலன்களை கொடுக்க கூடும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Diabetes, Diabetes symptoms, Mango leaves